(Reading time: 22 - 44 minutes)

தி வேகமாக அருகில் வர,

“மிஸ்டர்.ஆதி.. ப்ரயு கண் விழித்து விட்டாள்.. இனி பயமில்லை. “ என்றார்.

“தேங்க்ஸ் டாக்டர்.. இப்போ உள்ளே போகலாமா? “ என்றான்.. எல்லோருமே ஆவலாக அவர் முகத்தை பார்க்க,

“இங்கே வேண்டாம்.. சாதாரண வார்டுக்கு மாற்ற சொல்லியிருக்கிறேன்.. நர்ஸ் வந்து எந்த அறை என்று சொல்வார் .. அதன் பின் நீங்கள் போய் பாருங்கள். இன்னொரு விஷயம்.. அவளிடம் அதிகம் பேச்சு கொடுக்க வேண்டாம்.. “ என்றார்.

எல்லோரும் காத்திருக்க, அரை மணி நேரத்தில் நர்ஸ் வந்து அறை எண் சொன்னார்.

அந்த அறையின் வாசலில் அனைவரும் நிற்க, ஆதி யாரை பற்றியும் கவலைபடாமல் உள்ளே சென்று விட்டான். நர்ஸ் வந்து ஒவ்வொருவராக சென்று பார்க்க சொல்லியிருந்தார்.

உள்ளே யாரோ வரும் அரவம் கேட்டு , ப்ரயு கண் திறந்து பார்த்தாள்.. ஆதியைக் கண்டதும் அவள் தலையை அசைத்தாள்.. ஆதி அவளருகே வந்தவன், அவள் கையை எடுத்து தன் கண்ணில் வைத்துக் கொண்டான்.. பிரயுவும் ஒன்றும் பேசவில்லை. சற்று நேரத்தில் கைகளில் ஈரம் படவும், அவன் முகத்தை நிமிர்த்தினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்... 

ஆதி அழுது கொண்டிருந்தான். அவன் கண்களில் கண்ணீரை கண்ட ப்ரயு, எழுந்திருக்க முயற்சித்தாள். அவளை தடுத்த ஆதி , அவள் தலைக்கு அருகில் இருந்த chair இல் அமர, ப்ரயு வேகமாக அவன் கண்களை துடைத்தாள். அவளுடைய கண்களிலும் கண்ணீர்.. ஆதியின் கண்ணீர் நிற்கவில்லை என்றவுடன்,

“அழாதீங்க.. ஆதிப்பா” என்றாள்

அந்த வார்த்தையை கேட்ட ஆதி, மீண்டும் அவள் கைகளை தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்,

“ஏன்.. ரதி.. இப்படி செஞ்ச? நேத்து ராத்திரிலேர்ந்து .. நான் நானா இல்லடி.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டி.. எங்கிட்ட சண்டை போடு... ஏன் இப்படி பண்றீங்கன்னு கேளு.. அதைவிட்டு இப்படி மனசுலே போட்டு வைச்சு.. உனக்கு கஷ்டத்தை தேடிக்காத.. என்னையும் வேதனைபடுத்தாத,.. “ என்று புலம்பினான்.

ப்ரயு அவனுக்கு பதில் சொல்லவில்லை என்றாலும் , அவனின் வேதனை உணர்ந்து அவன் கன்னத்தை அழுத்தினாள்.

அங்கே வெளியே யார் உள்ளே செல்ல என்று தயக்கத்தில் இருக்க, ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் இருந்தனர். ஆனால் பிரியாவும், பிரபுவும் உள்ளே சென்றனர்.

ப்ரியாவை பார்த்த ப்ரயு,

“ஹேய்.. ப்ரியா.. நீ எப்படி இங்கே வந்த.. ? நீ பெங்களூர் லே தானே இருந்த? வாங்க .. பிரதர் எப்படி இருக்கீங்க” என்று வினவ,

“அடிங்க.. நேத்து ராத்திரிலேர்ந்து எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு, இப்போ மேடம் நிதானமா குசலம் விசாரிக்கீரீங்களோ? இங்கே நீதான் patient ஞாபகம் இருக்கா?”  என்று பொரிந்தாள்.

“ஹேய்.. என்னடி.. நேத்து இரவிலேர்ந்தா.. ? நீ ஏண்டி இங்கே இருக்க.. ? வீட்டிற்கு போயிட்டு காலையில் வந்துருக்கலாம் லே..”

“ஏண்டி.. இப்படி இருக்க.. ? ஏன்.. யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் மறைச்ச..? அட்லீஸ்ட் என்கிட்டயாவது ஷேர் பண்ணிருக்கலாம் லே.. அங்கே உள்ள பிஸி வொர்க் லே உன்கிட்ட பேசல.. அதுக்காக நான் உன் friend இல்லன்னு ஆகிடுமா? மனசு வேதனைப்படும் சமயத்துலே எங்கிட்ட ஷேர் பண்ணியிருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்துர்க்கும் இல்லியா? இவ்ளோ பெரிசா இழுத்து விட்டுட்டியே?“ என்று பட பட பட்டாசா பொரிந்தாள்.

“ஹேய். .அப்படி எல்லாம் இல்லபா.. “ என்று அவள் மறுக்கும் போதே..

“ப்ரியா.. போதும் .. சிஸ்டர டென்ஷன் எத்தாதே.. சிஸ்டர்.. அவள் பேசறத பத்தி யோசிக்காமல் நீங்க ரெஸ்ட் எடுங்க.. “

“தேங்க்ஸ்.. ப்ரோ.. “ என்றவள், தன் கணவனுக்கு அவனை அறிமுகம் செய்ய எண்ணி ஆதியை பார்க்க, ஆதியோ பிரபுவின் கையை பிடித்து

“தேங்க்ஸ் டா.. நேத்திக்கு நான் இருந்த நிலைமையில் நீ வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் தைரியமே வந்துச்சு.. உங்களுக்கும் தேங்க்ஸ் சிஸ்டர்” என, ப்ரயு விழித்தாள்.

“உங்களுக்கு இவங்களை ஏற்கனவே தெரியுமா ஆதிப்பா ?” என, பிரபு

“நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா காலேஜ் லே படிச்சவங்க.. இப்போ ஒரே இடத்துலே தான் வேலையும் பார்க்கறோம்.”

“அப்போ நீங்கள் எங்க கல்யாணத்துக்கு வரலையே?

“இல்லமா.. இப்போ ஆதி பண்ண ப்ராஜெக்ட் அங்கே நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. எங்க அப்பாக்கு தீடிர்னு உடம்பு சரியில்லாம போனதால் நான் இங்கே வர, ஆதி அங்கே போக வேண்டியிருந்தது. “

மேலும் ஏதோ கேட்க வாயெடுக்க, ஆதி ‘ போதும்.. ப்ரயு.. அவங்க போய் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நீ அப்புறமா எல்லாம் விரிவா பேசலாம் “ என்றான்.

“நாங்க கிளம்புறது இருக்கட்டும்.. முதலில் இந்த காபிய குடி.. நேத்து ராத்திரியாவது சாப்பிட்டியா ? சிஸ்டர் க்கு என்ன தரலாம்ன்னு கேட்டுக்கலாம்.. “

ஆதிக்கும் அப்போதுதான் பசி தெரிந்தது. முதல் நாள் இரவு ஆதி ப்ரயு வீட்டிற்கு சென்று அவளோடு சாப்பிடலாம் என்று எண்ணித்தான் அங்கே சென்றான். அதன் பிறகு என்னன்னவோ நடந்து விட்டது. ஒரு பெருமூச்சோடு பிரபுவிடமிருந்து காபி வாங்கி கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.