(Reading time: 22 - 43 minutes)

பாயல் ரியலி யு ஆர் கேரேட்..தங்க்ஸ் பார் ஆல் தி இன்பர்மேஷன்..உங்களை இங்க பார்ப்பேன்னு நினைச்சு கூட பாக்கல..

ம்ம் புரியுது நானும் என்ன கொன்டுவாங்கநு தான் நினைச்சேன் ஆனா என்னை கொன்னு அது போலீஸ் கேஸ்னு ஆச்சுன்னாஅவங்க வேலைக்கு இடைஞ்சல் வந்திட கூடாதுநுதான் விட்டு வச்சுருக்காங்க சார்..பாரினர்ஸோட அவங்க டீலிங் முடிஞ்ச அடுத்த செகண்ட் என்கதைய முடிச்சுருவாங்க..அதுமட்டும் இல்லாம அவங்க குடுக்குற இந்த ட்ரெக்ஸ்ஸ கன்டினியஸ்ஸா எடுத்துகிட்டாலே போதும் அவங்க கொல்லனும்னு அவசியமேயில்லை..

அப்டிலாம் ஒண்ணும் நடக்காது பாயல் நாங்க பாத்துக்குறோம்..எனக்கு அந்த ஹாஸ்பிட்டல் உள்ளே நுழைய எதாவது சீக்ரெட் ரூட் வேணும் உங்களுக்கு எதாவது நியாபகம் வருதாநு பாருங்க நாளைக்கும் இதே நேரம் நா வரேன் ஜாக்கிரதையா இருங்க கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்றேன்..என்று கூறி பாதுகாப்பாக அந்ந இடத்தைவிட்டு நகர்ந்தான்..

ன்று வேலை முடிந்து சென்றவுடன் பரணியிடமும் ACPயிடமும் விஷயத்தை கூறியவன் அடுத்து செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டான்..அதில் முதல் வேலையாக அவளுக்கு கொடுக்கப்படும் போதை மருந்தை நிறுத்தவேண்டும்..அதற்கான வேலையில் இறங்கினான் பரணி..காலையிலேயே அமர்நாத் பவனை ஒட்டி மறைவாக தன்னுடைய இருசக்கர வாகனத்தோடு காத்திருந்தான்..சிறிது நேரத்திலேயே ராம் குறிப்பிட்டிருந்த அடையாளத்தோடு கார் ஒன்று வெளியே வர அதனை பின் தொடர்ந்தான்..அவர்களை பற்றிய விவரத்தை புகைப்படத்தோடு ACPக்கு அனுப்பி வைத்தனர்..

அன்று இரவு வந்தவர்கள் அவளுக்கு போதை மருந்தை கொடுக்கவில்லை ஆச்சரியமாய் இருந்தாலும் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமலிருந்தாள்…இரண்டு நாட்கள் கழித்து மதியம் அன்றுபோலவே கெஸ்ட் கவுஸிற்குச் சென்று அவளை அழைத்தான்..

ஹவ் ஆர் யு பாயல்??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

பைன் சார்..தங்க் யு பார் யுவர் ஹெல்ப் என்ன பண்ணீங்க இப்போ எனக்கு டேப்லெட்டே குடுக்குறதில்ல..

ஒரு சின்ன ப்ளேதான் பாயல்..டிப்பார்ட்மென்ட்ல இருக்குறவங்கள வச்சு அதர்வாக்கு தெரியாம உங்களுக்கு குடுக்குற ட்ரெக்ஸ்ஸ நிறுத்த சொன்னோம்..

அப்போ போலீஸ்ல இருந்து யார் ஹெல்ப் பண்றாங்கநு கண்டுபிடிச்சுட்டீச்களா??

இன்னும் இல்ல..பட் நீங்க குடுத்த அந்த க்ளுதான் இப்போ உங்களை சேவ் பண்ண யூஸ் ஆயிருக்கு..அதாவது டிபார்ட்மெண்ட்ல இருக்குற அதர்வா வோட ப்ரெண்ட் மாதிரி ஒருத்தர இங்க வர பாடிகார்ட்ஸ்கிட்ட பேச வச்சோம்..அதுக்கு முன்னாடி இங்க வரவங்களோட புல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிணோம் ரெண்டு பேருமே அதர்வாக்கு ரொம்ப விசுவாசமானவங்க அதுவும் இல்லாம ரொம்ப வருஷமா இங்க வேலை பாக்குறவங்க..கண்டிப்பா இவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரையும் நம்பி உங்களை விடமாட்டான்..சோ நீங்க குடுத்த ஆடியோவ வச்சு அதுல ACPக்கு பரிட்சையமான வாய்ஸ்தான் டிபார்மெண்ட் ஆளாயிருக்கும்நு முடிவு பண்ணி அந்த வாய்ஸ்லயே பேச வச்சோம்..உங்களை சேவ்வா பாத்துக்கனும்,ஆல்சோ அந்த ட்ரெக்ஸ் குடுக்க வேண்டாம்..பாரினர்ஸ்ஸோட நம்ம டீலிங் எப்போ முடியும்நு தெரியல சோ அதுகுள்ள அந்த பொண்ணு இறந்து போச்சுநா அதர்வாக்கு தான் பிரச்சனை..அதர்வா கெஸ்ட் கவுஸ்க்கு எப்போ வரேன்னு சொல்றானோ அப்போ மட்டும் டேப்லெட் குடுங்க இது அதர்வாக்கே தெரிய வேண்டாம்..அப்பறம் அவன் எனக்கு பிரச்சனை வந்தா பாத்துக்கலாம் அது இதுநு சொல்லுவான்..நாமதான் அவன காப்பாத்தனும் அதான் சொல்றேன்னு சொல்லி வச்சுருக்கோம் பாயல்..

சார் அவங்க கண்டுபிடிச்சுட்டாங்கநா.?? குரலில் பதட்டம் அப்பட்டமாய்..

இல்ல பயப்படாதீங்க..அவங்க கண்டுபிடிக்காத அளவுக்கு நாங்க பாத்துக்குறோம் தைரியமா இருங்க..

ஏன் சார் இவங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் தெரியும்நு சொல்றீங்க அப்போ இவங்களை வச்சே அதர்வாவ அரெஸ்ட் பண்ண முடியாதா??

இல்ல அது அவ்ளோ எடுபடாது பாயல்..இவங்க யாருனே தெரியாதுநு சொல்லி கேஸை முடிச்சுட்டு போய்ட்டே இருப்பாங்க..பக்கா எவிடென்ஸ் வேணும் எல்லாத்துக்கும்..சரி ஹாஸ்பிட்டல்குள்ள போறத பத்தி கேட்டுருந்தேனே எனி ஐடியா??

யா நானே சொல்லனும்னு நினைச்சேன் சார் என்று அவளுக்குத் தெரிந்த விவரங்களை கூறினாள்..

ஓ.கே பாயல் தேங்க்ஸ்..நீங்க சேவ்வா இருங்க அடிக்கடி நா இங்க வந்தா ப்ராப்ளமாய்டும்..சோ உங்கள நெக்ஸ் வீக் மீட் பண்றேன்,எனி ஹவ் நா இங்கதான் இருப்பேன் சோ உங்களை வாட்ச் பண்ணிட்டுதான் இருப்பேன் டோண்ட் வொரி..என்றவாறு அவ்விடத்திலிருந்து சென்றான்..

ன்றிரவே பாயல் கூறிய வழியில் பரணியோடு ஹாஸ்பிட்டலினூள் நுழைந்தான் ராம்..இன்பேஷண்ட்ஸ் தவிர வெளியிலிருந்து ஆள்நடமாட்டம் இல்லாததால் ஓரளவு ப்ரச்சனையின்றி நுழைந்தனர்..பின்புறமாகவே முன்னேறிச் செல்ல அனைத்து அறைகளிலும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க..மருத்துவர்களின் அறைகள் என்பதை புரிந்து கொண்டனர்..சிறிது தூரம் தள்ளி ஒரு அறையில் வெளிச்சம் தெரிய ஆர்வத்தோடு சென்றனர் ஆனால் அங்கு இரவு பணி பார்க்கும் மருத்துவர் மட்டுமே இருந்தார்..எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்கும் போதே சட்டென ஏதோ தோன்ற இருவருமே மேலே பார்த்தனர்..அங்கு இரு அறைகளில் வெளிச்சம் தெரிய அருகிலிருந்த பைப்பை பிடித்து  ஏறி ஏசி பாக்ஸ்ஸிற்கான ஸ்லப்பில் அமர்ந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.