(Reading time: 21 - 41 minutes)

ளவரசி அபரஞ்சிதா பாண்டிய நாட்டுக்கு வாரிசைப் பெற்றுத் தரப்போகிறார் என்பதை அறிந்த நாட்டு மக்களின் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காமல் போயிற்று.இவ்விஷயம் குப்தராஜியம் சென்று அடைந்த போது மிக அகண்ட சாம்ராஜ்ஜியமான குப்த ராஜ்ஜியம் முழுதும் பெரும் எழுட்சியோடு கோலாகலத்தோடு மகிழ்ச்சியைக் கொண்டாட ஆரம்பித்தது.முதன் முதலாய் ஹஸ்தனுக்குப் பிறகு குதிரை வீரனுக்குப்பிறகு வெளிப்படையாய் உறவைச் சொல்லிக்கொண்டு குப்த அரசக்குடும்பம் பாண்டிய   நாட்டுக்குள் மகிழ்ச்சியோடு கால் பதித்தது.மதிவதனியின் ஆன்மா நிச்சயம் சந்தோஷப்பட்டிருக்கும்.நிம்மதி அடைந்திருக்கும்.

மாதங்கள் கிடுகிடுவென நகர..இப்போது அபரஞ்சிதா பிரசவ அறையில்.அரைவாசலில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தான் அதிவீரன் சாணக்கியன்.

கவலையோடும் பேரன் அல்லது பேத்தியின் வரவை ஆவலோடும் எதிர்பார்த்துக் காத்து அமர்ந்திருந்தனர் பெரிய மன்னரும் மகாராணியும்.

அறையின் கதவு மெல்லத் திறக்க ..வெளியே வந்தார் மருத்துவச்சி...மங்களம் உண்டாகட்டும்..பெரிய மன்னர்..மகாராணி அவர்களே தாங்கள் தாத்த பாட்டி ஆகிவிட்டீர்கள்....தாங்களுக்கு பேத்தி ஒருவரும் பேரன் ஒருவருமாய் இரண்டு பேரப்பிள்ளைகள் பிறந்துள்ளனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

போறுத்தலுக்குரிய புது மன்னர் அவர்களே தாங்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரு குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளீர்கள்.

ஆஹா..ஆஹா...எங்களுக்குப் பேத்தியும் பேரனும் பிறந்துள்ளனர் நாங்கள் தாத்தா பாட்டி ஆகிவிட்டோம்  இன்னாட்டுக்கு வாரிசுகள் பிறந்தாகி விட்டனர் என்று ஆனந்தக் கண்ணீரோடு பேத்தியையும் பேரனையுயும் பார்க்க உள்ளே செல்ல... சாணக்கிய குப்தன் பாட்டி நீங்கள் எனக்கு மகளாக மீண்டும்  இன்னாட்டு இளவரசியாக வந்து பிறந்து விட்டீர்களா?அப்படிப் பிறந்த நீங்கள் உங்கள் தம்பி சுந்தர பாண்டியனையும் உங்களோடு அழைத்து வந்து விட்டீர்களா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.அப்படி நினைக்கும் போதே அவன் மனம் நிறைந்தது அவன் கண்கள் பனித்தன.

பேத்தியையும் பேரனையும் பார்த்த மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் வெளியே வந்தார்கள் பெரிய மன்னரும் மகாராணியும்.

அடுத்து அவசர அவசரமாக தன் குழைதைகளைப் பார்க்கும் ஆவலோடு உள்ளே நுழைந்தான் குதிரைவீரனாக அறிமுகமாகி அபரஞ்சிதாவால் மட்டுமல்லாது பாண்டிய நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்படும் எதிர்காலத்தில் பாண்டிய நாட்டைமட்டுமல்லாது குப்தராஜ்ஜியத்தையும் மகா சக்ரவர்த்தியாகி ஒரு குடையின் கீழ் ஆளப்போகும் அதிவீரன் சாணக்கியன்.

தொட்டிலில் அருகருகே வாயில் விரலைப் போட்டபடி படுத்துக்கிடந்தனர் குழந்தைகள் இருவரும். அருகே சென்று குனிந்தவன் என் செல்ல மகளே...என் அன்பு மகனே என்று கொஞ்சியபடி குழந்தைகளின் கன்னங்களில் மாறி மாறி லேசாக முத்தமிட்டான்.குழந்தைகளும் ஏதோ புரிந்தது போல க்கும்...க்கும்.. க்ளுக்..க்ளுக்,,என்று சப்தமெழுப்ப அட என் கண்மணிகளா..அப்படியா சொல்கிறீர்கள்..?நீங்கள் சொன்னால்.. உங்கள் தந்தை இந்த சாணக்கியன் கேட்கமாட்டானா என்ன..?நீங்கள் சொன்னதை அப்படியே செய்கிறேன் என்றபடி மஞ்சத்தில் படுத்தபடி குழந்தைகளையும் கணவரையும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த அபரஞ்சிதாவின் அருகில் சென்றான்.

அபி..கண்ணே அபரஞ்சிதா..மெல்ல அழைத்தான்...

ம்.....

நம் குழந்தைகள் இருவரும் கொள்ளை அழகு இல்லையா அபி..?

ஆம்...அன்பரே..

அவர்கள் என்னிடம் என்ன சொன்னார்கள் தெரியுமா..?இல்லை இல்லை என்ன ஆணையிட்டார்கள் தெரியுமா..?

என்னவாம்..?

அவர்கள் கன்னத்தில் நான் முத்தமிட்டேனாம்...

அதற்கென்ன..?

எங்களுக்கு மட்டுதான் முத்தமா..?எங்கள் தாய்க்கு இல்லையா..?அவருக்கும் முத்தம் கொடுத்தால்தான் இனி எங்கள் அருகில் வரலாம்..இது எங்கள் ஆணை என்கிறார்கள் நம் பிள்ளைகள் இருவரும்.

ஓ..அப்படியா சொன்னார்கள்...?

ஆம்..அப்படித்தான் சொன்னார்கள்..என் பிள்ளைகளின் கட்டளையை நான் மறுப்பேனா என்ன.?.நீங்கள் இருவரும் சொன்னபடியே செய்கிறேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன் அபி...

அதனால்...?

பிள்ளைகள் சொன்னதை இந்த தந்தை கேட்பான் என்றபடி அபியின் முகம் நோக்கி அவளின் இதழ்களை நோக்கிக் குனிந்தான் அதிவீரன் சாணக்கியன், 

...சுபம்...

அன்பு நெஞ்சங்களே இதுவரை இக்கதையினைத் தொடர்ந்து படித்தும்..படித்து கமென்ட் கொடுத்தும் எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி+அன்பு...   நன்றி..நன்றி வணக்கம்....

Episode 22

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.