(Reading time: 11 - 22 minutes)

சுந்தரம் வாய் விட்டு சிரித்தார், 'என்ன கல்யாணத்திற்கு சீரா, என் மனைவிக்கு நீங்கள் ஏன் சீர் செய்ய வேண்டும், அவளே பெரிய சீர், அவளே பெரிய சொத்து, நீங்கள் இவ்வளவு வருஷமாய் அவளை வளர்த்ததற்கு நான் தான் உங்களுக்கு சீர் சொத்து எல்லாம் கொடுக்க வேண்டும். என் மனைவி என்று ஊர் உலகிற்காகத்தான் கல்யாணம் அதனால் சீரெல்லாம் ஒன்றும் வேண்டாம். அனுவின் நகைகள் எல்லாம் இருக்கிறது மற்றவை என் பொறுப்பு. அவள் மட்டுமல்ல, நீங்க, அவள் அம்மா, தங்கைகள் எல்லோரும் என் பொறுப்பு.'

'என்ன அப்படி பார்கிறீர்கள்? நீங்கள் இனி எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருங்க' என்றார் சுந்தரம்

அவர் சாந்தியைப் பார்த்தார், அவளும் அவரைப் பார்த்தார்.

ரம்யாவையும், ரஞ்சனாவையும் பார்த்து, 'கிளம்புங்க எல்லோரும் நாம் கொஞ்சம் கடைக்கு போயிட்டு வருவோம் என்றார்'

ராதா கேள்வியாக சுந்தரத்தைப் பார்த்தாள், 'அவர் குழந்தைகளுக்கும், உனக்கும் துணிகள் வாங்கிக்கொண்டு வருவோம்' என்றார்

'இப்போ எதுக்கு “' என்றாள் ராதா

'கல்யாணத்திற்கு இப்போ வாங்காமல் எப்போ வாங்குவது?’என்றார்

அவள் அப்பாவைப் பார்த்தாள், அவரோ வேண்டாமென்று தலையை ஆட்டினார், உடனே ராதா எழுந்து அவரிடம் சென்றாள்

‘அப்பா அவர்தான் சொல்கிறார் இல்லே, எனக்காக என் ஆசைக்காக ஒத்துக் கொள்ளக் கூடாதா. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, நான் யாரை கல்யாணம் செய்துக் கொண்டாலும் சந்தோஷமாக இருக்க மாட்டேன், எங்க சந்தோசம் உங்களுக்கு முக்கியமில்லையா?” என்று அவள் கேட்டவுடன், அவர் அவள் கையை பிடித்துக்கொண்டு ‘சரிம்மா, நீயே இப்படி கேட்கும்போது, நான் என்ன சொல்வது, என் மனபூர்வமாக உங்களை ஆசிர்வதிக்கிறேன்' என்றார்,

'அப்போ சந்தோஷமாக கடைக்கு வாங்க என்றாள்' அதற்க்கு

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

'நீங்களெல்லாம் போயிட்டு வாங்க நான் இங்கேயே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்' என்றார்.

அவள் சரி என்று கூறி, அம்மாவிடம்’ நீயும் வாம்மா’ என்றாள் அம்மாவோ,’ நான் அப்பாவை விட்டு எப்போ வந்திருக்கேன் அதனால் நீ, ரம்யாவும் ரஞ்சியும் கூட்டிப் போ’ என்றார் அவளுக்குத் தெரியும் தன் அம்மா, அப்பாவை விட்டு வரமாட்டாள் என்று, ஒன்றும் பேசாமல் தங்கைகளை ரெடியாக சொன்னாள்.

தங்கைளுக்கோ ஒன்றும் புரியவில்லை. ரஞ்சி, ரம்யாவிடம் கேட்டாள் ‘ஏய் யாருக்குக் கல்யாணம்?’ என்று,

அதற்க்கு ' நிச்சயம் எனக்கில்லை' என்றாள் ரம்யா

ஆமாம்' உன்னை யார் கல்யாணம் செய்துக்கொள்வார்கள் உனக்கு ஒரு கிழவன் கிடைத்தாலும் அதிசியம் தான்' என்றாள் தங்கை

அதைக் கேட்ட ரம்யாவிற்கோ கோபம் வந்து 'என்னவோ உனக்கு ஒரு மன்மதன் கிடைச்சா மாதிரி பேசுற' என்றாள்

'எனக்கு மன்மதன் கிட்டிவிட்டாந்தான் ஆனால் உன்னிடம் அவரை கான்பிபதாக இல்லை' என்றாள் ரஞ்சனா

'சரி என் கிட்ட காட்டவேண்டாம், ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் காட்டித்தானே ஆகவேண்டும்' என்றாள் ரம்யா

'ஏய்..., காட்டிக் கொடுத்துடாத, நான் உன்னிடம் சும்மா விளையாட்டாய் சொன்னேன்' என்றாள் ரஞ்சனா

'விளையாட்டாய் சொன்னாயா, நிஜமாய் சொன்னாயா என்று தெரிந்து விடும், வெயிட் மேடம்' என்றாள் ரம்யா

‘ஏய்... ஏய் ...,ப்ளீஸ், நான் உன்னை சும்மா வம்பிழுகிறேன் என்று நினைத்து உன்னிடம் வாய் கொடுத்து விட்டேன் ப்ளீஸ், அப்படி எதுவும் யாருமில்லை, ப்ளீஸ்.... ப்ளீஸ்.... நாம பேசிண்டது நம்மோடயே இருக்கட்டும், நான் வேண்ணா, உனக்கு ஒரு மன்மதன் கிடைப்பான்னு வரம் கொடுக்கிறேன் ...' என்றாள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு...

உடனே ரம்யா 'உனக்கு அவ்வளவு திமிறா, இரு நாம் கடைக்குப் போகும்போது அக்காவிடம் சொல்கிறேன்' என்றாள்

அதற்க்கு அவள் ' அக்காவிடம் கடைக்கு போகும்போது எப்படி சொல்வாய் கூடவே அந்த அங்கிள் வரப் போறாரே' என்றாள் ரஞ்சனா

“நிஜமாவே யாருக்குக் கல்யாணம்? “

“இவர் மகனுக்கும் நம் அக்காவுக்கும் இது கூடவா தெரியாது’ என்றாள் சின்னவள்.

‘ஆமாம் நீதான் எல்லாம் அறிந்த மேதாவி’ என்றாள் அடுத்தவள் ...

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ' கிளம்பலாமா?' என்று வந்தார் சுந்தரம்

தொடரும் 

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.