(Reading time: 22 - 44 minutes)

பிரயுவின் தங்கைகள் “அக்கா .. எங்களை மன்னித்து விடுங்கள்.. எங்கள் கல்யாணம் என்ற ஒன்று உங்கள் மேல் வைத்த பாசத்தை கூட மறக்க அடித்து விட்டது. அதனால் தான் நாங்கள் யாரையோ திருப்தி படுத்த, உங்களை நோகடிச்சுட்டோம்.. இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டோம்.. மாமா இங்கியே திரும்பி வந்துட்டதா சொன்னங்க.. சீக்கிரம் வீட்டிற்கு வந்து, எங்கள் பசங்களை பார்க்க மாமாவோடு வாங்க.. ப்ளீஸ் கா.. “ என்று அவள் கைகளை பிடித்து மன்னிப்பு கேட்க,

பிரயுவோ “ஏய்.. இதெல்லாம் என்ன.. ? உங்கள் மேல் எனக்கு கோபம் எல்லாம் இல்லை. சரியா? நான் சீக்கிரமே வரேன்.. இப்போ நீங்க கிளம்புங்க.. குழந்தைங்க தேட போறாங்க.. “ என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.. அவர்களின் கணவன்மார்களும் அவளிடம் தங்களால் தான் இவர்கள் இப்படி நடந்து கொண்டார்களோ என்று வருத்தப்பட்டு, அவளிடம் இனிமேல் தாங்களும் அவர்களை அழைத்து வருவதாக கூறினார்.

அவர்கள் வெளியே இருக்க, பிரயுவின் அப்பா, அம்மா மட்டும் உள்ளே இருந்தனர்.. பிரயுவின் அம்மாவோ

“ஏன் ப்ரத்யா.. இப்படி பண்ணின? நாங்க உன் நல்லதுக்கு தானே சொன்னோம்.. நீ அவங்க அங்கே இருக்கும்போது, உன்னாலே ரெஸ்ட் எடுக்க முடியாதுன்னு தானே சொன்னேன்.. அதுக்காக இவ்ளோ பெரிய விஷயத்தை சொல்ல மாட்டியா ? “

‘ஏன்.. அப்போ நீங்க அவங்க முக்கியம்ன்னு தானே நினைச்சீங்க.. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

‘உனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு எங்களுக்கு தெரிஞ்சா நாங்க அப்படி இருந்து இருப்போமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த சரியா போய்டும்.. அதுக்கு உங்க வீடு தான் பெட்டெர் ன்னு நினைச்சேன்.. இது தப்பா?”

“ஆனால் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ? எனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியல ? இந்த டெஸ்ட் , அந்த டெஸ்ட் ன்னு பண்ணும் போது எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா.. ? உங்ககிட்டேயே சொல்ல முடியல . வீட்டில் தனியா இருக்கிற அத்தை கிட்ட எப்படி சொல்ல முடியும் ? இல்ல.. வெளிநாட்டிலே தனியா இருக்கிற அவர்கிட்டதான் எப்படி சொல்வது ? இது எல்லாம் தான் எனக்கு உங்கள் மேல் கோபம்.. “

அவள் அப்பா அவளிடம் “ப்ரத்யா .. என்னம்மா இப்படி சொல்ற.. ? நீ எங்கள் பொண்ணும்மா.. அந்த சூழ்நிலைதான் எங்கள அப்படி நடந்துக்க வைச்சிருக்கு .. புரிஞ்சிக்கோம்மா .. “ என்று கெஞ்ச..

“சரி .. நடந்ததா விடுங்க.. நீங்க சாப்பிடீங்களா? மாத்திரை போட்டீங்களா ? “ என்று வினவ, அவர் பதில் சொல்லவும்,

“அப்பா .. உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா? நீங்க எப்படி நாலு வருஷம் வெளிநாடு போவார்ன்னு தெரிஞ்சும் கல்யாணம் செய்து கொடுக்க சம்மதிச்சீங்க?”

“முதல்லே மாப்பிள்ளதான்மா எங்கிட்ட பேசினார்.. அவர் பேசினத கேட்டதும், உன்னை நல்ல வச்சுப்பார்னு தோணிச்சு .. அதுதான் நான் சம்மதிச்சதுக்கு காரணம்.. நீ பொறுப்பும் , பக்குவமும் உள்ளவ.. உன்னால மானேஜ் பண்ண முடியும் நு தான் சரின்னு சொன்னேன் “

“ஆனால் இது தரகர் மூலமா வந்த வரன் தானேப்பா ..” இந்த கேள்விக்கு பதில் சொல்ல வரும்போது , வெளியே கதவு திறக்கும் சத்தம் கேட்டு, நிறுத்தினார்.

அங்கே ப்ரயு மாமியார், வித்யா வரவே, பிரயுவின் பெற்றோர்கள் வெளியே சென்றனர். அவர்களோடு ஆதியும் கையில் ஜூஸ் கொண்டு வந்தான்.  (ஷப்பா.. ஒரு வழியா ஜூஸ் வந்துச்சு )

வித்யா ப்ரயுவிடம் “அண்ணி.. இப்போ எப்படி இருக்கு ?” என்று வினவினாள்..

“ஹ்ம்ம். பரவாஇல்லை.. வித்யா “

“அண்ணி .. இனிமேல் இப்படி எல்லாம் எதையும் சொல்லாமல் இருக்காதீங்க..ப்ளீஸ்.. எங்களுக்கு நீங்களும் முக்கியம் தான் அண்ணி.. என்ன அதை காட்டாமல் இருந்தோமே தவிர, நீங்க இல்லாமல் அண்ணா இல்லை.. அண்ணா இல்லாமல் எங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க? “

“ஹேய். அப்படியெல்லாம் இல்லமா.. எல்லாரையும் சொல்லி கவலபடுத்த வேண்டாம்நு தான் நினைச்சேன்.. பையன் எப்படி இருக்கான் ? “என்று அவளிடம் வினவ, அவளும் சற்று நேரம் பேசிவிட்டு சென்றாள்.

பிரயுவின் மாமியார் “ப்ரயு. மனசுலே எதுவும் வச்சுக்கதேம்மா.. உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா நீயும் ஆதியும் வேணா தனியா இருந்துக்கோங்க.. நான் வாழ்ந்து முடிச்சவ .. நீங்க எனக்காக யோசிக்காதீங்க “ என்றார்.

“ஐயோ.. அத்தை .. அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நான் என்னிக்குமே அப்படி நினைச்சது இல்லை.. நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இவங்க ரெண்டு பேரயும் வளர்த்து இருப்பீங்க.. உங்களுக்கு அப்புறம் தான் நான்.. உங்கள யாரையும் பிரிக்கணும் நினைச்சதில்ல.,”

ஆதியும், அவன் அம்மாவும் பார்த்துக் கொண்டனர்.

“அப்படின்னா.. இனிமேல் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும் சரியா ?” என்றார்.

“சரி அத்தை.. “

“சரி ஆதி.. நீ அவள் கூட இரு .. நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ..” என்று கிளம்ப,

பிரயுவின் அம்மா .. “வேண்டாம் சம்பந்தி அம்மா.. நான் காலையிலேயே சமைச்சு எடுத்துட்டு வந்துட்டேன்.. அவங்க வெளியிலே சாப்பிட முடியாதுன்னு.. பிரயுவிற்கும் சேர்த்து எடுத்து வந்துட்டேன்.. “ என,

ஆதி.. “அப்படி என்றால் , பிரயுவும் அவங்க அப்பாவும் இதை சாப்பிடட்டும்.. நாம் எல்லோரும் கான்டீன் போய்விடலாம்” என்று அழைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.