(Reading time: 20 - 40 minutes)

னக்கு புகழ் மேல சந்தேகம்ன்னு சொல்லிக்கிற அளவு ஒன்னும் இல்லைத்தான் அம்மா.இருந்தாலும் இவன் வாயால எங்களை பத்தி என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கனும்னு தோணிச்சு.. அது மட்டும் இல்ல, இவன் சில நேரம் நண்பனாய் நெருங்கி வர்ரதும், சில நேரம் விலகி போறதும் எனக்கே கொஞ்சம் குழப்பமாய் இருந்துச்சு.. ஆனா கொஞ்ச நேரம் முன்னாடி உங்ககிட்ட என்னை பத்தி சொன்னதுமே நிம்மதி வந்துருச்சு” என்று மனதில் இருந்ததை அவள் கூறிடவும், அவள் தலையில் செல்லமாய் தட்டினான் புகழ்.

“ அட மக்கு மந்தியே, உனக்கு மனசுக்குள்ள இருந்த அதே பயம் தான் எனக்கும் இருந்தது.. அப்பப்போ இப்படி தலையில தட்டி, செல்லமாய் திட்டனும்ன்னு எனக்கு ஆசை வரும்.. எனக்கு கிடைச்ச ஒரே ஒரு லேடி கேடி நீ.. உன்னை நல்லா பார்த்துக்கனும்னு தோணும் .. ஆனா என் அக்கறையை நீ காதல்ன்னு நினைச்சுட்டா?.. அதுனாலத்தான் கொஞ்சம் விலகியே இருந்தேன்”

“ ஹப்பா…சோ உனக்கு என் மேல லவ் எதுவும் இல்லைல?”

“லவ் இல்லை..அது உன்மேல வரவும் வராது.. நீ யாரை லவ் பண்ணுறதா இருந்தாலும் நானே உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்”

“ஆஹான்..”

“யெஸ்.. அந்த சிடுமூஞ்சிய வேணும்னா செட் பண்ணி தரவா?”

“ டேய் நண்பனை மாமான்னு கூப்பிடலாம்,,அதுக்காக நண்பன் அந்த வேலையை பார்க்க கூடாது”

“அடப்பாவி அரைலூசு.. உன்னை என்ன பண்ணுறேன் பாரு” என்று புகழ் அவளை துரத்த

“ முடிஞ்சா புடிச்சிக்கோ” என்றபடி ஓட ஆரம்பித்தாள் யாழினி.

ஒருவாரம் சற்று வேகமாகவே கழிந்தது. மோகன் சொன்னது போலவே அன்று புகழை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுத்து இருந்தாள் யாழினி.. ஆனால், வெறும் கையோடு வரவே மாட்டேன் என்று புகழ் அடம்பிடிக்க,இருவரும் அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றனர்.

“ ஹேய் போதுடீ இவ்வளோவா தின்னுவ நீ?”

“போடா பக்கி.. நான் சாப்பிடும்போது நீ என்ன சும்மாவா வாய் பார்த்துட்டு இருக்க? என் கூட சேர்ந்து நல்லாத்தானே மொக்குற? உனக்கும் சேர்த்து தான் வாங்குறேன்”

“அதுக்குன்னு கடலை மிட்டாய், சாக்லெட்ன்னு இந்த வயசுலேயே டைபெட்டிஸ் வர போகுது”

“வந்தா, நான் ரொம்ப கேட்டதா  சொல்லு” என்றவள் தான் தள்ளி கொண்டி வந்த சக்கர வண்டியை வேகமாய் தள்ளி விளையாடினாள். வண்டியை கொஞ்சம் வேகமாய் தள்ளிவிட்டு அதன்பின் ஓடி போய் அதை பிடிப்பதுமாக , தன்னருகில் இருந்த வளர்ந்த குழந்தையை முறைத்தான் புகழ்..

“என்னடீ விளையாட்டு இதெல்லாம்.. ச்ச உன்னை போயி பெரிய பொண்ணுன்னு நினைச்சு ப்ரண்ட் ஆகினேன் பாரு.. எந்த மடையன் உனக்கு காலேஜ்ல சீட் கொடுத்தா? நீயெல்லாம் எல் கேஜீ ல யே இருக்க வேண்டிய ஆளு” என்றவன் சலித்து கொள்ள

“ நம்ம ப்ரின்சியை நீ மடையன்னு சொல்லுறியா? இரு இரு நாளைக்கே போட்டு கொடுக்குறேன் “ என்றவள் மீண்டும் அந்த வண்டியை தள்ளிவிட்டு ஓடி போய் பிடித்து கொண்டாள்.

“ லூசு லூசு..போதும் திங்ஸ் வாங்கினது.. ஃபிரஸ்ட் டைம் உன் அப்பாவை பார்க்க போறோம்..லேட் பண்ண வேணாமே செல்லம்..ப்ளீஸ்”என்று அவன் கெஞ்ச,

“பொழைச்சு போ” என்று உதட்டை பிதுக்கி பழிப்பு காட்டியவள், வண்டியை கடைசியாய் ஒரு முறை தள்ளி விளையாடலாம் என்றெண்ணி அவள் வண்டியை தள்ளிவிட்டு அதை பிடிக்க ஓட, சரியாய் அவளின் கால் லேசாய் தடுக்கிட, அவள் நிமிரும் முன் “ அம்மா” என்ற கூக்குரலுடன் கீழே விழுந்து கிடந்தான் தமிழ். யாரோ அலரும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் அங்கு அவளை அனல் கக்கும் பார்வையுடன் தடுக்கி விழுந்த தமிழை பார்த்து அரண்டு போனாள். புகழுக்கோ அவள் பண்ணி வைத்த வம்பை நினைத்து பதட்டம் எழ அதை மறைத்துகொண்டு தமிழின் அருகே சென்றான்.

“ சாரி சார்.. வண்டிய தள்ளிட்டு வரும்போது திடீர்ன்னு கை பட்டு.. உங்க மேல மோதி.. ஐ எம் சாரி” என்றான் புகழ். தமிழ் வாய்திறந்து பேசும் முன்னரே,

“ டாக்டர் சார் ..ஆர் யூ ஓகே ..ரொம்ப வலிக்கிதா? வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று பதறினாள் யாழினி. அவள் “டாக்டர்” என்று சொன்னதில் தமிழுக்கு என்னவோ ஆறுதலாய் தான் இருந்தது. ஆம் , இந்த குறும்புக்காரி இந்த கூட்டத்தில் சிடுமூஞ்சி என்று அழைத்திருந்தால் அவனின் கீர்த்தி என்னாவது? அதே வேளையில், யாழினியின் பேச்சை கேட்டு அந்த சிடுமூஞ்சி இவன்தான் என்று புரிந்து கொண்டான் புகழ்.

“ போச்சு ஏற்கனவே, இவன் கொலைவெறியில் இருக்கான்.. இதில் இவ வேற இப்படி வம்பு பண்ணி வைச்சு இருக்காளே ! கடவுளே இந்த லூசை கொஞ்சம் காப்பாத்துப்பா” என்று மனதிற்குள் பேசியவன் மீண்டும் தமிழிடம் திரும்பி,

“ நீங்கத்தான் டாக்டர் தமிழ் ஆ? நான் யாழினியின் நண்பன் புகழ்.. மன்னிச்சிருங்க சார்..என் தப்புதான்.. நான் தான் வண்டியை பார்க்காமல் தள்ளிட்டேன்” என்றான். இருவரையும் மாறி மாறி ஒருமுறை பார்த்த தமிழ் எதுவும் சொல்லாமல் எழ முயன்று தோல்வி அடைந்தான்.

“ அய்யய்யோ ரொம்ப வலிக்கிறதா டாக்டர்?” உண்மையான வருத்தத்துடன் கேட்டாள் யாழினி. புகழுமே கொஞ்சம் கவலையாய் முகத்தை வைத்து கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.