(Reading time: 19 - 38 minutes)

ள்ளே சென்றவள் வேக வேகமாக திரும்பி வந்து கதவருகில் போய் நின்றாள்….. இவன் புறம் திரும்பக் கூட இல்லை…..

“அனு நாம மேரேஜ் செய்துகலாம்னு நினைக்கிறேன்…”

இவன் சொல்லியேவிட்டான்.

நிமிர்ந்து ஒரு கூர் பார்வை பார்த்தாள் அவள்….

“இல்ல மேரேஜ் செய்துகலாம்னு ரொம்ப ஆசைப் படுறேன்….”

இப்பொழுது இவன் முகத்தை நேராக பார்ப்பதை தவிர்த்தாள்….முகம் உர்ர்ர்ர்….

“ என் பேரண்ட்ஸை பார்த்துக்கிற மாதிரி கனி ஆன்டியையும் பார்த்துபோம்…”

இப்போது மீண்டும் இவன் முகத்திற்காய் ஒரு பார்வை…பின் கதவை வெறித்தாள்….

“என் வீட்ல உன் வீட்லனு எல்லோருக்கும் இதுல சம்மதம்…. நீ அபை பவி வெட்டிங்காக கன்சரனாகுற மாதிரி அவங்க எல்லோரும் நமக்காகவும் கன்சரனா இருக்காங்க”

“………………”

“நீ அவங்க கன்சர்ன இக்னோர் செய்தன்னா உன் கன்சர்னா கடவுள் கண்டுக்க மாட்டார்தான….?“  இது நிச்சயமாய் குழந்தையை பயங்காட்டும் வகை.

அவள் முகத்தில் இப்போது சிரிப்பு…. அதற்காகத்தானே அவன் அதை சொன்னதும்…

“இப்டிலாம் ஆர்கியூ பணியா இதுல சம்மதம்  வாங்க முடியும் தீபன்…?”

“இல்லைங்க அனு மேடம்……இப்ப இப்டி சிரிக்க வைக்கதான் இந்த கேள்விங்க மேடம்…. நீங்க ரோடுன்னு பார்க்காம வந்து சேர்ந்தப்பவே நம்ம வூயிங் பார்ட் சக்‌ஸஸ்ஃபுல்லா முடிஞ்சுட்டுங்க மேடம்…..கொஞ்சம் யோசிங்க உங்களுக்கும் புரியும் மேடம்..…இப்ப நான் கிளம்புறேங்க மேடம்…” சிரிப்புடனே அதி வெளியேற….

தான் எப்படி உணர்கிறேன்  என அவளுக்கு தெரியவில்லை எனினும் கோபமென்று எதுவுமில்லை என்ற முழு புரிதலுடன் கதவை பூட்டினாள்.

ஆனால் அதெல்லாம் மறு நாள் காலை வரை தான்…….காலையில் கண்விழிக்கும் போது அனு ஒருவித உற்சாகத்தில் தான் இருப்பதை உணர்ந்துதான் இருந்தாள்…. கூடவே இனம் புரியாத கலக்கமும்…..

இரண்டிற்கும் காரணம் அவளுக்கு தெரியாமல் இல்லை….

ஒன்று அதி அவளிடம் கேட்ட விஷயம் இவளுக்கு எப்படியோ பிடித்திறுக்கிறது….. இன்னொன்று…என்னதான் தியோரிடிகலாய் இரண்டாம் திருமணம் தவறில்லை என்ற நம்பிக்கை இருந்தாலும் அது தனக்கென வரும் போது அப்படி ஒன்றும் எளிதாய் எண்ண முடியவில்லை….

மனம் குற்ற உணர்வு கொள்கிறது…. கலங்குகிறது….. இவள் கணவன் ஜேசனே விதவை திருமணத்தை முழுதாய் ஆதரிப்பவன் தான்….ஆனாலும்…...

கூடவே இந்த கலக்க உணர்வுகளை அதி எப்படி எடுப்பான் என்றும் ஓடுகிறது ஒரு நினைவு….

இன்று என்று இல்லை…..பின்னொரு நாளில் அதிக்கும் இவளுக்கும் திருமணம் ஆன பின்பு….ஏதோ ஒரு சூழலில்….ஏன் ஜேசனின் பிறந்த நாளோ அல்லது அவன் இவளை பிரிந்த நாளோ….இவளுக்கு அவன் நினைவுகள் தோன்றினால் அதி எப்படி எடுத்துக் கொள்வானாம்…?

நேரம் செல்ல செல்ல இவள் கலக்கம் வளர்ந்து உற்சாகம் தேய….. இவளையே கவனித்துக் கொண்டிருந்த கனி ஆன்டி இவளிடமாய் வந்து உட்கார்ந்தார்…

வளர்த்தவர் அல்லவா….இவள் மனம் அவர் அறியாமலா….?

அதிபனின் கடந்த காலம் நீரா விஷயம் அவருக்குத் தெரியும்…… அனுவுக்கும் அப்படி ஒன்று உண்டு என சற்றாய் தெரியுமென்றாலும் அதை அதிபனிடம் தோண்டி துருவி பேசியதில்லை இவள்….

இவள் அதிபனிடம் பேசி இருக்க மாட்டாள் என உணர்ந்தாரோ கனிமொழி…. அவர் அதிபன் அம்மா மரகதம் வழியாக கேள்விப் பட்டிருந்த இந்த விஷயங்களை இவளிடம் விளக்கியவர்….

“ அதிபன் தம்பியால உன் நிலமை என்னதுன்னு புரிஞ்சுக்க முடியாமலாம் போகாதுமா….நீ  ரொம்பவுமா நினச்சு குழம்பாத….”  என்ற ரீதியில் இவளை தைரிய படுத்த முயன்றார்….

ஆனால் அந்த விஷயங்களை கேள்விப்பட்ட அனுவுக்கோ இருந்த கொஞ்ச தைரியமும் போய்…அதோடு அதியின் அடிப்படை அன்பின் மீதே கேள்வி வந்து நின்றது….

அது “எந்த சூழ்நிலையிலும் உங்களை மேரேஜ் செய்துக்க என்னோட மனசும் அறிவும் ஒரு காலமும் சம்மதிக்காது…..அந்த நினைப்பை இதோட விட்டுடுங்க…” என அதியிடம் தீர்மானமாகவே சொல்ல வைத்தது இவளை…..

விஷ்யா அதிபனிடமும் யவ்வனிடமும் தன் அப்பா சொன்னது போல்  தன்னிடம் அபயனை மணமுடிக்க சம்மதம் கேட்பார்கள் என எதிர்பார்த்திருந்தாள்……ஆனால் அப்படி எதுவுமே நடை பெறவில்லை…

மாமாவை முடிக்க சம்மதமா கேட்டார்கள்…? இப்போது அப்பா ஏன் இப்படி சொல்கிறார் என இவள் யோசித்திருக்க வேண்டும்…..ஆனால் அது அப்படியாய் அவளுக்குப் படவே இல்லை….

அன்று என்று இல்லை …அடுத்து வந்த இரு நாட்களிலும் இதைப் பற்றி இவளிடம் இதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை….. அதோடு வேலைக்குப் போய் வர வேறு அனுமதித்தார்கள்…..  அவளுக்கு இதை என்னதாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே புரியவில்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.