(Reading time: 22 - 44 minutes)

ஸ்டுபிட் மாதிரி பேசாதே.. கல்யாணம் என்பது அடிமைத்தனம் அல்ல.. நம்மை பாதுகாக்கும் பொறுப்பை நம் அப்பாவிடமிருந்து .. கணவருக்கு கொடுக்கிறார்கள்,, ஒரு கட்டத்தில் அது மகன்களின் பொறுப்பு ஆகிறது.. “

“அப்போ நம்மை நாம் பாதுகாக்க முடியாதா.. ? இதற்காக நாம் கொடுக்கும் விலை நம் சுதந்திரம்..”

“சுதந்திரம் என்பது என்ன..? நீ நினைச்ச நேரத்தில் ஊர் சுற்றுவதா..? இல்லை.. ஆண்கள் நம் எண்ணங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தாலே போதும்.. உடல் வலிமை அடிப்படையில் பார்த்தால் நம்மை விட ஆண்கள் பலம் அதிகம்.. மனவலிமை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் .. ஆண்களின் பலத்தை அவர்கள் நம்மை பாதுகாக்கவும், பெண்களின் மனபலத்தை ஆண்களுக்கு உறுதுனையாக்கவும் தான் இறைவன் இப்படி ஒரு படைப்பு செய்திருக்கிறார்..”

இதற்கு மேல் நீங்கள் என்ன பேசினீர்களோ தெரியாது.. ஆனால் உன்னை போன்ற பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று தோன்றியது. உன்னை பின் தொடர்ந்து உன்னை பற்றிய விவரங்கள் அறிந்தேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

அதற்குள் எனக்கு இந்த வேலை வாய்ப்பு வரவே, உன் அப்பாவிடம் எல்லாம் சொல்லி , உன்னை திருமணம் செய்து தருமாறு கேட்டேன்.. அதற்கு முன் திருமணத்தை பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்றும் கேட்டேன்.. அதற்கு அவர் நீ இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று சொல்வதாக சொன்னார்.

உன் அப்பாவிடம் நான் “சார், என் நிலைமை இப்போது அம்மாவை என்னுடன் அழைத்து போக முடியாது.. என் friend சொல் படி அந்த climate என் அம்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது.. அதோடு என் தங்கையை இப்போதுதான் திருமணம் செய்து கொடுத்து இருப்பதால் அவளுக்கு இனிமேல் வரக்கூடிய எல்லா விசேஷங்களையும் பார்க்க வேண்டும்..

என் அப்பா இறந்த பின், என் அம்மா எங்களை வளர்ப்பதற்காக எங்கள் அப்பா வழி உறவுகளிடம் தான் நிற்க நேர்ந்தது.. அம்மா நிறைய பேச்சுக்களை கேட்க வேண்டி இருந்தது.. மீண்டும் அவர்களிடம் அம்மாவை விட மனம் இல்லை.. என்னை பொறுத்தவரை உங்கள் மகளுக்கு பிடித்து இருந்தால் அவள்தான் என் மனைவி.. என்னுடைய நேசம் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவளுக்கும் என்னை பிடிக்கும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வேறு யாரையோ நம்பி விடுவதற்கு, என் மனைவியோடு விட்டு செல்ல எண்ணுகிறேன்.. உங்கள் மகளை வெறும் கம்பனியானாக எண்ணி இதை நான் கேட்கவில்லை.. என் மனைவி என்பவள் என்னில் பாதி.. என்னுடைய இடத்தில இருந்து என் குடும்பத்தை பார்த்துக் கொள்வாள் என்று எண்ணித்தான் கேட்கிறேன்.

நான் திரும்பி வர மூன்று வருடத்திற்கு மேல் ஆகும்.. எனக்கு உங்கள் மகளை திருமணம் முடித்து அனுப்பி வைத்தால், அவள் கேட்ட அவகாசமும் கிடைக்கும்.. என் அம்மா, உங்கள் மகள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதலும் இருக்கும்.. இது எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் நல்லது.

இப்படியெல்லாம் பேசி பெண் பார்க்க ஏற்பாடு செய்து, திருமணமும் நடந்தது.. நான் எதிர்பார்த்த மாதிரி எல்லாம் சரியாக போய் கொண்டிருந்தது.. ஆனால் நான் எதிர்பாராதது என் அம்மாவின் நடவடிக்கை.. அவர்கள் வித்யாவை உயர்த்தி உன்னை மட்டம் தட்டுவார்கள் என்று எண்ணவில்லை. இது எனக்கு பெரிய அதிர்ச்சி..

நீ சொல்லாமலே  என்னால் ஊகிக்க முடிந்தது.,. ஆனால் நேரில் இல்லாமல் அங்கிருந்து கொண்டு சரி செய்ய கூடிய விஷயமாக தெரியவில்லை.. அதுதான் நமக்குள் அவ்வப்போது வந்த பிரச்சினைகளுக்கு காரணம்...

அதே போல் நான் சென்ற முறை வந்த போது உன்னோடு மூனாறு போக திட்டமிட்டு இருந்தேன்.. உனக்கு ஒரு surprise ஆகா இருக்கட்டும் என்று சொல்லாமல் இருந்தேன். ஆனால் அப்போது திட்டம் முற்றிலும் மாறி விட்டது. அது என்னை ஒரு மாதிரி upset செய்ததில் தான்.. உன் அப்பா, தங்கைகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்து விட்டேன். பிறகு நீ நினைவுபடுத்தி நாம் கிளம்பியபோது ஏற்பட்ட பிரச்சினைகள் உனக்கே தெரியும்..

ஆனால் அந்த முறை அங்கே சென்ற பிறகு, உன்னை விட்டு இருக்க முடியாது என்று புரிந்து, நான் எங்கள் ஆபீசில் பேசி, இங்கே மாறுவதற்கு விடாமல் நச்சரித்தேன். .அதன் நடுவில் தான் நீ மயங்கி விழுந்த விஷயம் அம்மா சொன்னார்கள்..

அவர்கள் சொல்லும்போது சொன்னது, என்னால் உன் தூக்கம் கெடுவதாகவும், மேலும் என்னை பிரிந்து இருப்பது உனக்கு ஏக்கத்தை கொடுப்பதாகவும் சொன்னார்கள்.. சோ நீ என்னை விட்டு கொஞ்சம் விலகி இருக்க வேண்டும் என்றுதான் உன்னிடம் கடுமையாக பேசினேன்..

ஆனால் அதுவே.. உன்னை இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று எண்ணவில்லை.. பிறகு எல்லாவற்றையும் சரி செய்து, உன்னை பார்க்க ஆவலாக வந்தேன்.. வருவதற்கு பத்து நாட்கள் முன் வரை .. அங்கே என் வீட்டிற்கு கூட போகாமல் ஆபீஸ் லேயே படுத்து .. சாப்பிட்டு வேலை முடித்தேன்..

வந்த பின்பு எனக்கு இருந்த அலுப்பில் உன்னிடம் பேசக் கூட முடியாமல் மூன்று நாட்கள் படுத்து விட்டேன்.. அதன் பின் நடந்ததுதான் தெரியுமே.. “ என்று முடித்தான்.

“ரதி ..  இதில் நான் எங்கே தப்பு செய்தேன் .. சொல்லு.. நான் திருத்திக் கொள்கிறேன்.. மற்றபடி உன்னை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் கண்ணம்மா.. எல்லோரையும் விட எனக்கு நீ முக்கியம்... இதை நான் உனக்கு எப்படி நிரூபிப்பது சொல்” என்றான் ஆதி..

ஹாய்.. friends.. ஆதியின் செயலுக்கு என்னால் முடிந்த வரை விளக்கம் கொடுத்து இருக்கிறேன்.. எப்படி இருக்கிறது என்று கமெண்ட் செய்யுங்கள்..

அடுத்த எபிசொட்ட்டில் அன்பே உந்தன் சஞ்சாரமே நிறைவு பெரும்..

Episode # 23

Episode # 25

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.