(Reading time: 29 - 58 minutes)

பின் மிக சோர்வாக “அப்டிலாம் இருக்க சான்ஸே இல்ல மனோ……. இதெல்லாம் அவங்களா பேசினதுதான்….  அவங்க எங்க இருந்தாலும் அவங்களா விரும்பிதான் போயிருக்காங்க….. கிளம்புறப்ப ஏர்போர்ட் வரை நானும் போய்ட்டுதானே வந்தேன்…. தனியாதான் போனாங்க…. யாரும் கடத்திட்டுலாம் போகலை….

அடுத்தும் முதல்லலாம் என்ட்ட ரெகுலரா பேசிடுவாங்க…..யாராவது அவங்களை பிடிச்சு வச்சிறுந்தாங்கன்னா அவங்கள இப்டியா பேச விடுவாங்க…? அதோட எனக்கு தெரிஞ்ச வரை பயோசி, நேஷன் க்ரூப்ஸ்லன்னு வேலையும் ரெகுலரா மூவ் ஆகிட்டு இருந்துச்சு….தன் வேலை எதையும் மிஸ் செய்யாம செய்து கொடுத்துட்டு இருந்தாங்களே அவங்க….” யோசிக்க யோசிக்க வர்ஷன் மீது வந்திருந்த நம்பிக்கை மீண்டும் புள்ளியாய் சிறுத்துப் போனது அவன் மனைவிக்கு…

“ஒரு வேளை அந்த உயிலை வச்சு நீ யோசிச்சன்னா கூட…..அவங்களை மிரட்டி என்னை பிரிய வச்சுறுந்தா…..அவங்க வெளிய வரவும் என்னை தேடிவந்து விஷயம் சொல்லி சேர்த்துப்பாங்க தானே வர்ஷன்…..அதுல அந்த மாசிரன் க்ரூப்க்கு என்ன ப்ரயோஜனம்…..?” விஜிலா விளக்கம் தேடி இவளைப் பார்க்க

“எனக்கும் இது மாசிரன் க்ரூப் வேலைனு தோணலை….. ஆனா உங்கட்ட அவ்ளவு நல்லா இருந்த பெரியத்தான்..….அதுவும் பொதுவா எல்லார்ட்டயும் எல்லா வகையிலும் அன்பாவும் நியாயமாகவும் நடந்துகிட்ட ஒருத்தங்க…… திடீர்னு ஜஸ்ட் டூ மன்த்ஸ்ல  இப்டி மாறுவாங்கன்றத ரொம்பவுமே நம்ப முடியலை….” மனோ தன் மனதை சொன்னாள்….

அவளுக்குமே வர்ஷனை யார் எதற்காக பிடித்து வைத்து மிரட்ட முடியும் என புரிந்து கொள்ள முடியவில்லைதான்…..மாசிரன்தான் ஏற்கனவே வர்ஷனது பங்கை கடன் என்ற பெயரில் மித்ரனுக்கு மாத்தி வைத்திருக்கிறானே…..அப்றம் மீண்டும் அவன் ஏன் வர்ஷனை குறி வைக்கப் போகிறான்…..? லாஜிகலி அவன் குறி மித்ரன் மீதும் மனோ மீதுமாய்த்தானே இருக்க வேண்டும்…?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

ஆனால் அதற்காக விஜிலா சொல்வது போல் வர்ஷன் மாறிவிட்டான் எனவும்  ஒத்துக் கொள்ளும்படியாய் இல்லை…..

இப்போது ஒரு வித விரக்த்தி பாவத்திற்கு போயிருந்த விஜிலா…. ”இன்னைக்கு உன்னையும் மித்ரனையும் பார்க்க ஏதோ எங்க பழைய லைஃப் ஞாபகத்துல உடஞ்சுட்டேன் மனோ….மத்தபடி வர்ஷனோட இந்த பிகேவியர எனக்கு  நம்ப முடியாமலாம் இல்ல…நீ  வளர்ந்த குடும்ப சூழலை வச்சு எல்லோரையும் யோசிக்கிற….ஆனா உலகம் உங்களை மாதிரி இல்லையே….

காதல்ல நல்ல காதல், கெட்ட காதல்னு என்ன இருக்கு…..எல்லாம் காதல்தானேனு……. இம்மொரால்டிக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம அலையுற ஒரு பைத்தியகார கோஷ்டி உலகத்துல இருக்கு மனோ….. என் அம்மா நான் பிறந்து ஃப்யூ மந்த்ஸ்ல அதை சொல்லிட்டுத்தான் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் ஒருத்தர் கூட போய்ட்டாங்க…..” அசைவே இன்றி விஜிலா சொல்ல…. ஆடிப் போனாள் மனோ….

இது இவள் இதுவரை அறியாத செய்தி…. வர்ஷனை ஏன் விஜிலாவால் கேள்வியே இன்றி ஆரம்ப காலத்திலும் இப்போதும் சந்தேகப்பட முடிகிறது….விட்டு விலக தோணுகிறது என தெளிவாக புரிகிறது இவளுக்கு….. அதோடு மித்ரன் விஷயத்தில் சற்று முன்பு வரை விஜிலா கடுமையாய் காய்ந்த காரணமும் விளங்குகிறது…

 “காதல்ன்றது ஒரு அதீத ஆழமான அன்பு….” இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டு தொடர்ந்தாள் விஜிலா….

”அது கொண்டவங்களை நிறைச்சு…..இரண்டு பேரை ஒருத்தரா இணைக்கிறது மட்டுமில்லாம, தன்னை சுத்தி  இருக்ற  எல்லோர் மேலயும், எல்லாத்தின் மேலயும் அன்பு நதியா பாய்ந்து பரவும்….பரவனும்… அப்டி உள்ளும் புறமும் ஒருத்தரை அன்பா மாத்தி அமைக்கலைனா அது காதலே கிடையாது…

எவ்ளவு சிடுமூஞ்சி… ஷார்ட் டெம்பர்ட்….கருமி…டிப்ரெஸ்ட்….செல்ஃபிஷ் இப்டி எந்த வகை மனுஷனும் காதல் வந்தா என்ன மாதிரி அன்பும் சந்தோஷமுமான மனிதனா மாறி போயிடுறாங்க….. அப்டி நம்ம அடி முடி வரை அன்பா  மாத்தும் ஒரு அனுபவம்தான் காதல்….

என்னதான் செல்ஃப் டிபென்டன்டா கை நிறைய சம்பாதிக்கிறவங்களாவே இருக்கட்டும்….. எத்தனை பொண்ணுங்க, ஏன் ஜென்ட்ஸ் கூடத்தான்…. இன்லாஸ் நம்ம கூட வந்து ஒரே வீட்ல இருக்கப் போறது இல்லை…..அவங்கள சார்ந்து நம்ம லைஃப் இல்லைன்ற நிலமையிலும் தன் இன்லாஸ்ட்ட  ஏன் நல்லா நடந்துக்க ட்ரைப் பண்றாங்க…?

உன்னையவே யோசியேன்…..மித்ரன் அம்மா இன்பா இப்ப வர்ஷன் இவங்க மேலலாம் ஏன் அக்கறைப் படுற….? எந்த வகையிலும் உன் லைஃப் அவங்களை சார்ந்தது கிடையாது ஸ்டில் ஏன் இவ்ளவு கன்சர்ன்?…. அதுக்கு காரணம் மித்ரன் மேல உனக்குள்ள அன்புதான..?

ஆனா இம்மொராலிட்டி இதுக்கு ஜஸ்ட் ஆபோசிட்….. நமக்குள்ள அது வரைக்கும் இருந்த இயல்பான அன்பை கூட அது கொன்னுடும்….  லஸ்ட்ன்றது ஒரு வழிப் போக்கன்……அது  நம்மட்ட வரும் போது விருந்து கொடுக்கனும்னு நமக்கு தோணுற அளவுக்கு அட்ராக்டிவா இருக்கும்…….ஆனா விருந்து கொடுத்தமோ நம்மை கொள்ளையடிச்சு தப்பிக்கவே முடியாத நிரந்தர குழில இறக்கிட்டு போய்டும்……..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.