(Reading time: 21 - 42 minutes)

போய் இணைப்பை ஏற்ற அந்த அது “ஹலோ நான் மிசர்ஸ் மித்ரன் பேசுறேன்….இப்ப நான் பிஸி…அப்றமா இதைப் பத்தி பார்க்கலாம் …பை…” என இவள் குரலில் பேசிய படி இணைப்பை துண்டித்தது…..

 இது மாதிரி ஒரு ஃப்யூ மெசேஜஸ் இருக்கு……அவ்ளவுதான்…..உனக்கு கிஃப்ட் செய்யலாம்னு தான் முதல்ல ஆர்டர் செய்தேன்….ஆனா வர்ஷன் விஷயம் தெரியவரவும் இதை இப்படி யூஸ் செய்யலாம்னு தோணிட்டு” அவன் சொல்ல முழு விளக்கம் எதிர்பார்த்து அவன் முகத்தைப் பார்த்தாள் மனோகரி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

“எனக்கு புரியுற வரை வர்ஷன் அவனாதான் போய் ஒளிஞ்சுட்டு இருக்கான் மனு…..அண்ணி சொல்றதையும் மத்த விஷயத்தையும் லிங்க் செய்து  பார்க்கப்ப கன்ஃபார்ம்டா அப்படித்தான் இருக்கனும்…… ஆனா அவன் அப்படி போய் இருக்றது யாருக்கோ அவசியமா இருக்கு…..”

அப்படியா என்பது போல் அவனைப் பார்த்தபடியே விஷயத்தை உள்வாங்கினாள்  மனோ…அவளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதாகையால் எந்த யூகமுமே இல்லை…

“உனக்கு முதல்ல இருந்து சொன்னாதான் தெளிவா இருக்கும் மனு…. பயோசில வேலை செய்த ஒருவரோட டெட் பாடி ஒன்னு ஷீ ஷோர்ல கிடச்சுது…அதை பத்தி ரகசியமா விசாரிக்கதான் நான் முதல்ல பயோசி வந்தேன்……நான் வர்ற அன்னைக்கு  வர்ஷன் கிளம்பி ஸ்விஸ் போனான்….அதுவும் என்னை கம்பெனிய பார்த்துக்கோன்னு சொல்லிட்டு….ஆக நான் உள்ள எல்லாத்தையும் ஈசியாவே இன்வெஸ்டிகேட் செய்ய முடிஞ்சுது…..அப்டி துருவுனப்ப எனக்கு நான் விசாரிக்க வந்த டெத் பத்தி எந்த தகவலும் கிடைக்கலைனாலும்……. வர்ஷன் இல்லாத நேரத்துல அவன் ரூம் கேமிராவை ஆஃப் செய்துட்டு அங்க இருக்ற அவன் கம்ப்யூட்டரை யாரோ ஆப்ரேட் செய்றாங்கன்னும் தெரிஞ்சுது…. அதோட  ப்ராஜக்ட் ஹெட்டா இருந்த ஒரு பொண்ணை காணலைனும் தெரிய வந்துது…….

அப்போதான் நம்ம மேரேஜ் விஷயம்….இன்பாக்கு பணம் இல்ல….விஜிலா அண்ணி டெலிவரிக்கு வர்ஷன் வரலைனு நிறைய இஷ்யூஸ்……அதில் வர்ஷனை கவனிக்கனும்னு தோணுச்சு….அப்பதான் அவன் லேப்டாப் பயோஸில அவன் ரூம்ல இருக்ற பெர்சனல் வைஃபை வழியாதான் வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுது…..அதாவது அவன் லேப்டாப் மட்டும் இங்க இருக்கனும்…..இல்லைனா அவனே இங்க இருக்கனும்…. ஆனா எதுவும் அவனுக்கு தெரியாம நடக்ற மாதிரி இல்லை…. அதை கன்ஃபார்ம் செய்யதான் ஸ்விஸ் போனேன்…..

 அங்க நான் வெளிப்படையா வர்ஷன தேடலை…. ரகசியமாத்தான் விசாரிச்சேன்…. அவன் அங்க இல்லைனு தெரிஞ்சுது….அதோட நான் போலீஸ் ஆஃபீஸர்னும் யாருக்குமே தெரியாது….. அதனால அவ்ளவு தூரம் வந்தும் அண்ணனை பார்க்க ஒருத்தன் வரலையேன்னு யாருக்கும் வித்யாசமா தெரியக் கூடாதுன்னு “உன்னை மீட் பண்ணலாம்னு நினைக்கிறேன்…ஸ்விஸ் வந்துறுக்கேன்னு ஒரு மெயில் செய்தேன் வர்ஷனுக்கு…….அப்பதான் யாரோ வந்து என்னை கொல்ல ட்ரைப் பண்ணாங்க…

அப்டின்னா அவனை அடச்சு வச்சு யாரோ எதோ செய்றாங்களோன்னு தோணிச்சு….ஆனா கிட்டதட்ட நாலு மாசம் ஆகுது அவன் போய்…..இப்ப வரை வேற எதுவுமே அவனை பணயமா வச்சு யாரும்  கேட்கலை…… ஆஃபீஸ் வேலை கூட ஓரளவு தடை இல்லாமலே நடக்குது……அப்டின்னா அவன் இங்க இருந்து வேலை செய்றது மட்டும்தான் யாருக்கோ பிடிக்கலையோன்னு கேள்வி ஆகுது…....

அதான் உன்னை இங்க  வந்து ஜாய்ன் செய்யாதன்னு சொன்னேன்….. அடுத்து இப்ப அண்ணி விஷயத்தை நீ சொல்றப்ப வர்ஷன் அண்ணி  தன்னை தேடிட கூடாதுன்னு நினைக்கிறான்…..விலகி இருக்கனும்னு நினைக்கிறான்னு புரியுது….ஆனா அவன் காணாம போன பின்னும் முதல்ல அவங்கட்ட அடிக்கடி பேசுற அளவுக்கு ஃப்ரீயா இருந்துறுக்கான்…...அதெல்லாம் யோசிச்சா அவனா எதுக்காகவோ பயோஸிய விட்டு மறஞ்சு இருக்கான்….அது அடுத்தவங்களுக்கும் தேவை படுதுன்னு தோணுது ….” அவன் விளக்க…

மனோவுக்கு விஷயம்  புரிய… அவன்  அடுத்த திட்டம் வரை ஓரளவு யூகிக்க முடிகிறது அவளால்…….ஆனால் அதில் பல கேள்விகள்….

“அதான்  ஃபார்மலா நீ இங்க வந்து ஜாய்ன் செய்துட்டு சீக்ரெட்டா கிளம்பி போய்ட்டா…..என் மேல நடந்த ஷூட் அவுட்டை நாம வர்ஷன் கூட சம்பந்தபடுத்தி நினைக்கலை….நமக்கு இன்னும் வர்ஷன் விஷயம் எதுவும் தெரியலை…..அதான் பயப்படாம நீ இங்க வந்திறுக்க….நாம  அலர்ட் ஆகலைனு காமிச்சுகலாம்….

அதோட இந்த உன்னோட ரூம்க்கு பாதுகாப்புன்னு ஜோசஃப்ஃபை உன் அஃபிஷியல் ரூம் வாசல்ல நிறுத்தி வச்சுறுக்கேன்….யாரையும் உன் ரூம்குள்ள விட மாட்டார் அவர்…..யாரும் உன்னை மீட் செய்யனும்னு ஃபோன் செய்தா, இந்த உன்னபோல இருக்கிற இந்த  ரோபோடிக் டாய் நான் பிஸி…..அப்றம் பார்க்கலாம்னு  சொல்லி வர விடாம செய்திடும்….உன் ரூம்ல இருக்ற கேமிராலயும் இந்த  டாய் உன் சீட்ல இருக்றது, நீ  தான் இருக்கன்ற மாதிரி சீன் க்ரியேட் செய்யும்… அதனால யாருக்கும் சந்தேகம் வராது…… அந்த நேரத்துல நான் இதுவழியா வர்ஷனை தேடிப் போவேன்…” சொல்லியபடி போய் சுவரின் குறிப்பிட்ட பகுதியை இவன் வலக் கையால் தடவ…. அது திறந்து கொடுத்தது….. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது…..மலைத்துப்போய் பார்த்தாள் மனோ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.