(Reading time: 22 - 43 minutes)

ன்னடா இது நினைச்சதவிட மோசமானவங்களா இருப்பானுங்க போலயிருக்கு..அந்த பொண்ணாவது வெளிய வர டிரை பண்ணலாம்ல..

இல்லடா அந்த பொண்ணு கான்ஷியஸ்லயேயில்ல..ஏதோ மயக்கத்துலயேயிருந்தா..ஆல்சோ கை கால்லா கட்டிப்போட்டுருக்காங்கடா..பாக்கவே பாவமாயிருந்தது..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவளை காப்பாத்தனும்டா..சரி பரணி நாளைக்கு நா சாக்ட்சிட்ட பேசி எதாவது டீடெய்ல் கிடைக்குமாநு பாக்குறேன்..அதுக்கப்பறம் என்ன பண்றதுநு பாப்போம்…

றுநாள் உள்ளே நுழையும்போதே கெஸ்ட் கவுஸை நோட்டமிட்ட படியே வந்தான்..எதிரில் வந்த சாக்ட்சியை கவனிக்காமல் அவள் மீது மோதிக் கொண்டான்..

என்ன அண்ணா காலைலேயே கனவா??

சாரிடா அங்கே பாத்துட்டே வந்ததுல உன்ன கவனிக்கல..நா ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே??

என்ன அண்ணா சொல்லுங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இல்ல அங்க அவ்ளோ பெரிய கெஸ்ட் கவுஸ் பூட்டியேயிருக்கே மெய்டெய்ன் பண்றதில்லையா..

அது முதல்ல விநாயக் அங்கிள் தங்குறதுக்காக கட்டினதாம் அப்பறம் பாட்டியோட சண்டை போட்டு வீட்டை விட்டு போனப்பறம் மறுபடியும் வரவேயில்லை..இப்போ அதர்வா அங்கிள்தான் அத குடோன் மாறி யூஸ் பண்ணிட்டு இருக்காரு..முக்கியமான பைல்ஸ்லா அங்க இருக்காம் அதனால இப்போ கொஞ்ச நாளா மட்டும் நைட் ரெண்டு பேர் அங்க தங்கிகுறாங்க மத்தபடி பெருசா மெய்ட்டனன்ஸ்லா இல்லண்ணா..

ஓ…

ஏன் கேட்குறீங்க??

இல்லடா சும்மாதான் கேட்டேன்..சரி வா சாரை பாக்கனும் உள்ளே போலாம்..

மே ஐ கம் இன் சார்..

வா ராம்..மொதல்ல இந்த சாரை கட் பண்ணு A.Kநு கூப்பிடு..

அய்யோ நா எப்படி…

ஏன் ராம் யோசிக்குற..

இல்ல உங்களுக்கு நெருக்கமானவங்கதான் அப்படி கூப்பிடுவாங்கநு கேள்விபட்ருக்கேன் அதான்..

பரவால்லையே இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கியே..அப்போ என்னை பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சுருப்ப அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் என்கிட்ட உரிமை குடுத்துடமாட்டேன் தைரியமா அப்படியே கூப்பிடு..சரி எதாவது க்ளு கிடைச்சுதா ராம்..

சார்..சாரி A.K உங்க கெஸ் கரெக்ட் தான்..விநாயக் தான் அதர்வாவ வச்சு கேம் ஆடுறாரு..எந்த ஒரு விஷயத்தையுமே அவர்ட்ட கன்சல்ட் பண்ணாம உங்க பையன் பண்ணமாட்றாரு..அண்ட் விநாயக் பத்தி விசாரிச்ச வர எந்த ஒரு நல்ல ஒபினியனும் கிடைக்கல..

ம்ம் நினைச்சேன்..சரி ராம் உனக்கு கிடைக்குற இன்பர்மேஷன்க்கெல்லாம் முடிஞ்சா எவிடன்ஸ் கலெக்ட் பண்ணி குடு..அவனை மாட்ட வைக்குறதுக்கு யூஸ் ஆகும்..

திய வேளை..யாரும் அவ்வளவாக அறையைவிட்டு வெளியே வர மாட்டார்கள்..மெதுவாக கெஸ்ட் கவுஸ் நோக்கிச் சென்றான் ராம்..ஜன்னலின் வழியே எட்டிப்பார்க்க அவள் அதே இடத்தில் படுத்துக் கிடந்தாள்..என்ன செய்யலாமென்று யோசித்தவன் சிறிய கல்லை எடுத்து அவள் மேல் படும்படி எறிந்தான் எந்த அசைவுமில்லை..மீண்டும் முயற்சி செய்யலாம் என்று எண்ணி மறுபடியும் எறிய சிறு அசைவு அவள் மேல்..மெதுவாக கண்விழித்தவள் சுற்றும் முற்றும் ஓர பார்வையால் தேடினாள்..சில நிமிடங்களுக்குப்பின் ராமை கண்டவள் முதலில் பயந்தாள் பின் ராம் தன் மொபைலில் அவனது ஐடி கார்ட்டை காட்ட ஓரளவு ஏதோ புரிய சிரமப்பட்டு இழுத்து இழுத்து ஜன்னலின் அருகில் வந்தாள்…

இத பாருங்க பாயல் என் பேர் ராம் ACP சாரோட ஆள்தான் பயப்படாதீங்க..

சார் நீங்க எப்படி இங்க என்று அறைகுறை நிதானத்தில் கேட்டாள்..

அதெல்லாம் அப்பறம் சொல்றேன்..நீங்க எப்படி இங்க ஏன் மயக்கத்துல இருக்கீங்க எதாவது சொல்ல முடியுமா இப்போ..

அவனின் பதட்டத்தை உணர்ந்தவள் பயப்படாதீங்க சார் இப்போ யாரும் இங்க வரமாட்டாங்க..

அவளை ஆச்சரியமாய் ஒரு பார்வை பார்த்தான்,ஆமா சார் உண்மைதான்..எனக்கு அவங்க குடுக்குறது மயக்க மருந்து இல்ல போதை மருந்து ஒரு நாளைக்கு ரெண்டு டேப்லட் குடுத்துட்டு போவாங்க அத போட்டா மினிமம் 10 டு 12 ஹவர்ஸ்க்கு போதைல தான் இருக்கனும் போதை தெளிஞ்சாலும் ட்ரௌஸியாவே இருக்கும் சோ காலைல அவங்க கிளம்பும் போது அத குடுத்துட்டு போனா ஈவ்னிங் தான் கொஞ்சம் நினைவே வரும்..ஆனா ரெண்டாவது நாளே அத நா புரிஞ்சுக்கிட்டேன்..அவங்க தரதுல ஒரு மாத்திரைய மட்டும் போட்டுட்டு இன்னோரு மாத்திரைய அவங்களுக்கு தெரியாம தூக்கி போட்ருவேன் அதனால எப்பவுமே இந்த டைம்ல நா தெளிவாய்டுவேன்..ஆனா அவங்க வந்தப்பறமும் போதைல இருக்குறமாறியே நடிப்பேன் அதனால அவங்க என்ன பேசுறாங்கநு என்னால கவனிக்க முடியும்..அவங்க என் குடும்பத்தை வச்சு என்ன மிரட்டிட்டு இருக்காங்க ஒருவேளை நா இங்கிருந்து தப்பிக்க முயற்சி செஞ்சா என் குடும்பத்தையே கொன்னுடுவேன்னு சொல்லிருகாங்க அதனால தான் இங்கேயே இருக்கேன்..எப்படியும் ACP சார் எதாவது ஸ்டெப் எடுக்க ஆரம்பிச்சுருப்பாருநு தெரியும் அதான் பொறுமையாயிருக்கேன்..என காட்டாற்று வெள்ளமாய் அவனுக்குத் தேவையான முக்கிய தகவல்கள் அனைத்தையும் கூறி முடித்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.