(Reading time: 20 - 40 minutes)

ஷ்ஷ்ஷ்.. அவன் ஒத்தையாவே வளர்ந்த பையன் யாழினி.. அதனாலோ என்னவோ ரொம்ப இறுக்கமாகவே வளர்ந்துட்டான் அவன்.. ஆனா நல்ல பையன்மா..அவன் ஏதாவது திட்டி இருந்தால் மனசுல வெச்சுக்காதே சரியா?” என்றார் அவர் தனது மகனை விட்டுக்கொடுக்காமல்.

“ உன்னை மாதிரி ஒரு சுட்டி தங்கச்சி இருந்திருந்தால், அவன் மாறி இருப்பானோ என்னவோ” என்று அவர் இயல்பாய் கூற சட்டென யாழினிக்கு புரையேறியது. நான் அவனுக்கு தங்கச்சியா? நினைக்கும்போதே அவளுக்கு அசௌகரியமாய் இருந்தது.

“அய்யோ அதுக்காக என்னை அவருடைய தங்கச்சி மாதிரி ட்ரீட் பண்ணாதிங்க ஆண்ட்டி, எனக்கு அண்ணான்னா அலர்ஜி” என்று சிரித்தாள் யாழினி.அவரும் அதை ஆமோதித்தப்படி பேச்சை மாற்றிட நிம்மதியடைந்தாள் யாழினி.

தமிழின் அறையில்..!

“ உங்க ப்ரண்ட் ரொம்ப அரண்டு போயிட்டாளா புகழ்?”

“தெரிஞ்சு கேட்குறிங்களா? இல்ல தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்குறிங்களா டாக்டர் சார்?”

“ ஹேய் கூல்..சும்மாத்தான் சொன்னேன்.. நீங்க உங்க ப்ரண்ட் மேல ரொம்ப பாசமாய் இருக்கீங்கன்னு தெரியுது” என்று தமிழ் கூறவும் முகம் கனிந்தான் புகழ். யாழினியை நினைத்து அவன் முகத்தில் புன்னகை அரும்பிட

“ இன்னைக்கு நடந்ததுக்கு காரணம் யாழினின்னு எனக்கு அப்போவே தெரியும்..ஆனா அவளை, நான் திட்ட கூடாதுன்னு நீங்க மறைச்சப்போவே உங்க பாசம் புரிஞ்சது” என்றான் தமிழ். ஒரு நொடி அவனை அதிர்ச்சியாய் பார்த்துவிட்டு இயல்பாகினான் புகழ்.

“ உங்களை பத்தி ஆல்ரெடி அவ சொல்லி இருக்கா.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவில ஏற்கனவே பிரச்சனை.. இப்போ இதுவும் சேர்த்துக்க வேணாமேன்னு பார்த்தேன்.அது மட்டும் இல்ல, அவ லைஃப்ல அவளை இவ்ளோ அதிகமாய் திட்டின ஒரே ஆளு நீங்கத்தான்.. உங்களினால் அவ என்ன பண்ணி வைச்சா தெரியுமா” என்றவன் அன்று ஃபோன் பேசி முடித்துவிட்டு அவள் இருந்த நிலையையும் அவளின் தந்தை கொடுத்த தண்டனையை பற்றியும் கூறினான். அவன் சொன்னதை கேட்டு தமிழின் முகத்தில் யோசனை படர்ந்தது. சில நொடிகள் அந்த அறையில் காற்றோடு சேர்ந்து மௌனமும் நிறைந்து கொண்டது. அதன்பின் தமிழே

“ம்ம் உங்க ப்ரண்ட் ரொம்ப இமோஷனல் கேரக்டர் போல.அது தப்பில்ல ..ஆனா எல்லா நேரமும் சரியா இருக்காது புகழ்..யாரோ ஒருத்தர் ஹர்ட் பண்ணினா அதையே நினைச்சுட்டு இருக்குறது தப்புத்தானே .. அவளைவிட நீங்க கொஞ்சம் மெச்சுவர்ட்டா இருக்கீங்க.. ஒரு ப்ரண்டா அவளுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணாமல் அப்பபோ கண்டிச்சு வைங்க” என்றான் தமிழ்.அவன் பதிலில் புகழுமே கொதித்து தான் போனான்.

“ ஆமா தமிழ்… யூ ஆர் ரைட்.. பட் என்ன பண்ணுறது எல்லாருக்கிட்டயும் ஒரு குறை இருக்குமே ..இது உங்ககிட்ட கூடத்தான் கொஞ்சம் பாரபட்சம் இருக்கு”

“ என்கிட்டயா”

“ஆமா,எனக்கு மரியாதை கொடுத்து பேசுற நீங்க யாழினியை அவ இவன்னு பேசுறிங்களே..இது மட்டும் சரியா?”

“ அம்மாடி.. உங்க ப்ரண்டுக்கு ஒன்னுன்னா சும்மா விடமாட்டிங்க போல”

“ ம்ம்ம் ஆமா..அவளும் அப்படித்தான் .. அவளுக்கு எப்பவும் நான் தான் ஸ்பெஷல்”

“போதும் பாஸ்.. நானும் உங்க ப்ரண்டுக்கு பெஸ்ட் ப்ரண்டாக மாறிட போறேன்” என்று தமிழ் சிரிக்க புகழின் முகம் இறுகியது.

“ அது விதிக்குத்தான் தெரியும். அவ உங்களுக்கு பெஸ்ட் ப்ரண்ட் ஆகிட வாய்ப்பு இருக்கு”

“ நானும் அதேதானே சொன்னேன்?”

“ இல்ல நீங்க சொன்னதின் அர்த்தம் வேற.. நான் சொல்லுற அர்த்தம் வேற யோசிச்சு பார்த்தா புரியும்” என்றவன்,

“ எங்களுக்கு லேட் ஆச்சு ..வரோம்..டேக் கேர்” என்றுவிட்டு விடுவிடுவென கிளம்பினான் . அவனை செல்லும் திசையையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் தமிழ். சற்றுமுன் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை ஆராய்ந்தான் அவன். புகழுடன் தனது வீட்டிற்கு கிளம்பிய யாழினியோ அமைதியின் சிகரமாய் இருந்தாள்.அவளை பார்க்க பார்க்க அவனது கோபம் அதிகமானது.. தமிழை பார்த்தாலே அவள் தனது சந்தோஷத்தை இழந்து விடுகிறாள் என்று எண்ணி கொண்டான் அவன். இனிமேல் முடிந்த அளவு அவர்களை சந்திக்க விடக்கூடாது என்று முடிவெடுத்தான்.. அவன் நினைப்பை உடைத்த தமிழின் அடுத்த நடவடிக்கை என்ன? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:994}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.