(Reading time: 21 - 41 minutes)

வரும் இவர்கள் இருவரின் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ள அதே சமயம் தன் மகன் இளவரசன் ஹஸ்தன் எங்கிருக்கிறான் என்பதறியாது அவனின் இருப்பிடம் அறிய ஆட்களையும் ஒற்றர்களையும் நாலா புரமும் அனுப்பி வைத்திருந்திருக்க ஹஸ்தனும் மதிவதனியும் அங்கு சென்றடைந்திருந்த நேரம் அவ்வொற்றர்களில் சில பேர்  பாண்டிய நாட்டு இளவரசியும் குப்த இளவரசனும் அன்னாட்டைவிட்டு அகன்றதும் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வெளியேற உதவிய அரசி ருக்மாதேவி தன் கணவராகிய மன்னர் அதிவீரனுக்குத் தெரியாமல் தான் செய்த இச்செயல்...துரோகச் செயலாகும் என வருந்தி தற்கொலை செய்து கொண்டதையும் மகள் தான் விரும்பியவனோடு இரவோடிரவாக வெளியேறுவததை நேரில் கண்ட மன்னர் உடல் நலம் கெட்டு குதிரையிலிருந்து வீழ்ந்து இறந்ததையும் இளவசன் சுந்தர பாண்டியனை யாரோ கடத்திச் சென்றதையும் அறிந்து வந்து ஹஸ்த குப்தனின் தந்தையாகிய மன்னர் குஹ குப்தரிடம் கூறியதோடு சோழனும் சேரனும் பெரும் படையோடு பாண்டிய நாட்டிற்குள் புகுந்து துவம்சம் செய்வதாகக் கூறவும் இவை அனைத்தையும் அறிந்த மதிவதனி அழுது கதற அவளைச் சமாதான செய்ய யாராலும் இயலவில்லை.அன்னிலையில் பெரும் படையோடு ஆந்திராவில் முகாமிட்டிருந்த குஹ குப்தர் தனது படையோடு பாண்டிய நாடு சென்று நிலைமையைச் சீர் செய்து வருகிறேன் என்று கிளம்ப ஹஸ்தன் தனக்கு அங்கு முக்கிய பணியொன்று இருப்பதாகக் கூறி தானே   பெரும்படைக்குத் தலமை தாங்கிச் சென்று சோழ சேரப் படைகளை தோற்கடித்து..மாறவர்மனைப் பழிவாங்கி..சுந்தர பாண்டியனைக் கண்டுபிடித்து அவனுக்கு முடிசூட்ட  ஏற்பாடு செய்து விட்டுத் திரும்புகிறான்...

அதன் பிறகு ஹஸ்தனோடு மதிவதனியின் வாழ்க்கை இன்பமாகவே செல்கிறது.ஆனாலும் தன்னால்தான் தன் பெற்றோர் இறக்க நேரிட்டது என்பதையும் அதன் காரணமாகவே பாண்டிய நாடு கண்ட அவலங்களையும் தான் செய்த செயலால் தன் தம்பி தன்னோடு எவ்வித தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள விழல வில்லை விரும்பவுமில்லை எனபதையும் உணர்ந்து அடி மனதில் ஆறாத ரணத்தோடவே வாழ்கிறாள்..ஹஸ்தன்--மதிவதனிக்கு ஒரு மகன் பிறக்கிறான்.பிரம்ம குப்தன் என்ற பெயரோடு பின்னாளில் பட்டத்திற்கு வரும் அவனின் காலத்தில் குப்தர்களாட்சி  கிட்டத்தட்ட வட இந்தியா முழுதும் நீள்கிறது.

தென்னிந்தியாவிலும் அங்குமிங்குமாகக் காலூன்றுகிறது.இந்தக் கதையெல்லாம் பிரம்ம குப்தனின் மகனும் ஹஸ்த குப்தன் மதிவதனியின் பேரனுமாகிய எனக்கு எனது மதிவதனி பாட்டியாலேயே சொல்லப்பட்டது.

மதிவதனிப் பாட்டி என்னை தன் தந்தையின் பெயராகிய அதிவீரன் என்றே அழைப்பார். அவர் என்னை அணைத்து உச்சி முகரும் போதெல்லாம் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழியும்.என் தங்கைக்கு தன் தாயின் பெயராகிய ருக்மா தேவி என்ற பெயரையே சூட்டினார்.என்னையும் என் தங்கையையும் தன் உயிராகவே நினைத்தார்...நான் சிறுவனாக இருந்தபோது எப்போதும் என் கைபிடித்து கண்ணே அதிவீரா என் அன்புப் பேரா..இந்த பாட்டிக்கு ஓர் ஆசையும் கனவும் உள்ளது.அவை உன்னாலேயே நிறைவேற்றப்படும் என நம்புகிறேனாடா என் அன்புப் பேரா..செய்வாயா?அதனைச் செய்து முடிப்பாயா?எனக் கேட்பார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

நானும் ஓ செய்வேன் பாட்டி...என்ன செய்ய வேண்டும் பாட்டி என்று கேட்பேன்.

அதற்குள் பாட்டியின் கண்கள் கலங்கிவிடும்.கண்ணீர் வழிய ஆரம்பிக்கும்.நான் அவர் கண்ணீரைத் துடைப்பேன்.அவர் என் கைளைப் பிடித்தபடி அதிவீரா என் கண்ணே..நீ பெரியவனானதும் பாண்டிய நாட்டிற்குச் செல்லவேண்டும்..நான் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய அரண்மனையில் உன் கால்களைப் பதிக்கவேண்டும்.என்னால் பிரிந்த உறவு உன்னால் புதுப்பிக்கப் பட வேண்டும்.உன் ரத்த பந்தங்கள் அங்கு உள்ளன.எவ்வகையிலாயினும் நீ அப்பந்தங்களை மீண்டும் உறவாக்கிக் கொள்ள வேண்டும்.அங்கு உனக்கு என் பிறந்த வீட்டில் மருமகனாக வாய்ப்பு கிடக்குமேயானால் அவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.என்னால் ஏற்பட்ட அவப்பெயரை என் பேரனாகிய நீ துடைக்கவேண்டும்.என் தாய் தந்தையருக்கும் தம்பிக்கும் நான் செய்த துரோகத்தை மறக்க முடியவில்லையடா..என் பேரா..என் கணவரும் உன் தாத்தாவுமாகிய ஹஸ்தனோடு நான் வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.ஆனாலும் நான் என் நாட்டிற்கும் பெறோருக்கும் உடன் பிறந்தவனுக்கும் பெரும் துரோகத்தையே செய்துள்ளேன் என்பதை உணர்ந்த நேரம் முதல் என் மனதில் அமைதி இல்லை.இது என் ஊழ் வினையின் காரணமா?அனறி என் சுயனலத்தால் விளைந்த கேடா?தெரியவில்லையடா என் கண்ணே..இவ்வாறு என் மதிவதனி பாட்டி அடிக்கடி என் கைகளைப் பிடித்து அழுவார்.தன் பிறந்த வீட்டோடு என்னை உறவைப் புதுப்பிதுக்கொள்ளுபடி கேட்பார்...என குதிரைவீரன் மிச்சக் கதையையும் தான் எதற்காக பாண்டிய நாட்டுக்கு வந்தேன்?யார் தன்னை அனுப்பியது என்ற விபரங்கலையெல்லாம் சொல்ல...

அஹா ஆஹா..கேட்கவே மிகவும் துன்பமாய் இருக்கிறது அத்தையின் மனக்கஷ்டங்கள்...காலம் எத்தகைய மாற்றங்களையெல்லாம் செய்துவிட்டது..?விதியை யாரால்தான் மாற்றமுடியும்?.பிரிப்பதும் விதி.மீண்டும் இணைப்பதும் அவ்விதியே. ஆனாலும் உங்களுக்கு மதிவதனி அத்தை.... தாத்தாவாகிய அதிவீரரின் பெயரையே வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது மருமகனே..அதோடு நீங்கள் இந்த அளவு தெளிவாக தமிழ் மொழியைப் பேசுவது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது..

ஆம் மாமா...நான் மட்டுமல்ல எங்கள் அரண்னையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அனைவருமே தமிழ் மொழியில் நன்கு பேசக்கூடியவர்கள்தான்.அதற்குக் காரணம் என் பாட்டிதான்.மதிவதனி பாட்டி தன் கடைசி மூச்சுவரை பாண்டிய நாட்டையும் தன் பெற்றோரையும் தன் தம்பியான தங்கள் தந்தை சுந்தரபாண்டிய மன்னரையும் மறக்கவே இல்லை.அவரின் உயிர் பிரியும் வேளையிலும் என் கைபிடித்து அவரின் ஆசையையும் கனவையும் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்...மாமா என்றான் மிகுந்த வருத்தத்தோடு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.