(Reading time: 22 - 44 minutes)

வித்யா, ப்ரயு எல்லாரும் அவர்கள் கணவன்மர்களுடன் கிளம்பி விடுவதாக கூற, ஆதி, அவன் அம்மா, மாமியார் மட்டும் கான்டீன் சென்று சாப்பிட்டு வந்தனர்.

சாப்பிட்டவுடன் எல்லோரையும் வீட்டிற்கு கிளம்ப சொன்னான் ஆதி. பிரயுவின் பெற்றோர் இருப்பதாக கூற,

“இல்லை மாமா.. நீங்க ரெஸ்ட் எடுக்கணும்.. அனேகமா சாயந்திரம் டாக்டர் பார்த்துட்டு discharge பண்ணிடுவாங்க.. நீங்க அம்மாவை வீட்டில் விட்டுட்டு அப்படியே உங்க வீட்டிற்கு போங்க.. சாயந்திரம் டாக்டர் என்ன சொல்றர்நு சொல்றேன்.. “ என்று கூற, பிரயுவும் வற்புறுத்தவே சம்மதித்தனர்.

எல்லோரும் கிளம்பினர்.

ஆதியும் பிரயுவும் மட்டும் hospital தங்கினர். பிரயு மருந்தின் வேகத்தால் உறங்க ஆரம்பிக்க, ஆதியும் முந்தின இரவு விழிப்பால்.. அங்கியே அட்டேண்டேர் பெட்டில் படுத்தான்.

மாலை டாக்டர் வந்து செக் செய்து விட்டு பிரயுவை discharge செய்தார். அதற்கு முன் இருவரையும் அறைக்கு வர சொல்லி,

“ப்ரயு.. இனிமேல் இது போல் வீட்டில் உள்ளவர்களிடம் மறைக்காதே.. நீ மருந்து சாபிட்டியா .. இல்லியா என்று கூட யாருக்கும் தெரியவில்லை.. இது மறைக்க வேண்டிய விஷயம் இல்லை.. உனக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும் கஷ்டம் தான் புரிகிறதா. ? “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

ஆதி டாக்டரிடம் “டாக்டர் இதற்கு precaution ஸ்டெப்ஸ் என்ன செய்ய வேண்டும்.. ?”

“ஒன்றும் இல்லை மிஸ்டர்.ஆதி.. அவள் மனதை வருத்திக் கொள்ளாமல் இருந்தால் போதும்.. மேலும் தூக்கம் பாதிக்கபடாமல் பார்த்துக் கொண்டால் போதும்..”

ப்ரயு ஆதியிடம் “நீங்கள் பில் கட்டி விட்டு வாருங்கள் “ என்று அனுப்பியவள், தனியாக டாக்டரிடம் தன் சந்தேகங்களை கேட்டாள். அதே போல் ஆதி வந்ததும், பிரயுவை அனுப்பி விட்டு அவனும் தன் சந்தேகங்களை கேட்டுக் கொண்டான்.

நேராக ஆதியின் வீட்டிற்கு சென்றார்கள் .. அங்கே அவன் அம்மா இரவு உணவு சமைத்து வைத்து இருந்தார். hospital இல் இருந்து வந்ததால் இருவரும் குளித்து விட்டு வர, மூன்று பேருமாக சாப்பிட்டனர்.

இதற்கு இடையில் பிரியா பிரபு, பிரய்யு பெற்றோர், தங்கைகள், வித்யா எல்லோருக்கும் வீட்டிற்கு வந்ததை சொல்லி விட்டு, டாக்டர் சொன்னதையும் சொன்னார்கள்.

ஆளாளுக்கு பிரயுவிற்கு அட்வைஸ் மேல் அட்வைஸ் பொழிந்தனர்.. பிறகு இருவரும் தங்கள் அறைக்கு படுக்க வந்தனர்..

“ப்ரயு.. கொஞ்ச நேரம் பேசலாமா “ என்றான் ஆதி..

“சொல்லுங்க ஆதிப்பா”

அவளருகில் அமர்ந்து அவள் கைகளை வருடி “ப்ரயு .. கொஞ்சம் நீள விளக்கமாக இருக்கும்.. அதை கேட்டு உன் பதிலை சொல்.. சரியா?”

“அதற்கு முன் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.. “

“கேளுடா...”

“இன்றைக்கு அப்பாவிடம் ஒரு கேள்வி கேட்டேன்.. எப்படி நீங்கள் நான்கு வருடம் வெளிநாடு சென்று விடுவீர்கள் என்று தெரிந்த பின்னும் உங்களை எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.. ? அதற்கு அவர் நீங்கள் அப்பாவிடம் பேசியதாக சொன்னார்.. என்ன பேசினீர்கள்? என்று தெரிந்து கொள்ளலாமா?”

“ஹ்ம்ம். .சொல்கிறேன்.. அதற்கு முன் நீ எப்படி என்னை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாய்?”

“முதலில் அப்பா, அம்மாவிற்காகதான் பெண் பார்க்க ஒப்புக் கொண்டேன்.. ஆனால் அன்று நீங்கள் என்னிடம் நேரடியாக பேசியது, மேலும் உங்கள் அம்மாவிற்கு இவ்வளவு பார்ப்பவர்.. என்னையும் நன்றாக பார்ப்பீர்கள் என்று தோன்றியது.. மேலும் உங்களை பிடித்து இருந்தது .. அதனால் தான் ஒத்துக் கொண்டேன்... “

“ஹ்ம்ம்..”

“ஆனால் நீங்கள் தரகர் கொண்டு வந்த வரன் இல்லையாமே... அப்பாவிடமே நேரடியாக பேசினீர்களாமே”

“ஆமாம்.. உன்னை பெண் பார்க்க வருவதற்கு முன்னே நான் பார்த்து இருக்கிறேன்.. வித்யா கல்யாணம் முடிந்த பின், நான் ஒரளவு ஹாப்பிஆ இருந்தேன்.. அப்போது இந்த வீட்டு கடன், வித்யா கல்யாண செலவு எல்லாம் ஓரளவு முடித்து .. என் கடமையை சரியாக முடித்த திருப்தி இருந்தது. அப்போது ஒருநாள் என் friend ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்க பார்ப்பதற்காக உங்கள் hospital வந்தேன்.. எங்கியோ வழிமாறி .. உங்கள் ரிலாக்ஸ் ரூம் அருகே வந்து விட்டேன். .அப்போது நீயும், உன் friend பிரியாவும் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அவள் ஹீரோ பத்தி ஏதோ பேசிக் கொண்டிருக்க, நீ அவளிடம் பதிலுக்கு சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு உன்னை பற்றி அறிய ஆவலை தூண்டியது..

“ஏய்.. ஹீரோ வொர்ஷிப் ஓகே தான்.. ஆனால் வாழ்க்கை என்பது சினிமா இல்லை.. கலரோ, நாலு பேரை அடிச்சி தூக்கறதோ தேவை இல்லை.. நம்மை மதித்து நடப்பவர் தான் வாழ்க்கை துணைவராக வர வேண்டும்..”

“அடி போடி.... எந்த காலத்திலுமே ஆண்கள் பெண்களை அடிமைதான் படுத்துகிறார்கள்.. அதிலும் ஒருவருக்கு மட்டும் எல்லா விதத்திலும் அடிமை.. அதற்கு கொடுக்கும் லைசென்ஸ் தான் கல்யாணம்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.