(Reading time: 20 - 40 minutes)

ன்ன லுக்கு விடுற? மாமியார் வீடாய் இருந்தா ரைட் லேக்ன்னு சொல்லிருப்பேன்.. இது என் வீடுதானே லெஃப்ட் ஏ போதும்.. வா வா” என்றவன் அவள் தொடர்ந்து வருகிறாளா? என்று பார்க்காமலேயே பைக் சாவியை ஸ்டைலாய் விரலில் சுழற்றியபடி முன்னே நடந்தான்.

“  சுப்பு..

சுப்பூ…

மை டியர் சுப்பம்மா ..

என்னை பெற்ற பெண் தெய்வமே சுப்ரஜா,எங்கம்மா இருக்கீங்க?”

என்றவன் ராகம் பாடிக்கொண்டே வாசலில் இருந்து வீட்டிற்குள் எட்டி பார்க்க, அவனின் அன்னை சமையல் அறையில் இருப்பது தெரிந்தது. யாழினி இன்னமும் தெளியாமல் பார்க்க, அவள் கைப்பிடித்து இழுத்துகொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான் புகழ்.

“ ஹேய் சுப்பு, என்னம்மோ சொன்னிங்களே ஒரு பையனும் பொண்ணும் ப்ரண்ட்ஸ்ஸா மட்டும் இருக்கவே முடியாது..மனசுகுள்ள காதல் வந்திடும் ப்ளா ப்ளான்னு… பார்த்துக்கோங்க.. இந்த காலேஜ்லே என்னுடைய உருப்படியான கண்டுபிடிப்பு .. என் தோழி.. உயிர்தோழி..” என்று பெருமை பொங்கிடும் குரலில் யாழினியை அறிமுகப்படுத்தினான் புகழ்.

அந்த ஒரு நிமிடம் இப்புவியிலேயே அதீத மகிழ்ச்சியில் இருக்கும் ஒரே ஜீவன் என்றால் அது யாழினிதான். என்னத்தான் புகழ் மீது நம்பிக்கை இருந்தாலும், அவன் அவ்வப்போது காட்டிடும் அக்கறை அவளை  அச்சுறுத்தியது. ஒரு வேளை அவன் மனதில் காதல் துளிர்த்துவிட்டால் அவளால் என்ன செய்திட முடியும்? அவனை மொத்தமாய் தூக்கி எறிந்துவிட அவளால் முடியாது!அதே நேரம் அவனது எண்ணங்களுக்கும் இசைந்திட முடியாதே என தவியாய் தவித்தாள் யாழினி. முகமே புன்னகையில் விகாசிக்க, இருவரையும் பார்த்தாள் யாழினி.

“ ஓ.. உனக்கு அஃபிசியலா அறிமுகபடுத்தி வைக்கனுமா லூசு? சரி கேட்டுக்கோ இவங்கத்தான் என் செல்ல அம்மா சுப்ரஜா”

“ சுப்பும்மா இவதான் யா..”

“யாழினி தானே ? நான் டெல்லியில் இருந்து வந்து ஒரு நாள் கூட ஆகல..ஆனா நீ 200 தடவை இவபேரை சொல்லிட்ட” என்று சலித்து கொண்டவர்

“என்னம்மா காஃபி போடவா? இல்ல ஜூஸா?” என்றார்உரிமையாய்..யாழினியும் தயக்கமே இல்லாமல்,

“ஜூஸ் போதும்மா.. நேத்து தான் வந்திங்களா?இவன் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கான்.. ஆனா நீங்க வர்ரிங்கன்னு சொல்லவே இல்லையே!” என்று போட்டு கொடுத்தாள்.

“ சொல்லமாட்டான் யாழினி..நாமலே கண்டுபிடிச்சிட்டா உடனே சர்ப்ரைஸ்ன்னு ஒரு பிட்டை போடுவான்”

“ அய்யோ சுப்பு, நிஜமாவே இது சர்ப்ரைஸ் தான்..இன்னைக்கு ப்ரண்ட்ஷிப் டே ஆச்சே..என் டார்லிங் ப்ரண்டுக்கு என்னுடைய அம்மாவையே கிஃப்டா கொடுக்கலாம்ன்னு நினைச்சுத்தான் கூட்டிட்டு வந்தேன்.. எனக்கு அப்பா இல்லாதமாதிரி அவளுக்கு அம்மா இல்லை” என்றான் அவன் இயல்பாய். அவன் முகத்தில் கனிந்திருந்த அன்பும் குரலில் இருந்த இதமும் மற்ற இரண்டு பெண்களுக்குமே மயிலிறகு வருடுவது போலத்தான் இருந்தது.

“ ஓகே யாழினி பார்த்துக்கோ, என் அம்மா இனிமே உனக்கு அம்மா மாதிரி.. அதே மாதிரி என்னையும் சீக்கிரமாக அப்பாக்கிட்ட அறிமுகப்படுத்திவிடு” என்று கட்டளையிட்டவனை பார்த்து யாழினி கண்கலங்கிடவும் நிலைமையை இலகுவாக்கிட, மகனின் காதை பிடித்து திருகினார் சுப்ரஜா.

மேலும், “யாழினி  பேபி இவன் இப்படித்தான் செண்டிமெண்டா பேசுற  மாதிரி காமிடி பண்ணுவான்.. தப்பி தவிறி கூட கண் கலங்கிடாதே.. அப்பறம் அடுத்த நடிகர் திலகம் இவன் தான்னு சொல்லிட்டு திரியுவான்” என்றார் அவர்.

அவர் பேச்சை கேட்டு புகழ் முறைக்க யாழினி கலகலவென சிரித்தாள்.

“ ஓஹோ இந்த குரங்குக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்காம்மா? அதான் சொல்லிட்டிங்கல்ல, இனிமே வெங்காயம் உரிச்சா கூட இவன் முன்னாடி நான் அழ மாட்டேன்”

“ ரெண்டு பொண்ணுங்க ஒன்னு கூடினா பையன் தலை உருளும்ன்னு சும்மாவா சொன்னாங்க?” என்று சோகமாய் முகத்தை வைத்து கொண்டான் புகழ்.

“ போடா அரட்டை.. நீ சொல்லும்மா யாழினி, உன் படிப்பு எப்படி போகுது?”

“ புகழ் இருக்கும்போது எப்படிம்மா படிக்க முடியும்? பார்த்திங்க தானே க்லாஸ் கட் அடிச்சுட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கான்”

“ ஆமா ஆமா,இல்லன்னா மட்டும் நீ படிச்சு மார்ஸ்க்கு ராக்கேட் விட்டுருப்ப.. காலையிலேயே ஏதோ கன்வியூஷன்ல சுத்திட்டு இருந்தவ தானே டீ நீ? சொல்லு என்ன பிரச்சனை?” என்று உரிமையாய் கேட்டான் புகழ். அதட்டல் நிறைந்த அவன் குரலில் சுப்ரஜாவே திடுக்கிட யாழினியோ சாதாரணமாய் புன்னகைத்தாள். சுப்ரஜா, புகழ் இருவருமே தன்னை பார்ப்பதை உணர்ந்தவள்,தமிழை பற்றியும் வீட்டில் தன் தந்தை பேசியதையும் சொல்லி முடித்தாள்.

“ என்னடீ சொல்லுற அப்போ இன்னும் ஒரு வாரத்துக்கு உனக்கு டின்னர் கிடையாதா? நான் வேணும்னா பின் பக்கமா வந்து உனக்கு சாப்பாடு தந்துட்டு போகவா?” என்று கேட்ட புகழை முறைத்த சுப்ரஜா “அவளை பேச விடேன் டா.. நீ சொல்லும்மா..உனக்கென்ன குழப்பம்?” என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.