(Reading time: 21 - 41 minutes)

ம் மருமகனே என் தந்தையாகிய சுந்தர பாண்டியனின் சகோதரி மதிவதனி.. அதாவது என் அத்தை மீண்டும் இப்பாண்டிய நாட்டுக்கு வரவே இல்லை.. இங்கிருந்து ஹஸ்தனும் மதிவதனியும் சென்றபிறகு அவர்கள் எங்கே சென்றார்கள் ஹஸ்தன் எவ்வாறு படையுடன் இப்பாண்டிய நாட்டுக்கு வந்தார்?ஹஸ்தன் சோழனையும் சேரனையும் வென்று மாறவர்மனைப் பழிவாங்கிச் சென்றது வரை மட்டுமே என் தந்தை சுந்தரபாண்டியன் அறிந்திருந்தார்.அவர் அறிந்திருந்தவரை என் தந்தையால் எனக்குக் கூறப்பட்டது.அதன் பின் ஹஸ்தனும் அத்தை மதிவதனியும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் வாழ்க்கைப் பற்றியும் எதுவும் தெரியாது என பெரிய மன்னர் மதிவதனியின் கதையை சொல்லி முடிக்க..

பெரிய மன்னர் இதுவரை சொல்லிவந்த தன் பாட்டி மதிவதனியின் கதையை வாய் மூடாமல் கண்கொட்டாமல் கேட்டு வந்த குதிரைவீரனுக்கு இன்னும் வியப்பு அடங்கவே இல்லை. அப்படியே சுய நினைவை இழந்தவன்போல் அமர்ந்திருந்தான்.

மருமகனே..மருமகனே..குதிரைவீரனைத் தொட்டு அசைத்தார் பெரிய மன்னர்.

ஆ...சட்டென சுயத்திற்கு வந்தான் குதிரைவீரன்..

மாமா அவர்களே..பாட்டி மற்றும் பாண்டிய நாட்டின் கதையை கேட்கும் போது மிகவும் பிரமிப்பாயும்... கொஞ்சம் வருத்தமாகவும் கூட இருக்கிறது மாமா அவர்களே...

என்ன சொன்னீர்கள்? என்ன சொன்னீர்கள்..?மருமகன் அவர்களே பாட்டியா? யார் பாட்டி?யாரைப் பாட்டி என்றீர்கள்?வியப்புடன் கேட்டார் பெரிய மன்னர்..அவர் குரலில் மிகுந்த பரபரப்பு தெரிந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

இனியும் மறைப்பது நல்லதில்லை மாமா..இனி உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.அதற்கு முன் தங்களிடம் ஒன்றைக்கேட்டு அறிய விரும்புகிறேன் மாமா..

எதுவானாலும் கேளுங்கள் மருமகன் அவர்களே..

மாமா அவர்களே உங்களின் மருமகனாகிய நான் உங்களின் எதிரி என்று நீங்கள் கருதும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவனாய்..உங்களின் கலாசாரம் பண்பாடு மொழி அனைத்திலிருந்தும் வேறு பட்டவனாய் இருபவனென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் மாமா அவர்களே..என்னை தங்களில் ஒருவனாய் ஏற்க மறுத்து விடுவீர்களா..?

ஆ..இதென்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்?மருமகனே..நீங்கள் என் உயிருக்குயிரான என் மகளின் கணவர். அவள் மனதைக் கவர்ந்தவர்.மிகுந்த அறிவும் ஆற்றலும் உடையவர். அப்படியிருக்க சமயமும் மொழியும் கலாச்சாரமும் பழக்க வழக்கமும் இடையே எங்கே வரக்கூடும்..? ....அது போகட்டும் என் மனம் பரபரப்பாக உள்ளது பாட்டி என்று குறிப்பிட்டீர்களே யாரை அப்படி குற்றிப்பிட்டீர்கள் மருமகனே?சொல்லுங்கள் சொல்லுங்கள்...

மாமா அவர்களே....

ம்...ம்..சொல்லுங்கள் மருமகன் அவர்களே..என்னால் தெரிந்து கொள்ளும் ஆவலைத் தாங்க முடியவில்லை...

மாமா அவர்களே..உங்களின் தந்தை மன்னர் சுந்தர பாண்டியனின் அக்கா மதிவதனிதான் என்னுடைய தந்தை பிரம்ம குப்தரின் தாய்.எனவே தங்களின் அத்தை எனது பாட்டியார் ஆவார்.அதாவது தங்கள் அத்தை மதிவதனியின் கணவர் ஹஸ்த குப்தனே எனது தாத்தா.

என்ன? என்ன ?என் தந்தையின் அக்கா மதிவதனி உங்கள் பாட்டியா?ஹஸ்த குப்தன் உங்களது தாத்தாவா? இதென்ன இப்படிக் கூட நடக்குமா?நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?எவ்வளவு வருடங்களுக்கு முன்பு பிரிந்துபோன உறவு? எப்படி இப்போது ஒன்றானது?இது எப்படி நிகழ்ந்தது?இது காலத்தின் தீர்ப்பா?கடவுளின்  முடிவா?என் தந்தை வெறுத்த உறவை நான் ஏற்பதா?மறுப்பதா?இல்லை இல்லை..நான் மறுக்க இயலாது.. என் மகளின் சந்தோஷமும்,அவள் வாழ்க்கையும்தான் எனக்கு முக்கியம்.வேறு எந்த ஒன்றையும் நான் நினையேன்.சொல்லுங்கள் ..சொல்லுங்கள்..நீங்கள் எப்படி எதன் பொருட்டு இப்பாண்டிய நாட்டிற்கு வந்தீர்கள்?யார் உங்களை இங்கு அனுப்பியது?என்று அடுக்கடுக்காய் பரபரப்பாய்க் கேள்விகளைக் கேட்டார் பெரிய மன்னர்.

சொல்கிறேன் மாமா அவர்களே...என்னை உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வதாய் தாங்கள் சொன்னது எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது...அதற்காக தங்களுக்கு நன்றியினைத் தெரிவிக்கிறேன் மாமா அவர்களே..நான் எதற்காக இங்கு வந்தேன் யாரால் அனுப்பப்பட்டேன் என்பதைச் சொல்கிறேன்....

இப்பாண்டிய நாட்டின் இளவரசியாய் இருந்த மதிவதனி அதாவது என் பாட்டி என் தாத்தா குப்த இளவரசனான ஹஸ்த குப்தரை விரும்பி இப்பாண்டிய நாட்டையும் அவரது பெற்றோரையும் தம்பியையும் பிரிந்து அவரோடு இன்னாட்டைவிட்டு சென்றபிறகு அவர்கள் முதலில் சென்றது ஆந்திர ராஜ்ஜியதிற்குதான். போகும் வழிதோறும் இளவரசி மதிவதனி அழுது கொண்டேதான் இருந்தாராம்.ஆந்திராவில் தங்கள் ஆட்சியை நிறுவவேண்டுமென  ஹஸ்த குப்தரின் தந்தை மன்னர் குஹ குப்தர் பெரும் படையோடு தங்கியிருக்க அங்கே சென்ற ஹஸ்தன் தன் மனைவி மதிவதனியோடு தன் தந்தையைச் சந்திக்கிறார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.