(Reading time: 11 - 22 minutes)

'வன் யாரை மாதிரி இருக்கான் என்று தெரிந்துக் கொள்ளனும்னா, அந்த டேபிள் மேலே எங்க ரெண்டு பேர் போட்டோவும் இருக்கு, பிறகு அவனுடைய சின்ன வயது போட்டோவையும் காட்டுகிறேன், ' என்று சொன்னார் சுந்தரம், ‘உங்க அப்பா வந்தவுடன் இந்த வெள்ளிக்கிழமையே கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்ன சொல்றே?' என்றார் சுந்தரம்.

'எனக்கு உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்' என்றாள் ராதா

'உனக்கு என்னிடம் எல்லா உரிமையும் இருக்கு, என்னிடம் இருப்பது எல்லாம் உன்னுடையது. என்ன கேட்கவேண்டும்?' என்றார் சுந்தரம்

‘ஒன்றுமில்லை நான் இன்னும் என் படிப்பை முடிக்கவில்லை அதை முடிக்கனும் பிறகு என் அப்பா அம்மாவிற்கும என் தங்கைகளுக்காக நான் வேலை செய்தே ஆக வேண்டும்..... ' என்று இழுத்தாள்

'ஹ்ம்ம். அப்புறம் கல்யாணம் செய்துக் கொள்ளலாம்?...’என்று அவர் கேட்கவும் அவள் அவரை நிமிர்ந்து பார்த்து 'அப்படியெல்லாம் இல்லை கல்யாணத்திற்கு பிறகு இதெல்லாம் செய்ய உங்கள் பெர்மிஷன் வேண்டும்' என்றாள் அவள்

‘உன் அம்மா அப்பா உன் தங்கைகள் எல்லோரும் என் பொறுப்பு, இதைப் பற்றி நீ கவலைப் பட கூடாது, உன் தங்கைகள் படிப்பு மட்டுமில்லை அவர்கள் கல்யாணமும் சேர்ந்துதான் சொல்றேன் இன்னொரு முறை யாரும் இதைப் பற்றி பேசக் கூடாது. உன் படிப்பு இது மட்டுமில்லை இன்னும் மேலே படி. எவ்வளவு படிக்க வேண்டுமோ படி போதுமா. இப்போ உங்களுக்கு ஒரு பங்களாவை ரெடி பண்ணியாச்சு அங்கே இருங்க, நம் கல்யாணத்துக்குப் பிறகும் அவர்கள் அங்குதான் இருக்கப் போகிறார்கள். நீயும் நம் கம்பெனியில் ஒரு டைரக்டர், அங்கே உன் பங்கு பணம் மாதா மாதம் வருகிறது, அதிலிருந்து நீ அவர்கள் சிலவுக்குக் கொடுத்துக் கொள் . என் கையிலிருந்து வாங்கக் கூடாது அவ்வளவுதானே, பரவாயில்லை' என்றார் சுந்தரம்

என் குடும்பத்தைக் காப்பாற்றுவது என் கடமை அதை நான் உங்கள் தலையில் கட்டுவது சரியில்லை அதனால் என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க ' என்று சொன்னாள்

'என்ன பேசறே நீ, என், நான் என்று என்னவோ நீ வேற, நான் வேறன்னு பேசறே, அப்போ இத்தனை நேரம் என்னைப் பற்றி இப்படி, அப்படி என்று சொன்னது எல்லாம் சும்மாவா?' என்றார் சுந்தரம்

‘பார் ராதா இதற்க்கு மேல் இந்த விஷயத்தில் தர்க்கம் வேண்டாம், நான் முடிவு செய்தாகிவிட்டது. உன்னை கல்யாணம் செய்துக்கொள்வதால் இல்லை, உன்னை எப்போது பார்த்தேனோ அப்போதே முடிவெடுத்து விட்டேன்”.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

வர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராதாவின் பெற்றோர்களும் அவள் தங்கைகளும் வந்து சேர்ந்தார்கள்.

பிறகு எல்லோரும் டிபன் சாப்பிட உட்கார்ந்தார்கள். எல்லோரும் ஏதேதோ பேசிக் கொண்டு சாப்பிட்டார்கள். சுந்தரம் அவள் தங்ககைளிடம் பேர் கேட்டு அவர்கள் படிப்பை பற்றி கேட்டார்.

அவள் பெற்றோர்களிடம், தங்கைகள் ஒன்றும் கேட்கவில்லை, அவர்களும் எங்கு போகிறோம் என்ன காரணம் என்று சொல்லவில்லை,

அவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறோம், அவர் யார் என்ற கேள்வியோடு நிற்கிறது?

ரம்யா, ரஞ்சனா இருவரும் அக்காவுடன் உட்கார்ந்தார்கள். எப்போதுமே அவர்கள் ஸ்கூலிலிருந்து வந்தவுடன், அக்காவுடன் உட்கார்ந்து கதை அளப்பார்கள், ஸ்கூலில் நடந்த விஷயங்களைப் பேசுவார்கள், என்ன பாடம் எடுத்தார்கள் அதில் புரிந்தது, புரியாதது என்று பல விதமாக பேசுவார்கள்.

இன்றும் ராதா டிபன் சாப்பிடும் போது' என்ன ரம்யா எப்படியிருந்தது, இன்று?,' என்று கேட்டாள்

ரம்யா மெதுவாக ' முதல்ல நாம் யார் வீட்டிற்கு வந்திருக்கோம், இவர் யார்? என்று கேட்டாள்

‘ரம்யா இது நம் வீடு மாதிரித்தான், இவர் நமக்கு உறவுதான் என்றாள்' ராதா

'அப்போ நாம் இந்த வீட்டில்தான் இனிமே இருக்கப் போகிறோமா?' என்றாள் ரஞ்சனா அதற்குள் ஏண்டி ரஞ்சி கத்தற மெதுவா பேசு என்று ரம்யா லேசாக அவளைக் கிள்ளிவிட்டு சொன்னாள்

அதற்குள் ரஞ்சனா, 'ஸ்ஸ்.... ஆஹ்..., அக்கா இவள் என்னைக் கிள்ளி விட்டாள்' என்றாள்.

அதற்குள் அங்கே வந்த சுந்தரமோ 'ராதாவின் பக்கத்தில் உட்கார்ந்து, என்ன விஷயமாம்?’ என்று கேட்டார், ராதா கொஞ்சம் நகர்ந்தாள்

அவருக்கு மனசு வருத்தமாக இருந்தது, இருந்தும் சின்ன பசங்க இருப்பதால் தான் அவள் தன்னை விட்டு நகர்ந்துக் கொள்கிறாள் என்று புரிந்துக் கொண்டார்.

எல்லோரும் வந்தவுடன், சிவாவும் வந்து விட்டான். சுந்தரத்திடம் சென்று நம்ம அடையார் வீட்டில் எல்லாம் வைத்துவிட்டேன் என்றான்

அங்கு அனுப்ப வேண்டிய காரையும் ட்ரைவரையும் சொன்னார், சரி என்று சொன்னான் சிவா.

சுந்தரம் அவனிடம் மெதுவாக 'வர வெள்ளிக்கிழமை பக்கத்திலிருக்கும் கோவில்ல கல்யாண ஏற்பாடு செய்துவிடு என்றார்,' அவனும் சரி என்று சொன்னான்.

 எல்லோரும் உட்கார்ந்தவுடன், ராதாவின் அப்பாவிடம், 'நான் வர வெள்ளிக்கிழமையே கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டேன், பக்கத்திலிருக்கும் கோவிலிலேயே செய்துவிடலாம்,' என்றார்.

அதற்க்கு ராஜேந்திரன்' இவ்வளவு சீக்கிரமா?' என்று ராதாவைப் பார்த்தார் அது மட்டுமில்லை நான் செய்ய வேண்டிய சீரெல்லாம் இன்னும் ஒன்றும் வாங்கவில்லை, என்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது அதனால் கொஞ்ச நாள் கழித்து வைத்துக் கொள்ளாம்' என்றார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.