(Reading time: 29 - 58 minutes)

ந்திருப்பது மனோ என்றவுடன் ஒருவாறு அமைதி வந்துவிட்டது விஜிலாவுக்கு….கூடவே மனோ முகத்தில் இருந்த ஃபுல் லெவல் பூரிப்பை காணவும் ஒரு புறம் மகிழ்ச்சியும்….அவளோட மேரேஜ் லைஃப் நல்லா இருக்குன்னு அர்த்தம் ஆகுதே…இன்னொரு புறம் சற்று பயமும்….

எந்த சூழலிலெல்லாம் இவள் மித்ரனை நம்பி இருக்கிறாள்….? ஆனால் அது சரிதானா?…..

“என்ன விஜிலா இப்டி பார்க்கிறீங்க…? குட்டிய அவங்கட்ட காமிக்கலாம்தானே…..உங்களுக்கு ஒன்னும் அப்ஜக்க்ஷன் இல்லையே…” மனோ கேட்ட பின்புதான் தான் எப்படி அவளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே விஜிலாவுக்கு விளங்க….

“அச்சோ இதென்ன கேள்வி தாராளமா….” என அவசரமாக சம்மதம் சொன்னாள்….

விஜிலாவை தயங்கிய பார்வையால் பார்த்தாள் மனோ…..எப்படி வாடி வதங்கிய சறுகு போல் கிடக்கிறாள் இவள் என்றிருக்கிறது பார்க்க..

“என்னாச்சு மனோ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“இல்ல…..எதையாவது கேட்டு உங்க மனசை கஷ்டபடுத்த கூடாதுன்னு இப்ப வரை என்ன நடந்துச்சுன்னு உங்கட்ட கேட்டுகலை…..நீங்களா சொல்றப்ப பார்க்கலாம்னு ஒரு தாட்……ஆனா இப்ப பெரியத்தானையும் உங்களையும் பத்தி கேள்விப் படுற ஒவ்வொரு விஷயமும்…. அவ்ளவு அன்யோன்யமா இருந்த உங்களுக்குள்ள அப்டி என்ன நடந்துறுக்க முடியும் இந்த அளவுக்கு ஒரு சூழ்நிலை வர்ற மாதிரின்னு ரொம்பவும் தோணுது……”

“…………….”

“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்களேன் விஜிலா….உங்களுக்கும் மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்….அடுத்து என்ன செய்யலம்னும் பார்க்கலாம்..”

மனோ பதிலுக்காக விஜிலாவைப் பார்த்தபடி நிற்க….சற்று நேரம் மௌனமாய் இருந்த விஜிலாவோ….

”அதான் முன்னமே சொன்னேனே…அவங்க வீட்ல எல்லோருக்கும்….. சாரி மித்ரன் பத்தி நான் எதுவும் சொல்ல கூடாது….பொண்னுங்கன்னா நினச்ச நேரம் தூக்கி எரியலாம்னு ஒரு தாட் வர்ஷனுக்கு……இதுக்கு மேல சொல்ல ஒன்னுமில்லை…” ஒரு இறுகிய பாவத்துடன் வேறு புறம் பார்வை பதித்தபடி சொல்லி முடித்தாள்.

மித்ரன் பற்றிய விஜிலாவின் குறிப்பிடலில்  தனக்குள் சுர் என எழுந்த ஒரு உணர்ச்சி கொந்தளிப்பை ஒரு கணம் மௌனமாய் நின்று தன்னுள் அடக்கிய மனோ, தார்க்கிகா இன்பாவை கடத்திய நாடகத்தை விளக்கமாய் சொல்லி……

”இந்த இடத்துல நான் நடந்துகிட்டதுக்கும்….எங்க மேரேஜ் விஷயத்துல மித்ரன் நடந்துகிட்டதுக்கும் எனக்கு பெருசா வித்யாசம் தெரியலை…..மத்தபடி முன்னால அவங்களைப் பத்தி நீங்க கேட்ட எல்லாம் அந்த மாசிரனோட வேலை…” என சற்று அழுத்தமாய் சொன்னவள்….

பின் மித்ரனது பெரியம்மா மற்றும் மதிபா விஷயங்களை, அதை மாசிரன் பயன்படுத்திய விதத்தை தேவையான அளவு விளக்கி….

”இதுல கவனிச்சீங்கன்னா மித்ரன் ஒரு பலியாடு….தப்பு செய்தது யாரோ, ஆனா தண்டனை மட்டும் இவங்களுக்கு……இப்டி ஒரு நிலமைல இன்னைக்கு பெரியத்தான் கூட மாட்டி இருக்கலாம்…..அத தான் சொல்ல வந்தேன்……அப்டி ஒரு சிச்சுவேஷன்ல அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்க வேண்டிய நீங்க, இப்டி அவங்கட்டயே தப்பு கண்டுபிடிச்சுட்டு விலகி நின்னா…..அப்றம்…. “ என கண்டனமாய்  பேசிக் கொண்டு போனவள்…..தன் வார்த்தையில் ஏறும் உஷ்ணம் உணர்ந்து பேச்சை அப்படியே நிறுத்திவிட்டாள்.

மித்ரன் கடந்த காலம் பற்றி கேட்டதில் அதிர்ந்து தான் போயிருந்தாள் விஜிலா….வாய் திறந்து எதையும் பேச கூட தோணாத அதிர்ச்சி….. அவள் காதுக்கு வந்த செய்திகளுக்கு இப்படி ஒரு கோணம் இருக்க கூடும் என அவள் நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வுகள்……

கூடவே மித்ரன் மீது இரக்கமும் பாய்ந்தோடுகிறது…..எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாமல் போறதுன்னா அதோட வலி என்ன என்பது இவளுக்கும் தெரியும்…. அப்படிப்பட்ட ஒருவனை தான் இத்தனை காலம் கேள்வியே இன்றி வெறுத்திருக்கிறோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சி வேறு….

ஒரு விதமான மௌனம் அசைவாடியது அங்கு. மனோவும் அதை கலைக்க விரும்பவில்லை. பின் மெல்ல சுதாரித்தவளாக விஜிலா ”சாரி மனோ……மித்ரன் விஷயம் இப்டின்னு எனக்கு தெரியாது……அவங்களைப் பத்தி முன்ன கேட்ட விஷயங்கள்..…இப்ப வர்ஷன் கொடுத்த இந்த கசப்பான அனுபவம்….எல்லாமா சேர்ந்து….  அவங்களை ஈசியா தப்பா நினைக்க வச்சுட்டு என்னை…. வெரி சாரி…” என கெஞ்சலாக ஒரு தொனியில் சொன்னவள்

“எனக்கு பொதுவா இம்மாரலிடிய மன்னிக்கிறது கஷ்டம்” என்றாள் மரக்கட்டை குரலில்.

“எனக்கும் தான்….” அதே வேகத்தில் வந்து விழுந்தது மனோவின் வார்த்தைகள்……”ப்ரொவைடட் அது உண்மையா இருக்கும் பட்சத்தில்” என முடித்தாள் அவள்.

இப்பொழுது விஜிலாவின் இதழில் சிறு புன்னகை…விரக்த்தியின் வடிவாய் அது… ஆனால் அடுத்து அவள் எதுவும் பேசவில்லை…

மனோவுக்கு இப்போது விஜிலா பால் மனம் இளகியது…..வர்ஷனைப் பற்றி மனோவுக்கு எவ்வளவு தெரியுமாம்? அவன் தப்பு செய்யவில்லை என்பதற்கு இவளிடம் மட்டும் எதுவும் ஆதாரம் இருக்கிறதாமா என்ன….? “நான் உங்களை ஹர்ட் செய்துறுந்தா சாரி விஜிலா…..நான் சொன்ன சைடயும் யோசிங்க….” சற்று இறங்கி வந்த  மனோ….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.