(Reading time: 13 - 26 minutes)

வெளிப்படையாக பேசிவிட வேண்டும் என்பதால்,”நான் பொய் எல்லாம் சொல்லலை.என்னோட் சின்ன வயசு கனவு அது.சில காரணங்களால நான் தான் வேண்டாம்னு விட்டு வந்துட்டேன்.இப்போ நான் சம்மதிச்சாலும்,எனக்காக ஒரு கதையை உருவாக்கவே ஆள் ரெடியா இருக்காங்க”என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

அதில் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தவள்,”நான் பொய் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்.இது தான் உண்மை”என்றதும்,

’பொய் முகம் காட்ட தெரிந்தவன் தான் உண்மையான நடிகன்’என்ற வாசகம் திடீரென்று அவனது மனதுக்குள் வந்து போனது.

எப்போதும் இல்லாமல் இந்த முறை நேரடியாகவே அவளை அளவிட்டான்.சராசரிக்கும் அதிகமான உயரத்தில்,எப்போதும் மேக்அப் கலைந்து விடக் கூடாதென்று சினி பீல்டில் இருப்பவர்கள் என்ற எச்சரிக்கையுடன் இருப்பது போல தான் அவளும் இருந்தாள்.

என்ன ஒரு வித்தியாசம் என்றால்,முகத்தில் அதிகப்படியான பூச்சுக்கள் இல்லை.

அவன் ஆராய்வதை உணர்ந்தவள்,தன்னுடைய முழுக்கை சுடிதாரின் பட்டனை கழட்டியவள்,கையிலிருந்த டேட்டூவையும் அவனிடம் காட்டினாள்.

“நான் எதையும் மறைக்க விரும்பல.இப்போ எனக்கு நடிக்க ஆர்வம் இல்லைன்னாலும்,அப்போ அதுக்காக எடுத்த எபோர்ட் எல்லாம்,எனக்குள்ள பதிஞ்சு போச்சு.அந்தப் பழக்க வழக்கங்கள் இன்னும் என்னோட அடிமனசில இருக்கு.அவ்வளவு சீக்கிரம் என்னால மாற முடியாது.ட்ரேடிஸ்னல் ட்ரெஸ்க்காக மட்டும் இதை சொல்லலை.நான் உங்களை ஏமாத்தினதா நீங்க நினைச்சிடக் கூடாதில்லையா”என்றவளின் முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு சங்கடமும்,கூடவே வெறுமையும் தெரிந்தது.

“எதனால உனக்கு திடீர்னு சினிமா ஆசை இல்லாம போயிடுச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா”என்றவுடன் தன்னை மீட்டவள்,

“அதான் அபிஷேக் கல்யாணம் செய்துட்டுப் போயிட்டாரே.அப்புறமும் எதுக்கு நான் ஹீரோயின் ஆகணும்னு தான்”என்று தன்னுடைய இயல்பிற்கு திரும்பிவிடவும்,

“நம்பிட்டேன்”என்று இழுத்தான்.

“நம்பி தான் ஆகணும் பாஸ்.அது ஒரு பப்பி லவ்”என்று சிரித்துக்கொண்டே சொல்ல,

“அப்போ என் மேல வந்தது”என்று அவனும் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“ம்ம்..ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு எப்படி லவ் வருதுன்னு மூணு வகையா பிரிக்கலாம் தெரியுமா”என்றதும்,தெரியாது என்ற விதமாக தலையாட்டினான்.

“பார்த்த உடனே லவ் வரும்.பழகிப் பார்த்து லவ் வரும்.அடுத்து கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் வர்ற புரிதல்னால லவ் வரும்.அதுலயும் ஒருத்தரைப் பார்த்த உடனே லவ் வந்துடாதுன்னு,மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க..அதனால இந்த பார்த்த உடனே வர்ற லவ் கூட ரெண்டு விதமா பிரிக்கலாம்.அழகை பார்த்து மயங்கறது ஒரு விதம். அடுத்தது அழகு,குணம் எதுவுமே தெரியாம வர்றது! எனக்கு வந்தது கூட அப்படி தான்! உங்களோட பேர் தவிர,வேற எதையுமே தெரியாது.ஸ்டில் உங்களோட குணம் என்னன்னு எனக்கு தெரியவே தெரியாது.இருந்தாலும் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் அதிகமா இருக்குது”என்றவள் அவனது பார்வையில்,

“ஏதாவது புரிஞ்சுது”என்று கேட்க,

“நீ இஞ்சினியரிங் ஸ்டூடண்ட்னு மட்டும் புரியுது.அதான் லவ்க்கு கூட டெபனிஷன் கொடுத்து,அதோட வகையெல்லாம் பிரிச்சு,ஒவ்வொண்ணுக்கும் ஒரு சாம்பிள் வேற கொடுக்கற.நீ படிக்கற பொண்ணுன்னு நான் ஒத்துக்கறேன்”என்று சொல்லிவிட்டு அவன் சிரிக்க,அவனோடு சேர்ந்து அவளும் சிரித்தாள்.     

அப்போது யாரோ தங்களையே பார்ப்பது போல இருக்க,யஸ்வந்த் சுற்றிலும் ஆராய்ந்தான்.கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்ததால்,யாரென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

யார் பார்க்கிறார்கள் என்று ஆராய்வதிலையே இருந்தவன்,தன்னுடைய அதிமுக்கியமான கேள்விக்கான விடை அவளிடம் இருப்பது தெரிந்தும்,அந்தக் கேள்வியை கேட்க மறந்து போனான்.

யஸ்வந்த்தை பார்த்துக் கொண்டிருந்தவன் மாயமாய் மறைந்து போனான்.

காதலின் மயக்கத்தில்,அவளை கட்டாயமாக காதலிக்க நேர்ந்த காரணத்தையும் யஷ்வந்த் அந்த கணம் மறந்து தான் போனான். 

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.