(Reading time: 20 - 40 minutes)

டோண்ட் ட்ரீட் மீ லைக் அ பேபி..நானே டாக்டர் தான்னு தெரியும்ல? இது சின்ன தசை பிசகாத்தான் இருக்கும்.. நான் பார்த்துக்குறேன்.. நீங்க கிளம்புங்க” என்றான்.

“ உங்களால் நிற்கவே முடியல, இப்போ எப்படி வீட்டுக்கு போவிங்க?” என்று கேட்டவள் புகழை பார்த்து, “ புகழ் நான் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்.. நீ அவரை தூக்கு.. நாம சார் கூட ஹாஸ்பிட்டல் போயிட்டு, அப்பறமா அவரை வீட்டுல ட்ராப் பண்ணிடலாம்.. சார் நீங்க கார்ல வந்திங்களா?” என்றாள்.

“ கென் யூ ஜஸ்ட் ஷட் அப்..” என்று வலியில் பொரிந்தான் தமிழ்.

“ உன் உதவி எனக்கு தேவை இல்லை.. நானே பார்த்துக்குறேன்.. உன் ப்ரண்டை கூட்டிட்டு கிளம்பு” என்றான். அவன் அதட்டலில் புகழ் முகம் இறுகிட, யாழினியோ கண்களில் தேங்கிய கண்ணீரை சட்டென உள்ளிழுத்து பெரிதாய் புன்னகைத்தாள்.

“ முடியாது சார். தப்பு எங்க பேரில்..சோ இதை சரி பண்ணாம போக மாட்டோம்” என்றாள் அவள். அவளின் நிமிர்வான அணுகுமுறை ஆண்கள் இருவரையுமே வியக்க வைத்தது. அவளை மீண்டும் திட்ட மனமில்லாமல் பற்களை கடித்துக் கொண்டு தமிழ் எழ முயல, வலியில் துடித்து போனான்.. புகழை பார்த்து கொண்டே

“ ஓகே, ஐ நீட் யுவர் ஹெல்ப்…ஆனா, இவ வாயையே திறக்க கூடாது” என்றான் தமிழ். நமக்கிது தேவையா என்பது போல புகழ் அவளை முறைக்க அவள் செய்கையிலேயே சரியென்று பதிலளித்தாள்.

ன் வீட்டிற்கு செல்லும் வழியை புகழுக்கு சொல்லி கொண்டிருந்தான் தமிழ். தன்னைவிட வயதில் இளையவனுடன் பேசுவதற்கு அவனுக்கு சுலபமாகத்தான் இருந்தது. அதிகமாய் சிரித்து பேசாவிடினும் எப்போதும் இருக்கும் இறுக்க நிலை இல்லாமல் இருந்தான் அவன்.

“ ஒரு டாக்டரையே இன்னொரு டாக்டர் கிட்ட வைத்தியம் பார்க்க வெச்சுட்டிங்க ரெண்டு பேரும்..சந்தோஷமா?”என்றான் அவன் ஓரக்கண்ணால் யாழினியை பார்த்தபடி. கடந்த இரண்டு மணி நேரங்களாய் அவள் வாயையே திறக்காமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற அடிக்கடி அவளை பேச்சில் இழுக்க முயன்று தோற்று போனான் தமிழ்.

“ சாரி அகைன் சார்..” என்றான் புகழ்.

“ இட்ஸ் ஓகே நான் சும்மாத்தான் சொன்னேன். உங்களுக்கு ஒரு கூட் நியுஸ் சொல்லவா? நான் இன்னும் 3 நாள் ரெஸ்ட்ல இருக்கனும்னு தெரிஞ்சா எங்கம்மா உங்க ரெண்டு பேருக்கும் பிரியாணி போட்டு விருந்தே கொடுப்பாங்க” என்றான் தமிழ்.

“அப்படியா ஏன்?” ஆச்சர்யமாய் புகழ் கேட்க தமிழின் பதிலை உன்னிப்பாக கவனித்தாள் யாழினி.

“அது…. எப்பவும் வேலைன்னு சொல்லி சுத்திட்டே இருக்கேன்னு அம்மா வருத்தப்படுவாங்க.. அதான் இன்னும் மூனு  நாளுக்கு சந்தோஷமாய் இருப்பாங்க..”

“ நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுறிங்க?”

“ம்ம்.. உங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம் பாஸ்”

“ ஹெலோ ..ஜெனரல்லா,இப்படி மொக்க போடுறது தவிர உருப்படியா ஏதும் பண்ணுறிங்களான்னு கேட்டேன்” .. அவனை முறைக்க நினைத்த யாழினி எதற்கு வம்பென நினைத்தபடி ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பி கொண்டாள். புகழ் அவர்கள் இருவரின் வரலாறு, உயிரியல்,பூகோலம்மென அனைத்தையும் சொல்லி கொண்டே தமிழின் வீட்டை வந்தடைந்தான்.

“ சரியாத்தான் சொல்லி இருக்கான் புகழ்.. இவன் எப்பவும் வீட்டுலேயே தங்குறது இல்லை தெரியுமா?” என்று குறைப்பட்டு கொண்ட அன்னை மனோன்மணியை முறைத்தான் தமிழ். அவனை கண்டுக்கொள்ளாமல் மற்ற இருவருக்கும் அவர் காஃபியை கொடுக்க தமிழ் இன்னும் கடுப்பாகினான்.

“ நான் என் ரூமுக்கு போறேன்மா” என்று பொதுவாக அவன் சொல்ல, புகழ் அவனுக்கு உதவ முன்வந்தான். தமிழ் தன் அறைக்குள் மறையும் வரை அவனையே பார்த்து கொண்டிருந்தாள் யாழினி.

அவள் பார்வை போன திசையையும் அவளின் வாடிய முகத்தையும் பார்த்தபடி யாழினியின் அருகே அமர்ந்தார் தமிழின் அம்மா.

“ என்னாச்சும்மா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“..”

“ சொல்லும்மா கேட்குறேன்ல?”

“ புகழ் உண்மையை மறைச்சிட்டான் ஆண்ட்டி..சாருக்கு என்னால தான் அடி பட்டுருச்சு.. நாந்தான் அந்த வண்டியை தள்ளிட்டு வந்தேன்” என்று சொல்லும்போதே விசும்ப தொடங்கினாள் யாழினி.

யாரென்றே தெரியாத பெண் சட்டென தன் முன் கண்கலங்கி நிற்கவும், பதறி போய் அவளை தோளோடு அணைத்து கொண்டார் அவர்.

“ சரிம்மா.. அதான் ஒன்னும் ஆகலைல? விடும்மா அழக்கூடாது”

“ இல்ல ஆன்ட்டி, நான் ரொம்ப விளையாட்டுத்தனமாய் இருப்பேன் தான். ஆனால், அது யாரையும் பாதிக்காம பார்த்துப்பேன்.. ஆனா என்னவோ சாரை எப்போ பார்த்தாலும் பிரச்சனையாகவே இருக்கு” என்று கூறியவள் இன்னமும் அழுகையை நிறுத்தவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.