(Reading time: 22 - 44 minutes)

ர்ஸ் வர பிரயுவிற்கு என்ன சாப்பிட கொடுக்கலாம் என்று கேட்க, இப்போது ஜூஸ் கொடுத்து விட்டு... பிறகு கொஞ்ச நேரம் கழித்து சாப்பாடு கொடுக்கலாம் என்றனர்.

ஆதி ஜூஸ் வாங்க வெளியே வர, பிரியாவும், பிரபுவும் கிளம்பினர்.

ஆதியின் அம்மா அவனிடம் “இப்போ எப்படி இருக்காப்பா ப்ரத்யா?” என்று வினவ, ஒரு விநாடி அவரை நேராக பார்த்தவன், ஒரு பெருமூச்சோடு,

“அம்மா .. உங்க கிட்டயும்... வித்யா கிட்டயும் கொஞ்சம் பேசணும் கான்டீன் வரீங்களா?’ என்றான்..

வித்யா குழந்தைய அவள் கணவரிடம் விட்டு விட்டு.. இருவரும் ஆதியோடு கான்டீன் சென்றனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்... 

பிரயுவிற்கு ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு, தன் அம்மா, தங்கைக்கும் ஜூஸ் வாங்கி கொடுத்தான்...

“அம்மா.. என்னம்மா பிரச்சினை உங்களுக்கு ..? ஏன் ப்ரயு அப்பா hospital இருக்கும் போது ப்ரயு கிட்ட அப்படி பேசி இருக்கீங்க.. ? “

“என்னடா.. ? நீயே மூணு வருஷம் கழிச்சு வந்துருக்க? உன் கிட்ட கோப பட்டு , அந்த ட்ரைனிங் போறத பத்திக் கூட சொல்லாம இருந்திருக்கா? அத மனசுலே வச்சுதான்.. பேசினேன்.. அவகிட்ட தானே பேசினேன்.. “

“நீங்க பேசும் போது அவங்க அப்பா முழிச்சு தான் இருந்துருக்காங்க.. அவரே ஹார்ட் patient.. நீங்க அவர் எதிரே பேசுறது நல்லாவா இருக்கு? அதோட எதுவா இருந்தாலும் எங்கிட்ட நீங்க கேட்டுருக்கலாமே.. உங்களுக்கு நான் பதில் சொல்லலன்னா அவகிட்ட கேட்டுருக்கணும்,.. “

“இப்போ என்னாலதான் அவளுக்கு பிரச்சினை என்று சொல்கிறாயா?”

“இல்லைதான்.. ஆனால் அதுவும் ஒரு காரணம்.. அவகிட்ட கல்யாணம் முடிஞ்சு என்ன சொன்னேன் தெரியுமா? என் இடத்துலே இருந்து உங்கள பார்த்துக்க சொல்லி.. இன்னிக்கு வரைக்கும் அவ உங்கள மதிக்காமலோ, வித்யாவ அவ தங்கை மாதிரி பார்துக்கரதிலேயோ எந்த குறையாவது வச்சிருக்களா? “

இதை கேட்ட இருவரும் .. யோசிக்க ஆரம்பித்தனர்.

“வந்த சில பிரச்சினைகள் கூட நான் வித்யா டெலிவரி போது பேசாதது, உங்களையும் அவளையும் என்னோட கூட்டிட்டு போறது இத மாதிரிதானே.. அவ இப்படி செஞ்சா.. அதனாலே எங்களுக்கு இந்த பிரச்சினை ஆச்சு.. என்று நீங்க இதுவரைக்கும் சொல்லி இருக்கீங்களா?”

வித்யாவும், அவள் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“அதோட.. நான் உங்கள எல்லாம் பிரிஞ்சி இருக்கென்ற குறை மட்டும் தான் எனக்கு.. ஆனால் அவளுக்கு .. ? எல்லாம் தெரிஞ்சும் கூட எத்தனை வித பிரச்சினைகள் face பண்ணினா? நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் ஆதரவா இருந்து இருந்தா அவள் தன்னோட உடல் நிலைய பத்தி உங்ககிட்ட சொல்லியிருப்பாள்ள..? “

ஆதியின் அம்மா , “ஆனால் சென்ற முறை அவள் உடம்புக்கு வந்த பிறகு , அவளை வீட்டில் கூட அதிக வேலை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் தானே?”

“ஆனால் அவள் மனசு பத்தி நீங்க கவலைபடலியே? இத நான் சொல்லக் கூடாது தான்.. இருந்தாலும் ஏன் சொல்றேனா .. என் மனசுலே நீங்க அவள பார்துப்பீங்க என்ற நம்பிக்கை இருந்துது.. நான் ஒரு நிமிஷம் கூட நினைச்சது இல்ல.. நீங்க வித்யாவையும், பிரயுவையும் பிரிச்சு பார்ப்பீங்கன்னு.. அப்படி எண்ணியிருந்தால் நான் கல்யாணம் செய்துர்க்க மாட்டேன்.. “

இருவரும் அவர்கள் தவறை உணர்ந்தனர்..

வித்யா ‘சாரி அண்ணா .. எனக்கு இப்படி எல்லாம் தோன்றியது இல்லை. நான் புகுந்த வீட்டில் ஒரே பிள்ளையாய் போனதால் .. எனக்கு யாரையும் அவர் மனசு எப்படி இருக்கும் என்று எண்ணி பார்க்க தெரியவில்லை.. என் மாமியாரும் அவர் பிள்ளைக்காக என்று என்னிடம் எதையும் காட்டமாட்டார்... இனிமேல் நான் கவனமாக இருக்கிறேன் அண்ணா.. இப்போ நான் அண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. “

“நீ உணர்ந்து கொண்டால் போதும் வித்யா .. அவள் உடல்நிலை பற்றி மட்டும் பேசி விட்டு கிளம்பு.. சின்ன குழந்தையை hospital இல் அதிக நேரம் வைத்து இருக்க வேண்டாம்.”

ஆதியின் அம்மா முகம் வேதனை இருந்தாலும் , ஒரு முடிவுக்கு வந்து விட்டது போல் , “ஆதி நீ வேண்டும் என்றால் தனி குடித்தனம் போகிறாயா? இவ்ளோ நாள்தான் எனக்காக பார்த்துட்டு ரெண்டு பேரும் கஷ்டபட்டீங்க.. இனிமேல் உங்கள் இருவரின் சந்தோஷம் தான் முக்கியம் ... என்னை அறியாமல் நான் உங்களை சங்கடபடுத்தி விடுவேனோ என்று கலக்கமாக இருக்கிறது”

ஆதி அவன் அம்மா கையை பிடித்து “அம்மா.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. இதை பிரயுவே ஒப்புகொள்ளவும் மாட்டாள்.. அவளுக்கு யார் மீதும் கோபம் இருக்காது.. வருத்தம் வேண்டுமானால் இருக்கலாம் அவளை புரிந்து கொள்ளவில்லையே என்று.. நீங்கள் போய் அவளிடம் பேசுங்கள்.. எல்லாம் சரியாகி விடும் “

ஆதி இருவரிடமும் பேசி முடித்து , பிரயுவின் அறைக்கு திரும்புவதற்கு முன், பிரயுவின் அறையில் அவள் தங்கைகள், பெற்றோர் பிரயுவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.