(Reading time: 6 - 12 minutes)

"டேய் என்ன டா? ஏதாவது பிரச்சனையா? அனு நல்ல தான இருக்கா? அவ இன்னைக்கு இங்க வந்திடுவான்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்"

"இல்லை இன்னும் ரெண்டு நாள் போகட்டும்"

"ஏன்?"

"இன்னைக்கு தேவ் கால் பண்ணி இருந்தான் போல.. கோபத்துல போனை தூக்கி வீசி உடைச்சிட்டா.. அதுக்கு அப்புறம் எதுவும் பேசலை"

"ஐயையோ.. நம்ம அனுவா?! அவ்வளவு கோபம் வராதே டா என் டெட்டிக்கு"

"ஹ்ம்ம் எனக்கும் அதே தான்டீ, இவை இப்படி கோபப்பட்டு ரொம்ப நாள் ஆகுது.. ஏன் வருஷங்கள்ன்னு சொல்லலாம்"

"என்னடா பண்றது இப்போ?"

"தெரியலை நீ வா.. நம்ம நேர்ல பேசலாம்"

"ஓகே வைக்கிறேன் அவளை பார்த்துக்கோ பை"

போனை வைத்த ஆதிரா நேரே தங்கள் ரூமிற்கு சென்று தனக்கு தேவையான உடைகளை பேக் செய்துக்க கொண்டு கீழே இருக்கும் ஓனரிடம் சொல்லலாம் என கீழே செல்ல, அங்கே வேதாந்த் ஓனரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"யார் நீங்க?" ஓனர் அவனிடம் கேட்க,

"இங்க அனன்யான்னு ஒருத்தங்களை பார்க்கணும்"

"அனன்யாவை பார்க்கணுமா? நீங்க?"

"நான்.. நான்.. அவங்க கூட வேலை செய்றேன் அவங்க ஆபீஸ் அட்ரெஸ்க்கு ஒரு பார்சல் வந்தது அதை எடுத்திட்டு வர மறந்துட்டாங்க அதான் கொடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.." அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே வந்தவள் அவனை அடையாளம் காண முடியாமல் திணறிக் கொண்டிருக்க,அவன் இவளை பார்த்ததும் ஒரு வேலை முடிந்ததை போல உணர்ந்தான்.

"ஆதிரா அனன்யாவை தேடி வந்திருக்காங்க பாரு" என்று அவர் இவளிடம் சொல்ல,

"நான் பார்த்துக்கறேன் ஆன்ட்டி தேங்க்ஸ்" என்று விட்டு இவனோடு வெளியில் வந்தாள்.

"நீங்க அன்னைக்கு..."

"நீங்க அநன்யாவோட பிரென்ட் தான? இந்தாங்க இதை அனன்யா கிட்ட கொடுத்துடுங்க"

"என்ன இது??!!"

"செல்போன்" சொன்னவன் விறுவிறுவென நடந்து  தன் பைக்கில் ஏறி பறந்து விட்டான். மனம் சற்று நிம்மதி உற்று இருந்தது.

ஃபிஸில் இருந்து கிளம்பிய வேதாந்த் நேரே சென்றது ஒரு செல்போன் ஷோரூமிற்கு தான்.. அவன் செய்த தவறை அவன் தானே சரி செய்ய வேண்டும். அவள் வைத்திருந்த மாடலை நினைவு கூர்ந்து அவன் கேட்க, அந்த மாடல் 'ஸ்டாக்' இல்லை என்றனர். இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது.

திடீரென்று அதை விட நல்ல மாடலைவாங்கி கொடுத்து விட்டால் என்ன? என்று தோன்ற, அலசி அறைந்து தனக்கு பிடித்த போனை தேர்வு செய்து பில்லை கட்டி வாங்கி கொண்டு அவள் வீடு நோக்கி விரைந்தான்.

அங்கு வந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டு கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்க, அவள் இல்லாது போனதில் சிறு ஏமாற்றம் தான் ஆனாலும் ஒரு சிறு நிறைவு இருந்தது..

போனை வாங்கி கொண்டு பரத் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆதிராவின் நினைவுகள் முழுவதும் அவனை அடையாளம் கண்டு கொள்வதிலேயே இருந்தது.. ஒரு ஆட்டோ ஸ்டாண்டை அவள் கடக்கையில் யாரோ ஆட்டோ என்று அழுத்தமாக கூப்பிட, சட்டென்று நினைவு வந்தது. அனன்யா மயங்கி விழுந்த அன்று ஆட்டோவை நிறுத்தி அவளை தூக்கி ஆட்டோவில் ஏற்றியவன்!!!

இன்று செல்போன் கொண்டு வந்து கொடுக்கிறான்.. அவள் பார்த்த வீட்டை அடைகையில் முன்னிருந்த சிறிய தோட்டத்தில் நின்று அனன்யா வெறித்து கொண்டிருக்க, பரத் இல்லாததை உறுதி செய்து கொண்டு அவளருகில் சென்றால் ஆதிரா.

"அனு"

"ம்ம்ம்"

"இந்தா.." செல்போனை அவள் கையில் கொடுத்து விட்டு அவள் முகத்தை படித்தால் ஆதிரா.

"என்னது?"

"பாரு"

"செல்போன்?!!!! இப்போ எதுக்கு இதெல்லாம்?"

"ம்ம்ம்"

"ஹேய் அதுவும் எனக்கு பிடிச்ச மாடல்!!!!"

"ம்ம்"

"ஏன் டீ வீனா செலவு பண்ற? நானே வாங்கி இருப்பேன்ல?"

"இதை நான் வாங்கலை"

"பின்ன? பரத் வாங்க சொன்னானா?"

'இல்லை.. ஒருத்தர் வாங்கி நம்ம வீட்டுக்கே வந்து உன்னை பார்க்க முடியாம என்கிட்டே கொடுத்துட்டு போனார்!!"

"யாரு??!!!"

"அன்னைக்கு நீ மயங்கி விழுந்தப்போ ஹெல்ப் பண்ணவர்!!!"

"வேதாந்த்" அதிர்ச்சியுடன் அவன் பெயரை முனுமுனுத்தன அவள் உதடுகள்!!!

Episode 05

Episode 05

ஊஞ்சல் ஆடும்..!!!!

{kunena_discuss:884}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.