(Reading time: 21 - 42 minutes)

ர்ஷன் உயிரோடுதான் இருக்கிறானா???

 இல்லை இது அவனது உடலா???

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

அப்பொழுது தான் கருத்தில் படுகிறது அவன் நாசிக்கு கொடுக்கப் பட்டிருக்கும் ட்யூப்….ஓ ஆக்சிஜன் சப்ளை….

மித்ரன் முகத்திலோ கரிசனையும் கவனமும் சரி விகிதமாய்….

அவனை கை பற்றி அழைத்தபடி அந்த பேழை அருகில் போய் நின்றாள் மனோ… அடுத்தும் என்ன என்பதாய் உள் புறமாய் பார்த்தாள்….

அறையில் அசைவை உணர்ந்தானா என்ன வர்ஷன்…? ஏனோ கண்ணைத் திறந்து பார்க்கிறான்…..

முதலில் அவன் பார்வையில் படுவது மனோ தான்……மிகவும் சோர்ந்திருந்த அவன் இது தன்னை கவனித்துக் கொள்ளும் லக்க்ஷனா போல் இல்லையே என புரிந்து அவன் அதிர்ந்த நேரம்….அருகில் நின்ற மித்ரனுமே பார்வைக்குப் படுகிறான்…

சில நொடிகளில் அது தனது தம்பி எனப் புரிய…….நடப்பதை புரிந்தும் புரியாமலுமாய் பார்த்தவன் முகம் ஒரு பக்கம் கசங்க….மறு பக்கம் புன்னகைக்க முயல….முடிவில் அது தவிப்பிற்கு மொத்தமாய் இடம் கொடுக்கிறது…

‘இப்டி ஒரு நிலமையிலா நான் உன்னைப் பார்க்கனும் என்ற வலியிலும்…..யாரையும் பார்க்காம போறேன்னு நினச்சனே……நான் இவ்ளவா ஓடி மறஞ்சும் என்னை தேடி வந்திருக்கியேன்னு ஒரு நெகிழ்வான மகிழ்ச்சியிலும்…..ஐயோ பக்கத்துல வராத போய்டு….உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதே என்ற தவிப்பிலுமாய் உழன்றது வர்ஷன் மனது….’

மித்ரன் இப்போது மனோவைப் பார்த்தான்….இவன் தன் அண்ணனிடம் பேசியாக வேண்டும்….தண்ணீருக்குள் கண்ணாடிப் பேழையில் படுத்திருப்பவனுக்கு எப்படி கேட்கும் இவன் பேசுவது?.....

சுற்று முற்றும் பார்த்த மனோ அங்கிருந்த கப்போர்டை போய் திறன்ந்து பார்த்தாள்….ஒரு ரைடிங் பேடில் சொருகி இருந்த காகிதங்கள் இருந்தன….. அதை எடுத்து ஒரு கணம் பார்த்தவள்……..எழுதப்பட்டிருந்த பக்கங்களை உருவிக் கொண்டு…..வெற்று காகிதங்களையும் அருகிலிருந்த பேனாவையும் மித்ரனிடம் நீட்டினாள்…

மித்ரன் அதில் பெரிய எழுத்துகளில் “நீ எதுக்கும் பயப்படாத…எல்லாம் சரியாகிடும்…” என எழுதி தன் அண்ணனிடம் காண்பித்து உரையாடலை தொடங்கினானாகில், மனோ தான் எடுத்துக் கொண்ட அந்த கற்றை காகிதங்களை வாசிக்க ஆரம்பித்தாள்….

கடல் முதலைகளை தாக்கும் ஒரு வகை வைரஸ்……. இந்த வைரஸ் பத்தி பயோசியில் ரிசர்ச் நடக்கிறது என மனோவுக்கு தெரியும்….

அந்த வைரஸ் எதோ வகையில் மியூடேஷனாகி….அது எப்படியோ வர்ஷனை தாக்கி இருக்கிறதாம்…. அது ஒரு புதுவகை நோயை அவனில் உண்டு செய்திறுக்கிறதாம்…..

ராபிஸ் வந்தால் நோய் முற்றும் போது நாய் போன்று மனிதன் நடத்தை மாறி இறப்பது போல்…..இந்த வைரஸால் முதலை போல சில சுபாவங்கள் வர்ஷனுக்கு வந்து கொண்டிருக்கிறதாம்…. அதுவும் அவன் உணர்ச்சி வசப்பட்டால் சுய நிலையை இழந்து முதலையாகவே நடந்து கொள்வானாம்….அந்நேரம் அவன் அருகில் இருப்பது ஆபத்தாம்…..

அதோடு  மூளையின் செல்கள் இந்த வைரசால் வேகமாக பாதிக்கப்பட்டு கொண்டு வருவதால்…. உடனடியாக இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வர்ஷனுக்கு கொடுக்கபடவில்லை எனில் இறப்பு விரைவில் இருக்குமாம்…

இன்னும் வித விதமாய் அந்த வைரஸ் பத்தி….வர்ஷன் மேல் நத்தப்படும் ப்ளட் டெஸ்ட் முதல் பல வித டெஸ்ட்கள்…..அதன் ரிப்போர்ட் பத்தி என பல செய்திகள் அந்த மெடிகல் ரிப்போர்ட்டில்…

அந்த ரிப்போர்ட் வகையில் பார்த்தால் வர்ஷன் பிழைப்பது அபூர்வம்….. வர்ஷனின் அத்தனை செயல்களுக்கும் காரணம் புரிய…..அவன் இங்கு வந்து அடைந்து கொண்டிருப்பது கூட தன்னால் யாருக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே என்பது வரை தெளிய….

மனோவுக்கு விஜிலா அவர்களது குட்டிப் பியன் என எல்லோர் முகமும் கண்ணில் வந்து கண்ணை கரித்துக் கொண்டும் நெஞ்சை அடைத்துக் கொண்டும் வருகிறது…..

இப்பொழுது திரும்பி வர்ஷனை பார்க்கிறாள் மனோ…..

“உனக்கு பையன் பிறந்திருக்கான்….அண்ணியும் குட்டியும் மனு வீட்ல சேஃபா இருக்காங்க….” மித்ரன் இப்படி எழுதிக் காண்பிக்க ……அதை வாசித்துக் கொண்டிருந்த வர்ஷனின் முகத்தில் பூரிப்பு…..எதிர்மறையாக கண்ணில் இருந்து நீர்….

“நான் போய்ட்டாலும் அவங்களை நீ பார்த்துக்கோ…..” வர்ஷன் உதடசைவில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்…. அவன் முகத்தில் அத்தனை கலவையாய் உணர்ச்சி களேபரம்…

அதே நேரம் உள்ளே வருகிறாள் அந்த லக்க்ஷணா…..க்யூட் ஃபேஸ் எனும் சொல்லுமளவிற்கு அழகான அவள் முகம் இவர்களைப் பார்க்கவும் பேயறைந்தது போல்….

“ஹேய்….யார் நீ….ங்க….நான்…..இங்க எப்டி வந்தீங்க……இங்க யார் வரதும் ஆபத்து உடனே கிளம்புங்க….ப்ரொஹிபிட்டட் ஏரியா இது….” அவசரமும் பயமும் மிரட்டலுமாய் சொன்னவள் வேக வேகமாய் வர்ஷன் இருந்த பேழையைப் பார்த்து ஓடி வந்தாள்…

டென்ஷனாகாதீங்க …..ரிப்போர்ட் பார்த்தேன் உங்க நிலம புரியுது……நீங்க செய்திருக்க எல்லா ஹெல்புக்கும் தேங்க்ஸ் என்ற மனோவின் வார்த்தையில் தான் சற்று தயங்கி நின்றாள்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.