(Reading time: 21 - 41 minutes)

24. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

மாலுமி இல்லாக் கப்பலைப் போல் மன்னனில்லா பாண்டியனாடு தத்தளித்துத் தவித்தது.கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆக்ரமிப்பை அதிகப்படுத்திக்கொண்டே சோழனின் படையும் அதன் பக்கத் துணையான சேரனின் படையும் பாண்டிய நாட்டுக்குள் ஊடுருவிக்கொண்டிருக்க பாண்டியப் படையையும் இறுதி மூச்சுள்ளவரை போராடிப் பார்பதென்று எதிரியின் பெரும் படையோடு முடிந்தவரை போராடிக்கொண்டுதான் இருந்தது.சில நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாதென்பது தெரிந்து போயிற்று பாண்டிய நாட்டுப்படைக்கு.பொதுவான யுத்த தர்மமான வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் இவர்கள் எந்த விதத்திலும் துன்பப்படுத்தப்படமாட்டார்கள் என்பதில்லாமல் சொல்லொணாத் துன்பங்கள் அவர்களுக்குத் தரப்பட்டன.பெண்கள் மானபங்கதிற்கு பயந்து கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள்.

முடிந்தது.. தலை நகராம் மதுரையும் சோழனால் பிடிக்கப்பட்டு அரண்மனைக்கோட்டையில் பாண்டிய நாட்டின் மீன் கொடி அறுத்தெறியப்பட்டு சோழனின் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டது. சோழனும் சேரனும் அடித்த கும்மாளத்திற்கும் கொண்டாட்டத்திற்கும்  அளவேயில்லாமல் போயிற்று... பாண்டிய வமிசத்தைப் பூண்டோடு அழிப்பேன் என சத்தியம் செய்திருந்த சோழன் காணாமல் போன இளவரசன் சுந்திர பாண்டியன் கட்டாயம் பாதுகாப்பான இடத்தில் யாரோ ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருப்பான் என எண்ணி ஆட்களை அனுப்பி நாடெங்கும் தேடச் செய்தான்.கையில் கிடத்தால் பாண்டிய இளவரசை கண்டந்துண்டமாக வெட்டி வீசுவேன் எனக் கொக்கரித்தான்.

யாரும் சற்றும் எதிர் பார்க்காத சமயம் அது.சோழனும் சேரனும் வெற்றிக் களிப்பில் இறுமாந்து கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த நேரம்...சோழனும் சேரனும் முகாமிட்டிருந்த பாண்டிய நாட்டுக்குள் நுழைந்தது அப்பெரும் படை.காட்டாற்று வெள்ளமென பாய்ந்து வந்த அப்படையை சோழ சேர படைகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.அவர்கள் அணிந்திருந்த உடையும் போர்க் கருவிகளும் வித்யாசமாக இருந்தன.கண்ணிமைக்கும் நேரத்தில் சட சட வென அவர்கள் வில்லிலிருந்து அம்புகளை அனுப்பி துரோகிகளின் படைகளைச் சாய்த்தனர்.வாளைச் சுழற்றிச் சுழற்றி சோழ சேர படை வீர்ரர்களை வெட்டி வீழ்த்தினர். அவர்கள் கையாளும் யுத்த முறைகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.புதிதாய் வந்த படையின் வேகத்திற்கு முன் சோழ சேரப்படைகளால் தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை.சற்றும் எதிர்பாராத தீவிர தாக்குதல்...முழுதாய் ஒரே நாள் போரில் வீழ்ந்தது சோழ சேரப் படை...அப்பெரும் படைக்குத் தலைமை தாங்கி வந்த இளைஞன் விறு விறுவென்று கோட்டை மீது ஏறினான் பறந்து கொண்டிருந்த புலிக்கொடியை அறுத்தெறிந்தான்.பாண்டியக்கொடியான மீன் கொடியை ஏற்றினான்.அவன் கீழே இறங்குவதற்குள் அவன் ஆணைப்படி சோழ சேர அரசர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பாது காப்பாய் எங்கோ கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அடுத்து சேர நாட்டுக்குள் நுழைந்தது அப்பெரும் படை.இப்படை முன் சேரப்படை எங்கனம் நிற்கும்?ஏற்கனவே சேர நாட்டுப்படை சோழனுக்கு உதவியாக பெருமளவு சென்றுவிட்டதால் மிச்சமிருந்த சிறு படையும் சீக்கிரமே இப்படையிடம் மண்டியிட்டது.அதிரடியாய் அரண்மனைக்குள் நுழைந்தான் படைத்தலைவனான அவ்விளைஞன்.சேர இளவரசன் மாறவர்மனைப் பிடிப்பதே அவன் நோக்கம்.தப்பிக்க இருந்தமாறவர்மன் இளைஞனின் கையில் மாட்ட சேர இளவரசன் மாறவர்மனை நிலத்தில் வீழ்த்தி கால்களையும் கைகளையும் கட்டி வீதியோடு இழுத்துவந்தான்.அன்னிலையிலேயே அவனை வண்டியில் ஏற்றி பாண்டிய நாட்டுக்குக் கொண்டுவந்தான்.மீண்டும் கீழே இறக்கி நிலத்தில் வீழ்த்தி வீதிதோறும் மக்கள் பார்த்து நிற்க இழுத்து வந்தான்.மக்களின் நடுவில் அவனைக் கிடத்தி தனது இடுப்பிலிருந்த நீண்ட வாளை எடுத்து அடேய்..பாவி..இப்படித்தானே உனது ஆட்களில் ஒருவன் சோழ இளவரசர் விமலாதித்தனைக் கொன்றான்..கொலைப் பழியை என் மீது போட்டான் என்றவாரே மாறவர்மனின் மார்பில் வாளை நுழைத்தான்.அது சேர இளவரசின் மார்பைத் துளைத்துக்கொண்டு முதுகுப்புறமாய் வெளியே வந்தது.ஆ...என்ற அலறலோடு அவன் உயிர் அடங்கியது.ஆஹா...ஆஹா..இப்போது புரிந்து விட்டது மாறுவேடத்தில் பெரும் படைக்குத் தலைவனாக வந்து சோழ சேர படையை வென்று பாண்டிய நாட்டை வென்றெடுத்து..மாறவர்மனையும் பழிவாங்கிய இளைஞன் ஹஸ்த குப்தன்தான் என்பது. ஆஹா..ஆஹா..எப்பேர்ப்பட்ட வீரனவன்..?

அடுத்து சோழ மன்னனையும் சேர மன்னனையும் இனி பாண்டிய நாட்டிடம் வாலை ஆட்டினால் உங்கள் வால் ஒட்ட நறுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு விடுவித்து அவரவர் நாட்டிற்கு அனுப்பிவைத்தான்.

எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது.இனி சுந்தர பாண்டியனை அழைத்து வந்து முடிசூட்டும்படி மக்களிடம் சொல்லிவிட்டு படைகளோடு வந்தவேகத்திலேயே திரும்பிச் சென்றான்.சத்தம் போடாமல் வந்து சத்தம்போடாமல் திரும்பிச் சென்ற படையை பாண்டிய நாட்டு மக்கள் மௌனப் படை என்று வருணித்தனர்.

அதன் பிறகு யாராலோ கடத்திச் செல்லப்பட்டதாக நம்பப்பட்ட சுந்தர பாண்டியன் அப்படியில்லாமல் மன்னர் குடுபத்திற்கு விசுவாசமானவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் திரும்பிவர பாண்டிய நாட்டுக்கு மன்னனாய் முடிசூட்டப்பட்டான்.ஆனாலும் தன் உடன்பிறந்த அக்காவால் தான் பெற்றோரை இழந்து அனாதையானதையும் பாண்டிய நாடு சந்தித்த அவலங்களையும் அவனால் மறக்க முடியவில்லை. எனவே தன் வாழ் நாளின் கடைசிவரை அக்காவுடன் எவிதமான தொடர்பையும் சுந்தர பாண்டியன் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.அவனது ஆட்சியில் பாண்டிய நாடு பல சுபிட்சங்களைக் கண்டது.மகோன்னத நிலையைத் தொட்டது.ஆனால் மதிவதனியின் கால்கள் மட்டும் மீண்டும் அம்மண்னைத் தொடவே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.