(Reading time: 19 - 38 minutes)

பயன் இந்த நாட்களில் இவளிடம் நேரடியாக பேசவில்லை எனினும் நிலுவே இவளை அழைத்து “ஏய் பன மரம் உங்க வீட்ல என்ன சஸ்பென்ஃஸ் பலமா வைக்காங்க…என்னதான் முடிவு செய்துறுக்காங்க?” என இவளிடம் கேட்க….

இவள் வீட்டிலிருந்து அபயன் வீட்டிற்கு பதில் என எதுவுமே சொல்லி அனுப்ப படவில்லை என்பது இப்போது இன்னுமாய் பூதகரமாய் தெரிகிறது….

இதில் மூன்றாம் நாள் காலை இவள் வேலைக்கு கிளம்ப முனைய….. “ஏல இனிமே அங்க நீ இப்டி வேலைக்கு போறது சரியா இருக்காது….” என இவளிடம் ஆரம்பித்த இவளது அப்பா….

“ஏய் பெரியவட்ட சொல்லி வை….” என்று தன் மனைவியைப் பார்த்து சொல்லி இவள் தலையில் ஒரு விதமாக குண்டு போட்டார்…

இவள் மிரண்டு  போய் தன் தாயை நோக்க…

“ கல்யாணம் பேசி முடிக்குதுல்ல….இனிம இப்ப அங்க போக வேண்டாம் பவி….” என இவள் தலையில் விழுந்தது குண்டா இல்லை  பூமாலையா என புரியவிடாமல் குழப்பினார்  அம்மா…..

கல்யாணம்  பேசி முடிக்குதுன்னா….அது அபை கூட தானா…? அத தெளிவா சொல்லிட்டாதான் இவளுக்கு நிம்மதி….

இந்த ரெண்டு நாள் சஃஸ்பென்சில் இவள் ஏகப்பட்ட ரேஞ்சில் யோசித்ததன்  விளைவாய் எழும்பிய கேள்வி இது…

ஆனால் அடுத்து அம்மாவோ அப்பாவோ இதைப் பற்றி எதுவும் பேசவில்லை…. இவள் எப்படி என்னவென்று கேட்கவாம்…?

ஒரு அரை தவிப்போடே தன் அறையில் போய் விழுந்தாள்… சற்று நேரத்திற்கெல்லாம் மொபைல் சிணுங்க படுத்துக் கிடந்தவள் அப்படியே அதை ஏற்று தன் காதில் வைக்க…

“ஐ லவ் யூடி மை அரைப் பொண்டாடி….” என்றது இவளது அபயனேதான்…

“நமக்கு வெட்டிங் ஃபிக்‌ஸாகிட்டு….. உங்க வீட்ல இருந்து இப்பதான் கூப்டு சொன்னாங்க…….நாம நினச்சதவிடவும் உங்கப்பா செம ஃபாஸ்ட்….. இன்னைல இருந்து 23 வது நாள் டேட் சொல்லிருக்காங்க……அதாவது ஒன் மந்த்க்கு ஒன் வீக் கம்மி….” அவன் அடுக்கிக் கொண்டே போக….அழுகையையும் சிரிப்பையும் ஒன்றாக அனுபவித்தாள் பெண்.

ஆனால் அதெல்லாம் அன்று இரவு வரைதான்…..

மறுநாள் அபயனின் தந்தை பொற்பரனை அழைத்த பவிஷ்யாவின் அப்பா….”தயவு செய்து மன்னிச்சிடுங்க…… என் பெரிய பொண்ணு பிடிவாதமா இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்றா…..விருப்பம் இல்லாம செய்றது சரியா வராது இல்லையா…..நீங்க வேற நல்ல இடம் பாருங்க…..” என்று பேச்சை முடித்தார்….

அவசரமாய் நிலவினி பவிஷ்யாவை அழைக்க அவளது மொபைல் எண்ணோ ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது…….

Friends  கதை என்ன இந்த இடத்தில் வந்து நிக்குதுன்னு டென்ஷனாகிடாதீங்க….. அடுத்த எபிசோடில் காதல் பின்னது உலகு நிறைவு பெறும்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!

Episode # 27

Episode # 29

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.