(Reading time: 21 - 41 minutes)

திவதனி அத்தை எந்த அளவு மன வருத்தத்தோடு பிறந்த வீட்டுப் பிரிவை எண்ணி வாழ்ந்தார் என்பதைக் கேட்க மிகுந்த வருத்தமாய் உள்ளது மருமகன் அவர்களே...

வருந்தாதீர்கள் மாமா அவர்களே..இப்போது அத்தையின் ஆசையும் கனவும்தான் நிறைவேறி விட்டதே..

அவர் ஆசியுடன் இனி நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும் மாமா அவர்களே..

ஆம்...ஆம்...மருமகனே..நீங்கள் சொல்வது சரிதான்..அத்தையின் ஆசியால் இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்  ..மருமகனே நீங்கள் குப்த ராஜ்ஜியம் முழுவதுமே அதிவீரன் என்ற பெயரிலேயே அறியப்படுவீர்களா..?..

இல்லை மாமா அவர்களே ..மதிவதனி பாட்டி மட்டுமே அப்பெயரால் எனை அழைப்பார்.ஆனால் குப்த வமிசத்திற்கென உள்ள வேறு பெயரும் எனக்குண்டு..

அப்படியா..?அப்பெயர் எதுவென்பதை அறிய ஆவலாய் உள்ளேன்....

மாமா அவர்களே..குப்த வமிசத்திற்குப் பெரும் தொண்டாற்றியவரும் அர்த சாஸ்தரமெனப்படும் போர்த் தந்திரங்களை விவரிக்கும் நூலை எழுதியவரும்  எங்களின் குப்த வமிசத்தின் தலை சிறந்த மன்னரான சந்திரகுப்தருக்குப் பக்க பலமாய் இருந்தவருமான மாமனிதர் சாணக்கியரின் நினைவாக அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எனக்கு சாணக்கியன் என்ற பெயர் வைக்கப்பட்டது.ஆம் மாமா அவர்களே.... நான் சாணக்கியா...சாணக்கிய குப்தன்...

ஆ..என்ன..?என்ன.. நீங்கள் சாணக்கிய குப்தரா? வியப்பின் எல்லையைத் தொட்டுவிட்டவர்போல் பெரு மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றார் பெரிய மன்னர்..தாங்கள் சாணக்கிய குப்தரா...சாணக்கிய குப்தரா..?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

ஆஹா..ஆஹா..உங்களைப் பற்றி அறியாதவர் எவருமிலர்.தங்கள் வீரமும் அறிவும் திறமையும் பராக்கிரமும் செயற்கரிய தங்களின் சாதனைகளும் உலகம் முழுதும் அல்லவா பரவியுள்ளது?கதை கதையாய்ப் பேசப்படுகிறதே அனைத்தும். ..அப்பேற்பட்ட தாங்களா என் மருமகன்? என் மகளின் கணவர்?எப்பேற்பட்ட பாக்கியம் நான் செய்திருக்கிறேன்? முடிந்து போன சொந்தம் மீண்டும் உயிர் பெற்றது...அத்தை மதிவதனியின் வாரிசு பாண்டிய நாட்டுக்கு மன்னரானது எப்பேற்பட்ட மகிழ்ச்சியான விஷயம்.அப்படியே குதிரைவீரனின்.. இல்லை இல்லை அதிவீரனின்..இல்லை இல்லை அதிவீரனான சாணக்கிய குப்தனின்  கைகளை தாங்க முடியாத மகிழ்ச்சியோடு பற்றிக்கொண்டார் பெரிய மன்னர்.

அதில் அப்பற்றுதலில் ரத்த பந்தமும் ஒட்டியிருந்தது.ஆம் மதிவதனி..பெரிய மன்னருக்கு அத்தை.. சாணக்கியனுக்கு அதாவது பாண்டிய நாட்டின் புதிய மன்னருக்கு.. இளவரசி அபரஞ்சிதாவின் கணவருக்கு பாட்டி இல்லையா?

அதிவீரனாகிய சாணக்கிய குப்தனுக்கும் பெரு மகிழ்ச்சி..தன் பாட்டி மதிவதனியின் ஆசை, கனவு நிறைவேறி விட்டதென்று.

மகளே அபரஞ்சிதா..இங்கே வாம்மா...அழைத்தார் பெரிய மன்னர்..

இதோ வருகிறேன் தந்தையே...அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து எழுந்த இளவரசி அபரஞ்சிதா எழுந்த வேகத்தில் அப்படியே மயங்கி வீழ்ந்தாள். 

கண்களை மூடியபடி மஞ்சத்தில் கிடந்தாள் அபரஞ்சிதா.சுற்றிலும் பெரிய மன்னர் மகாராணி சாணக்கியன் மூவரும் கவலையோடு நிற்க தலைமை மருத்துவச்சி அபரஞ்சிதாவின் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் என்ன சொல்லப்போகிராறோ என்ற பதைபதைப்பில் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவர்களுக்கு அவரின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியைப் பார்த்த்ததும் கொஞ்சம் நிம்மதியாயிற்று.

பெரிய மன்னர் அவர்களே..வணங்குகிறேன்...நன்மை உண்டாகட்டும்...ஒரு மகிழ்ச்சியான செய்தி....

தாங்கள் தாத்தாவாகப் போகிறீர்கள்...மகாராணி அவர்களே தாங்கள் பாட்டியாகப் போகிறீர்கள்..இளவரசி அவர்கள் தாயாகப்போகிறார்..என்று இரு கைகளையும் கூப்பி மகிழ்ச்சியோடு கூறிவிட்டு புது மன்னர் அவர்களே தாங்கள் தந்தையாகப் போகிறீர்கள்...என்றார் அதிவீரன் சாணக்கியனை பார்த்து.

ஆஹா..ஆஹா..நான் தாத்தா வாகப்போகிறேன்..நான் தாத்தாவாகப் போகிறேன்..எப்பேற்பட்ட சந்தோஷமான செய்தி இது...என்று பெரிய மன்னர் குதூகுலத்துடன் கைத்தட்டி ஆரவாரம் செய்ய மகாராணி..அப்ரஞ்சிதாவை நெருங்கி மகளே.. என்று தாங்கமுடியாத மகிழ்ச்சியோடும் பாசத்தோடும் அழைத்தபடி இளவரசியின் உச்சந்தலையில் குனிந்து முத்தமிட்டார்.

மகாராஜா கழற்றிக்கொடுத்த முத்துமாலைகள் பலவற்றோடு முகமெங்கும் மகிழ்ச்சியாக வாயெல்லாம்  பல்லாக அவ்வறையை விட்டு வெளியேறினார் மருத்துவச்சி.

மெள்ளக் கண் விழித்தாள் அபரஞ்சிதா.படுக்கையிலிருந்து எழ முயன்ற அவளை..மகளே அபி...பார்த்து.. பார்த்து..மெதுவாய் மெதுவாய்...இனி நீ மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..எங்கள் பேரனோ பேத்தியோ உன் வயிற்றில் இருக்கிறார்கள்..இந்த நாட்டின் அடுத்தவாரிசு இப்பொழுது உன் வயிற்றில்...

என்று ஏக காலத்தில் பெரிய மன்னரும் மகாராணியும் சொல்ல வெட்கத்திலும் மகிழ்ச்சியிலும் முகம் சிவந்தது அபரஞ்சிதாவுக்கு.

இங்கிதம் தெரிந்த பெரிய மன்னரும் மகாராணியும் அவ்விடம்விட்டு வெளியேற தேன் குடித்த நரிபோல் அல்லது வண்டு போல் நின்றுகொண்டிருந்த குதிரைவீரன் இல்லை இல்லை அதிவீரனாகிய சாணக்கியன் அபரஞ்சிதாவை நெருங்கினான் தந்தையாகப்போகும்  மகிழ்ச்சியோடும்,ஆசையோடும்.....

....................................................................................................................................................................................

உஷ்... சின்ன இடை வேளை..

......................................................................................................................................................................................

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.