(Reading time: 9 - 18 minutes)

குளிரைக் காக்க அணிந்திருந்த தடித்த ஜெர்கினையும் மீறி உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் உடலில் ஊசிகளைப் போல் சுருக்கென்று இறங்கியது குளிர் .அவர்களால் மூச்சு கூட விட முடியவில்லை  தலை பாரமானது. எப்பொழுதும் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை அவ்வாறு செய்யவிடாமல் குளிர் வாட்டியது.

ராட்சத கிரேன் கப்பலில் உள்ள பீரங்கிகளை எடுத்து லாரியில் ஏற்றியது பீரங்கி விழுந்து விடமால் இருப்பதற்கு தடிமனான சங்கலியால் சிறை வைக்கப்பட்டது

கடிகார முள் விடியற்காலை ஆறு மணி என காட்டியது. ஆனால், வானிலை என்னவோ நடுஇரவு போல் இருந்தது. கப்பலில் உள்ள பொருட்கள் வண்டியில் ஏற்றிவைக்கப்பட்டதும் வண்டிகள் புறப்பட்டன. .பனி மழை வண்டிகளின் கண்ணாடிகளை மறைத்தமையால் மிகவும் நிதானமாக வண்டிகள் சென்றன .

நடப்பவை எதையுமே அறியாமல் அமேலியா இன்னும் மயக்க நிலையில் பீரங்கியினுள் கிடந்தாள் . கிரேன் பீரங்கியைத் தூக்கிய போது லேசான அதிர்வை அவள் உணர்ந்தாள் அந்த அதிர்வு எதனால் ஏற்பட்டது என்பதைக் கூட அறிய முடியாத சூழ்நிலையில் அவள் இருந்தாள். .

சுமார் ஐந்து மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்த வண்டிகள் ஓரிடத்தில் வரிசையாக நின்றன. ரயில் செல்வதற்காக வழி அடைக்கப்பட்டிருந்தது. இன்னும் பனி நின்றபாடில்லை. சாலையெங்கும் பனிக்கட்டிகள் குவிந்திருந்தன. கடைசி வண்டியில் இருந்த பீரங்கியினுள் படுத்திருந்த அமேலியாவிற்கு விழிப்பு வந்தது. அவள் உடல் மிகவும் களைத்திருந்தது  உடலெங்கும் வலி பரவி அவளை உலுக்கி எடுத்தது. போதாக்குறைக்கு குளிர்வேறு. மெல்ல எழுந்து வெளியே பார்த்தவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

கப்பலில் இருந்து இங்கு எப்படி வந்தோம்? என்று குழம்பினாள். காடு போல் இருந்த அந்த இடத்தில மரத்தின் மேல் வெண்போர்வையாக பனிக்கட்டிகள் மகுடம் சூட்டி இருந்ததை ஆச்சர்யத்தோடு பார்த்தாள். மெல்ல எழுந்தவளின் மடியிலிருந்து வில்லியம்ஸின் ஆல்பம் இருந்த பை விழுந்தது. அதை எடுத்து மீண்டும் பத்திரப்படுத்தினாள் அமேலியா.

பீரங்கியில் இருந்து மெதுவாக வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் நோட்டமிட்டாள். வரிசையாக வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவள், தான் தப்பிக்க இது தான் சரியான தருணம் என்று எண்ணி .ஒருவித பயத்தோடு வண்டியிலிருந்து தரையில் குதித்தாள்  அவள் குதிப்பதற்கும்  ரயில் வேகமாய் அவ்விடத்தைக் கடப்பதற்கும் சரியாய் இருந்தது.  லாரியின் பக்கவாட்டு கண்ணாடிகளை பனி, திரை போட்டு மறைத்துவிட்டதால்  அமேலியா கீழே குதித்ததை ஓட்டுனர்கள் யாரும் பார்க்கவில்லை.

சாய்வான பகுதியில் விழுந்தவள், உருண்டு மரத்தில் மோதி உருண்டு கொண்டே ஓரிடத்தில் நின்றாள். அவள் தலையில் காயம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் அவள் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது .சிறிது நேரம் அவள் பேச்சு மூச்சற்று கிடந்தாள்  குளிர் அவள் உடலை கவ்வியது .தான் இருந்த இடம் மெல்ல உடைவதை போல் உணர்ந்தவள்.திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இடமே விரிசல் விட்டிருந்தது .எழுந்து நின்றாள் அவள் கால்கள் உள்ளே செல்லுவதை போல் உணர்ந்து தட்டு தடுமாறி சிறிது தூரம் ஓடி நின்று தான் விழுந்த இடத்தை பார்த்தாள்.

அவளால் நம்ப முடியவில்லை. அது போன்ற காட்சியை அவள் கண்டதும் இல்லை. ஆறு உருகி தரை போல் ஆகி இருப்பதை ஆச்சர்யத்தோடு கண்டாள் .ராணுவ வண்டிகள் புறப்படும் சப்தம் அவள் காதுகளில் விழுந்தது .மெல்ல அங்கிருந்து தாங்கி தாங்கி நடந்தாள். சிறிது தூரம் நடந்தவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை  அவள் உடல் சில்லிட்டு, சுவாசம் நின்று போனதாய் உணர்ந்தாள் கால்களை எடுத்து வைக்க முடியவில்லை.உடலில் எதோ ஒரு வலி எங்கிருந்தோ உருவாகி அவள் தலையில் நின்றது.

தான் இறக்கப் போவதாய் அவள் உணர்ந்தாள். கடவுள் நம்மை அழைக்கிறார் என்று எண்ணினாள் இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தாள். வெறும் கால்களால் பனிக்கட்டிகள் மேல் மேற்கொண்டு அவளால் நடக்க முடியவில்லை  தொப்பென்று விழுந்தாள். மூச்சுக்காற்று தடைபட்டது. அவளது மனம் ஏனோ அவளை எழ தூண்டியது. எழுந்தாள், மெல்ல மெல்ல நடந்தாள்

ஒரு மரத்தின் அடியில் சிறிய கட்டைகள் எரிந்தபடி புகையை கக்கிக் கொண்டிருந்தன. அந்த தீ சுவாலைகள் எந்நேரத்திலும் அவை அணைந்து விடலாம்  வழிப்போக்கர்களோ அல்லது வேட்டையாடுபவர்களோ அங்கு குளிர் காய்ந்திருக்கலாம். நெருப்பின் அருகில் சென்று நடுங்கிக் கொண்டிருந்த தன் கைகளை சூடுபடுத்தி கன்னங்களில் தேய்த்துக் கொண்டாள்.  அமேலியாவின் கண்கள் அடிக்கடி தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டன.

சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து குளிர் காய்ந்தாள் லேசான பனித் தூறலால்  நெருப்பு வெகு சீக்கிரமாவே அணைந்து விட்டது. அருகில் கிழிந்த கோட் இருப்பதை கண்டாள் அதை எடுத்து கிழித்து காலில் கட்டி கொண்டு நடந்தாள். சிறிது தூரம் நடந்தவள் மீண்டும் சோர்வடைந்தாள் ஒரு மரத்தின் மேல் உடலை சாய்த்து கொண்டு இழுத்து இழுத்து மூச்சு வாங்கினாள் .

அப்பொழுது ஒரு வாகனத்தின் சப்தத்தை கேட்டு திடுக்கிட்டு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள். கார் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. அதை ஒளிந்திருந்து பயத்தோடு பார்த்தாள்.  திடீரென மரமே ஒடிந்து விழும் அளவிற்கு ஓர் அதிர்வு. அமேலியா கீழே விழுந்தாள்.

மரத்தில் மோதிய காரில் இருந்து புகை வந்தது. அமேலியா நெஞ்சைப் பிடித்தபடி காரை நோட்டமிட்டாள். காரை ஒட்டி வந்த பெண் தள்ளாடியபடி கீழே இறங்கினாள். அங்குமிங்கும் நடந்து தள்ளாடியபடியேபோதையில் உளறியபடி  அழுதாள். பித்து பிடித்தவளைப் போல் நடந்து கொண்ட அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அமேலியா. காரிலிருந்து மதுபாட்டிலை எடுத்து மீண்டும் அருந்திய அப்பெண், தன் கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொள்ள முயன்றாள். அதைக் கண்ட அமேலியா திடுக்கிட்டாள்.

தொடரும்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.