(Reading time: 29 - 58 minutes)

ல்லூரி காலத்தில் மனோகரியுடன் நெருங்கிய நட்பு என கிடையாதென்றாலும்……விஜிலாவுக்கு அவளுடன் பழக்கம் உண்டே….. அப்போது தான் மனோ இதை இவளிடம் சொன்னதாக  ஞாபகம்…..

தன் தலை மேல் யார் கை வைப்பதென்பதும் மனோவுக்கு பிடிக்காதாம்……விஜிலாவுக்கும் அப்படி ஒரு இயல்பு உண்டு…..யார் இவளை எரிச்சல் படுத்தவும் தலையில் கை வைத்தால் போதும்…..ஏதோ ஒரு பேச்சில் இதை இருவரும் குறிப்பிட்டுக் கொண்டதுண்டு……

ஆனால் ஏனோ பின்னாட்களில், வர்ஷன் இவள் உள்ளந்தலையில் கைவைக்கும் போதெல்லாம்….ஒரு பூரணத்தை… நிறை பாதுகாப்பை உணர்வாள்…. இன்று மனோவின் நிலையும் அப்படி இருப்பதாய்தான் புரிகிறது இவளுக்கு….

சற்று நேரமாய் முழந்தாளிட்ட தன் கால் மீதே அமர்ந்திருந்தாளல்லவா மனோ, இந்நேரம் தன் கால் மரத்துப் போனது போல் தோன்ற……குழந்தையை கையில் ஏந்தியபடி அவள் ஒருவாறு சமாளித்து எழுந்து கொள்ள….மரத்திருந்த காலை ஒழுங்காய் ஊன்ற முடியாமல்  சற்றுத் தடுமாறினாள்….

அவள் நிலை உணர்ந்தவனாக, தான் அமர்ந்த நிலையிலேயே மித்ரன் அவளை ஒரு கையால் பிடித்து நிலை படுத்தியவன்….. இப்போது குனிந்து அவளது மரத்திருந்த காலின்  கொலுசினை முடிந்தவரை மேலாக தூக்கி பிடித்தபடி…..அதற்கு கீழ் உள்ள முன்னங்கால் பகுதியிலிருந்து பாதம் நோக்கி தன் மறு கர உள்ளங்கையால் மாறி மாறி தேய்த்தான்……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

மனோ அதற்கு சற்று மறுப்பாக ஏதோ சொல்வதும்….மித்ரன் பதில் சொல்வதும்….. விஜிலாவுக்கு இங்கிருந்து பார்க்க தெரிகிறது……அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என இவளுக்கு கேட்கவில்லை என்ற போதும் அது என்னதாக இருக்கும் என இவளுக்கு புரிகிறது…..

வழக்கமாகவே வர்ஷன் இதை இவளுக்கு செய்வான்…. இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகமாகி சட்டென அந்த மரத்த உணர்வு விலகி விடும் என அவனது அப்பா அவனுக்கு சொல்லி தந்தாக சொல்லி இருக்கிறான் அவன்…..உண்மையில் அதன் பலனும் உடனடியாக இருக்கும் தான்…

மித்ரனுக்கும் அவன் அப்பா சொல்லி இருப்பார் போலும்…

இதில் இந்த நொடி காரணத்தோடும் காரணமின்மையோடும் மித்ரனும் மனோவும், வர்ஷனும் இவளுமாக இவளுக்கு தெரிய…..வலிக்க துடிக்கப் பதறிப் போகிறாள் இவள்….

இப்படித்தானே இப்படியேதானே இவளை கொண்டாடினான் வர்ஷன்…..

வெடித்துக் கொண்டு வந்த அழுகையை அங்கு வைத்து வெளிப்படுத்த மனமின்றி விஜிலா திரும்பவும் படியேறி ஓட…

அப்போதுதான் அதை உணர்ந்து அவள் பக்கமாக பார்த்தனர் மித்ரனும் மனோவும்…. விஜிலா அழுகிறாள் என தெரியவுமே மனோ வேக வேகமாக விஜிலாவிடம் போனாள்.

வர்ஷன் தன்னைவிட்டு விலகிப் போக சொன்ன அந்த நிகழ்வில் அப்படியே தனக்குள் மடிந்தும்….அந்நேர ப்ரசவ சூழ்நிலையில் ஒரு விதமாய் மரத்தும் போயிருந்த விஜிலா….மெல்ல மெல்ல அந்த அதிர்ச்சி ஹார்மோன்களை தாண்டி நடந்தவற்றை நடந்தவைகளாக சில நாட்களாக உணர தொடங்கி இருக்க…

அதில் பச்சை ரணமாய் வர்ஷனின் பிரிவு அவளை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொண்டிருக்க….இன்றைய இந்தைய மனோ மித்ரன் காட்சி இன்னுமாய் இவளை குத்தி குலைக்க…..

மனோ எதையும் கேட்கும் முன்பாகவே கூட அவளை இம்முறை பார்க்கவும் தன் மனதில் உள்ளதை வெடித்து சிதற ஆரம்பித்தாள் விஜிலா…

“எப்டி இருந்தாங்க தெரியுமா மனோ….முன்ன பின்ன பார்த்தே இராத என்னைப் பார்க்க ஹார்வர்ட்ல இருந்து சான்ஃப்ரான்ஸிஸ்கோ வந்தாங்க….” என அங்கு தொடங்கி கடைசியில் வர்ஷன் விலக சொன்னது வரை அனைத்தையும் சொல்லி முடித்த விஜிலா…

பின் கண்ணில் கண்ணீர் ஊற்றெடுக்க….. மிக மிக தாழ்ந்த குரலில் ”உண்மையிலேயே வர்ஷன் இப்டி நடந்துக்க வேற ரீசன் இருக்குமா மனோ…? என்றாள் படு ஏக்கமாக…

எப்படி எப்படியோ நினைத்து வைத்திருந்த மித்ரனின் பின்னணி இப்படியாய் இருக்கும்போது ஒரு வேளை வர்ஷனிடமும் வேறு ஒரு கோணம் இருக்குமோ… என ஒரு சின்னதே சின்னதாய் ஒரு சிந்தனை துளிர் விட்டிறுக்கிறதே விஜிலாவிடம்…..

வர்ஷன் மாதிரிதான் அவன் தம்பியும்…..மித்ரன் மாதிரிதான் வர்ஷனும் என சில நாட்களாய் பல முறை யோசித்துவிட்டாள் தானே…..இதில் இன்னைக்கு மித்ரன் பற்றி உண்மை புரிய…..அவனது செயல்களில் வர்ஷனை காண….இப்படி ஒரு சிந்தனை….

“என் இடத்துல நீ இருந்த என்ன செய்வ மனோ…?” மனோ எல்லா சூழ்நிலைகளையும் சரியாக கையாண்டிருப்பது போல்  ஒரு எண்ணம் விஜிலாவினுள்…அது இந்த கேள்விக்கு காரணம்…

“ஆனா அவங்களே என்ட்ட சொன்னாங்களே மனோ….அதுவும் டெலிவரிய எதிர்பார்த்துட்டு இருந்த அந்த கண்டிஷன்ல….” ஆதாரமில்லாமல் எதையும் நம்ப முடியாத ஸயின்டிஸ்ட் மனமல்லவா  அவளது….அஸ்திவாரம் கேட்டது அது அடிப்படை நம்பிக்கைக்கு….

“அவங்க பக்கம் தப்பு இல்லைனா….அவங்களை யாரும் பிடிச்சு அடச்சு வச்சு, இப்டி சொல்ல சொல்லி  மிரட்டினாதான இப்டி சொல்லி இருப்பாங்க…?” என அடுத்து மிரண்டவள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.