மெதுவாக எட்டிப்பார்க்க உள்ளே அதர்வா யாரோ இருவருடன் பேசிக் கொண்டடிருந்தான்..அருகில் இரு வெளிநாட்டவர்கள் டாக்டர் உடையோடு..மெதுவாக தாங்கள் கொண்டு வந்திருந்த கேமராவில் அவர்களை பதிவு செய்து கொண்டனர்..அருகில் இருப்பவன்தான் விநாயக்காக இருக்க வேண்டுமென்று வயதை வைத்து தோன்றியது ராமிற்கு..இன்னொருவரின் தோரணையே உணர்த்தியது காவல்துறை என்று..ஏனோ ராமிற்கு மனம் வலித்தது..காவல்துறை என்பது எவ்வளவு கண்ணியமான ஒன்று..மக்களை பாதுகாக்க வேண்டிய இவர்களே இப்படி எல்லை மீறுவதா..அவர்களின் பேச்சு சத்தத்தில் சிந்தனை கலைந்தான்..
என்ன அதர்வா அவனை வெளியே அனுப்புறதுக்கு எதாவது வழி யோசிச்சியா??
இல்லை மாமா நாளுக்கு நாள் அப்பாவோட நெருக்கமாய்ட்டேதான் போறான்..சின்னதா எதாவது நா சொன்னாகூட அப்பா அவனுக்கு தான் சப்போர்ட் பண்றாரு..
எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஏனோ சந்தேகமாதான் இருக்கு எஸ்.எம் குரூப்க்குள்ள நுழையறதுக்கே எவனும் பயப்படுவான் ஆனா இவன் இவ்ளோ நாள் தாக்குபிடிக்குறான்னா.,சம்திங் ராங்..-விநாயக்…
சார் டோண்ட் வொரி அப்படிலா ஒண்ணும் ஆகாது..அப்பறம் நா எதுக்கு இருக்கேன்..டிப்பார்ட்மெண்ட் வச்சு நா பாத்துக்குறேன்..
ம்ம்ம் அந்த பாயல் எப்படியிருக்கா??
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அதெல்லாம் நம்ம பசங்க பக்காவா பாத்துக்கிறாங்க மாமா..இப்படியே நாம குடுக்குற ட்ரெக்ஸ்ஸ சாப்ட்டுடே இருந்தா கொஞ்ச நாள்வ போய் சேர்ந்திருவா.,போஸ்ட்மார்ட்டம் பண்ணிணாலும் போதைக்கு அடிமையாகி அதுனாலதான் செத்துட்டானு வரும்..நாம மேல டவுட் வராது..
விநாயக் ,அங்கிருந்து வேணா அவளை இடம் மாத்திரலாமா அதர்வா??எவனோ வேற உள்ள நுழைஞ்சுருக்கான்..
மாமா அந்த ராமை நினைச்சு நீங்க ஏன் இவ்ளோ பயப்படுறீங்க அதெல்லாம் ஒண்ணும் ஆகாது அவ அங்கயிருக்கறதுதான் சேவ்..
ராமும் பரணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..
இருந்தாலும் நீ கொஞ்சம் அதிகமாவே அவன் விஷயத்துல அலட்சியமா இருக்குறமாறி இருக்கு பி கேர்புல்..
அங்கிருந்து மெதுவாக வெளியே வந்தவர்கள் தங்கள் இடத்தை அடைந்து தாம் சேகரித்த விவரங்களை போட்டோவோடு ACPக்கு அனுப்பிவிட்டு,ஷால் வீ ஸ்பீக் நவ் என்று குறுஞ்செய்தி அனுப்பினர்..
ஆனாலும் ராம் அந்த விநாயக் செம கேடியா இருக்கான்டா எவ்ளோ யோசிக்குறான் பாரு -பரணி..
ம்ம்ம் நானும் அதை தான் யோசிச்சுட்டு இருந்தேன்டா..பக்கா கிரிமினல் அந்த போலீஸை பாத்தாகூட ACP க்ரேட் இருப்பாரு போல தெரியுதேடா..இவ்ளோ பெரிய பொசிஷன்ல இருந்துட்டு இப்படி தப்புக்கு துணை போறாங்களேடா..
என்ன பண்றது எல்லாம் பணம் படுத்தும்பாடு..பட் ராம் நீ ரொம்ப கேர்புல்லா இருடா..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ACPயிடமிருந்து அழைப்பு வர ஸ்பீக்கரில் போட்டு ஹலோ என்றனர்..ஹலோ கைஸ் என்றவரின் குரலில் அப்பட்டமான பதட்டம்..
சார் எனி ப்ராப்ளம் ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க..
ராம் நீங்க அனுப்பின போட்டோஸ் கரெக்ட் தானா வெரிவை பண்ணீங்களா??
சார் இது நாங்ளே நேர்ல போய் எடுத்தது..ஜஸ்ட் ஒன் ஹவர் பிவோர்..
காட்..என்னால நம்பவே முடில..
ஓ..உங்க டிபார்ட்மெண்ட் ஆள பாத்து ஷாக் ஆய்டீங்களா..அப்படி யாரு சார்..உங்களுக்கு ரொம்ப க்ளோஸ்ஸா??
பரணி ஹி இஸ் அவர் DCP ரஞ்சித்..
என்ன??????இப்போது அதிர்வது இவர்கள் முறையானது..
ஹாய் ப்ரெண்ட்ஸ்..இந்த எபிஸோட் எப்படியிருக்கு..லாஜிக்லா கரெக்ட்டா இருக்கும்நு நினைக்குறேன்..எங்கேயாவது சொதப்பிருந்தா மன்னிச்சூசூசூசூசூ..
தொடரும்
{kunena_discuss:952}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.