(Reading time: 29 - 58 minutes)

ஸ்ட் எப்பவும் பிஸிகல் அட்ராக்ஷனாத்தான் ஆராம்பிக்கும்னு இல்லை…..ரொம்ப நியாயவாதின்னு தன்னை தானே நினச்சுட்டு இருக்ற நிறைய பேர், தன்னை மாதிரி ஒத்த கருத்து உள்ளவங்க மேல வர்ற அட்ராக்க்ஷன்ல இருந்து…...இவங்க சிந்தனைலாம் ரொம்ப உயர்வா இருக்கு, இவங்கட்ட பேசிகிட்டு இருக்க எனக்கு பிடிச்சுறுக்குன்ற மாதிரி வர்ற  ஈர்ப்பு வரை எல்லாத்தையும் காதல்னு தப்பா புரிஞ்சுகிறாங்களே அது கூட இந்த லஸ்ட்தான்…

அங்க செக்க்ஷுவல் அட்ராக்க்ஷன் ஆரம்ப புள்ளியா இல்லாத போது அது நியாயமான காதல்னு தோணிடுது அவங்களுக்கு…. அப்டி போனதுதான் என் அம்மா கதை… இன்டலெக்சுவல் இடியட்…

என் அப்பா, நான், என் அண்ணா…..அந்த போனாங்களே அவரோட வைஃப் பிள்ளைங்கன்னு யாரைப் பத்தியும் அவங்க ரெண்டு பேராலயும்  அக்கறைப் பட முடியலை…. விட்டுட்டுப் போய்ட்டு அவங்க ரெண்டு பேரால மட்டும் கடைசி வரை எந்த உறுத்தலும் இல்லாம சந்தோஷமா இருக்க முடியுமா என்ன….. இன்ஃபேக்ட் அவர் ஃபோர் மந்த்ஸ்ல சூசைட் செய்துட்டு செத்துட்டதா கேள்வி…….அம்மா அடுத்து என்ன ஆனாங்கன்னு எந்த நியூஸும் கிடையாது….ஆக அவங்களுக்கு தன் மேலயும் அக்கறை இல்லை..…ஒருத்தர் மேல ஒருத்தருக்கும் கன்சர்ன் இல்லை…. தன்னை சுத்தி இருந்த எங்க மேலயும் எதுவும் இல்லை….அந்த அளவு அடிப்படை அன்பை கூட கொன்னுட்டு போறது  இம்மொராலிடி…. 

அவங்க இரண்டு பேரும் தனிமைல அனுபவிக்கப் போற அந்த நேர இச்சையை மட்டும் முக்கியமா நினைச்சு போய்ட்டாங்க…. என்னதான் அதுலாம் எங்க நோக்கம் இல்லை… அதையும் தாண்டினது இதுன்னு அவங்க சொல்லிக்கிட்டாலும்..…அவங்க இப்டி ரெண்டு குடும்பத்தை அழிச்சுட்டு போய் தேடிக்கிற தனிமைல கிடைக்கப் போறது அதை தவிர வேற என்னதாம்? காமம்ங்கிறத தவிர எல்லாமே நல்ல நட்பிலயே கிடைக்குமே…. இவங்க செஞ்சதுல எங்க இருக்கு அன்பு…?

அதே கேட்டகிரிதான் வர்ஷனும்…. கண்டிப்பா பிஸிகல் அட்ராக்க்ஷன் முதல் ரீஸனா இருக்காது. பட் வேற ஏதாவது காரணமா இருக்கும்….அதனால அது என்னமோ உன்னதமானதா கூட தோணி இருக்கும்…. என் அம்மா செய்ததுக்கும் வர்ஷன் செய்ததுக்கும் எனக்கு வித்யாசம் தோணலை….” தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த அத்தனையும் கொட்டித் தீர்த்த விஜிலா….கண்களை மூடி நெற்றியை தன் கையால்  அழுத்தியபடி தன்னை சமனம் செய்ய முயல…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் கையைப் மெல்ல பற்றி….அதனால் திறந்த அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி

“பெரியத்தான இப்பதான் மித்ரன் மாதிரின்னு நினச்சேன்னு சொன்னீங்க….” என்றாள் மனோ அமைதியாக…. ‘உங்க அம்மா மாதிரின்னு ஏன் நினைக்கனும் என்பது அதன் உட்பொருள்…’

 தவிப்பு  தடம் தடமாய் பாய்ந்த கண்களுடன் விஜிலா மனோவை இப்போது ஒரு ஏக்கமோடு பார்க்க…. “குறஞ்ச பட்சம் நாம பெரியத்தான மீட் பண்ணி அவங்கட்ட விளக்கம் கேட்கிற வரைக்குமாவது அப்டி யோசிங்க….அவங்கட்ட நேர்ல பேசுன பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்….” என ‘அப்பவும் நீங்க தனியா இல்லை நான் உங்க கூட இருக்கேன்’ என்று தோன்றும் வண்ணம் சொல்லி வைத்தவள்

“அவங்க தான்…..” என ஏதோ சொல்ல வந்த விஜிலாவை….

“நான் உங்க இடத்துல இருந்தா அதை தான் செய்வேன்…” என்ற வார்த்தைகளில் மறு வார்த்தை பேசாமல்  தலையை மட்டுமாய் ஆட்ட வைத்தாள்.

“இப்போதைக்கு டெலிவரிக்காக உங்க பிறந்த வீட்டுக்கு வந்திருக்கீங்க அப்டின்னு மட்டும் யோசிங்க….” மனோவின் வார்த்தைகளில்…. கீற்றாய் ஒரு புன்னகை விஜிலாவிடம்.

“ குட்டி பையன அவங்கட்ட விட்டுட்டு வந்தேன்….போய் பார்க்கிறேன்….” என இப்போதுதான் அந்த முக்கிய விஷயம் நியாபகம் வந்தவளாக மனோ எழுந்து ஓட….விஜிலாவுமே அவளை தொடர்ந்து இறங்கி  வந்தாள்.

வர்கள் இறங்கி வரும் போது வீட்டின் டைனிங் டேபிளில் குழந்தையின் பெட் போடப்பட்டு அதில் ஃபேனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி குட்டிப் பையன்.

அருகில்  மனோ அப்பா சேரில் அமர்ந்து ஒரு நோட் பேடில் எதையோ சீரியஸாக பார்த்துக் கால்குலேட் செய்து கொண்டிருக்க….

அதை ஒட்டி இருந்த கிட்சனில் “இது ரொம்பவே க்ரிஸ்பியா நல்லா இருக்கு ஆன்டி…. அங்க உள்ள ரெசிபி டிஃபெரெண்ட்டா இருக்கும்….” என மனோ அம்மாவிடம் அப்போதுதான் சமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ப்ரான் பத்தி கருத்து சொல்லிக் கொண்டிருந்த மித்ரன்

“என்ன அங்கிள் …. கேஸை சால்வ் செய்துட்டீங்களா…?” என்றபடி டைனிங் ரூமிக்கு வந்தான்.

“அப்டித்தான் நினைக்கிறேன்….மூனு மோடிவ் தோணுது…. இது சால்வ்ட் கேஸ்னுதான சொன்னீங்க….என் கெஸ் சரியான்னு சொல்லுங்க….” என அப்பா இப்போது தன் கையிலிருந்த நோட்பேடை மித்ரனிடம் கொடுக்க,

அப்பாவுக்கு பஸில் சால்விங் ரொம்ப இஷ்டம்…..அதுக்கு எதோ பழைய கேசை கொடுத்திறுக்கிறான் என புரிகிறது மனோவுக்கு….

தன் மாமனாரின் கையிலிருந்து நோட்பேடை வாங்கியபடி மித்ரனோ, குழந்தை முகத்திற்கு நேராக விரலால் சொடக்கிட்டு….” சேம்ப்…. ஃபேன் ரிசர்ச முடிச்சீங்களா?... ரிப்போர்ட்ட எப்ப சப்மிட் செய்ய போறீங்களாம்….?” என குழந்தையை கொஞ்சும் தொனியில் தலையை ஆட்டி ஆட்டி கேட்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.