(Reading time: 13 - 26 minutes)

வரை மீட் பண்றதுக்கு,எந்த இடத்துக்கு வர சொல்றா’என்பது போல பார்த்தவன்,அவள் எதுவும் கேட்பதற்கு முன் யஸ்வந்திடம் இடத்தை சொல்லிவிட்டான்.

அவந்திகாவிற்கு முன்னாடியே,யஸ்வந்த் கண்காட்சி கூடத்திற்கு வெளியே நிற்க,அவனை பார்த்தும் பார்க்காதது போல உள்ளே நுழைந்தாள்.

“எங்க போற நீ”என்று வேகமாக நடந்து அவளைப் பிடிக்க,

“என்னைக் கேட்காம,எதுக்கு என்னோட வீட்டுக்கு வந்தீங்க”என்று கோபமாக கேட்டாள்.

“இதுக்கு தான் கோபமா! நான் என்ன தனியா உன்னை சைட் அடிக்கவா வந்தேன்.பப்ளிக் பிளேஸ்ல என்னைப் பார்த்தா,நாலடி தள்ளி நின்னுக்கற.யாராவது பார்த்துடுவாங்கன்னு அன்னைக்கு பஸ் ஸ்டாப்ல எவ்வளவு பயந்த! அதான் உரிமையா பேசிப் பழகலாம்னு,பொண்ணு கேட்டு வந்தேன்.தப்பு இல்லைதானே”என்றதும்

“அப்போ ஓகே”உடனடியாக சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டாள் அவந்திகா.

“என்ன இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்ட.நான் கூட உன் பின்னாடியே அலைஞ்சு,கிப்ட் கொடுத்து சமாதானம் செய்யனுமோன்னு ரொம்ப கவலைப்பட்டுட்டேன்”என்றதும் சிரித்தாள்.

“சின்ன விஷயத்துக்கு எல்லாம் அடம்பிடிக்க மாட்டேன்.உங்ககிட்ட ரீசன் தெளிவா இருக்கும் போது,உடனே நானும் கோபத்தை விட்டுடுவேன்”என்றவள் பேசிக்கொண்டே வீட்டில் வைக்கும் அலங்காரப் பொருட்களாக வாங்க,யஸ்வந்த் பணத்தை நீட்டினான்.

அதை தடுத்தவள்,”நான் என்னோட வீட்டுக்கு வாங்கும் போது,நான் தானே கொடுக்கணும்”என்றவள் பதிலை எதிர்பார்க்காமல்,பணத்தைக் கொடுத்துவிட்டு பொருட்களை பேக்கிங் செய்யும் பகுதிக்கு வந்தாள்.

அவன் பின்னால் வராததைக் கண்டவள்,கவரை எடுத்துக்கொண்டு,”போகலாமா”என்று எதுவும் நடக்காததை போல கேட்டாள்.

“உன்னோட வீடு,என்னோட வீடுன்னு இனியும் பிரிச்சுப் பேசணுமா”என்றவனின் கேள்வியே,அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது தான்.

இருந்தாலும்,இந்தப் பேச்சுக்காக பணத்தை வாங்க முடியாதில்லையா!!

“நமக்கு கல்யாணம் ஆனாலும்,என் கையில இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க தான் விரும்புவேன்.அது நம்ம வீடா இருந்தாலும்!”என்றவளை,சிறு பெண்ணாக அவனால் நினைக்க முடியவில்லை.

வயதில் சிறியவளாக இருந்தாலும்,மனமுதிர்ச்சி இருக்கிறது என்று நினைத்தான்.

“பார்க்குக்குப் போகலாமா”என்றதும்,அவனுடன் நடந்தே அருகில் இருக்கும் பார்க்கிற்கு சென்றாள்.

“நீ ஏன் தாவணி கட்டறதில்லை”என்று அதிமுக்கியமான கேள்வியை யஸ்வந்த் கேட்கவும்,

“திடீர்னு எதுக்கு இந்த கேள்வி”என்று புரியாமல் கேட்டாள்.

“அந்த காஸ்ட்யூம் உனக்கு நல்லா இருந்துச்சு.அதான்”

“எப்போ தாவணி கட்டி பார்த்தீங்க”என்றவளுக்கு,அவன் எப்போது பார்த்தான் என்று புரியத்தான் இல்லை.

“பர்ஸ்ட் டைம் நாம கோவில்ல மீட் பண்ணப்போ”

“ஓ”என்று உள்வாங்கியவள்,

“அப்போ கண்ணாடியை தூக்கி தூக்கிப் பிடிச்சிட்டு,சைட் அடிச்சிட்டு இருந்தீங்களா..இந்த சோடாபுட்டி கண்ணாடிங்களை நம்பக் கூடாதுன்னு இதுக்கு தான் சொல்றது”கிண்டலில் இறங்கவும்,

“நான் வெளிப்படையா தான் சைட் அடிச்சேன்! இந்த கண்ணாடி போட்டா,நான் வேற எங்கேயோ பார்க்கற மாதிரி தான்,பார்க்கறவங்களுக்கு தெரியும்”என்றதும் முதல் வேலையாக,அவன் கண்ணுக்கு லென்ஸ் போட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அவள் தீவிரமாக யோசிப்பதை வேறு விதமாக எடுத்துக்கொண்டவன்,”எனக்கு ட்ரேடிஸ்னலா டிரஸ் பண்ணினா ரொம்ப பிடிக்கும்”என்றவனை கவலையாக பார்த்தாள்.

“என்னாச்சு..ஏன் டல்லாகிட்ட”

“மாடர்னா ட்ரெஸ் பண்ணினா பிடிக்காதா உங்களுக்கு”என்றதும்,

உடனே”பிடிக்காது”என்றான்.

“என்னோட பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிஞ்சுட்டு,அப்புறம் முடிவு பண்ணுங்கன்னு,இதுக்கு தான் முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன்.நான் காஷ்மீர்ல வளர்ந்த பொண்ணுன்னாலும்,டெல்லில தான் அதிக நாள் இருந்திருக்கேன்.என்னோட டிரேசிங் சென்ஸ் எல்லாம் இருக்க இடத்துக்கு தகுந்த மாதிரி தான் இருக்கும்..முன்னாடியே நான் உங்ககிட்ட சினிமால நடிக்க ஆசைப்பட்டேன்னு சொல்லிருக்கேன்”என்று சுற்றிவளைக்க,

“நீ தானே விருப்பமில்லைன்னு சொன்ன! அதுவும் பொய் சொல்றதா தான் நான் நினைச்சேன்.அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்”என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.