(Reading time: 11 - 21 minutes)

து என்னன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவ... இப்போ வா போகலாம் ... “ என்று கிளப்பினான்..  ராகுலும் குழம்பியபடி சென்றான்.

ராகுல், அர்ஜுன் இருவரும் லீவ் கிடைக்கவில்லை என்று சுபாவிடம் சோகமாக இருப்பது போல் காட்டிக் கொண்டனர்.. சுபாவோ அவர்களிடம் அவளும் வருத்தபடுவதாக சொல்லி விட்டு மனசுக்குள்ளே “ஒஹ்..மை முருகா .. உனக்கு எக்ஸ்ட்ரா பால் அபிஷேகம் confirm” என்று “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் “ சாங் போட்டு முருகனுடணும், மயிலுடனும்.. ஆடிக் கொண்டிருந்தாள்.

அவளின் mind வாய்ஸ் புரிந்த அர்ஜுன் ,

“என்ன சுபா? டான்ஸ் ஆடுரீங்களோ?” என்று கேட்க, (குத்தட்டமோ என்று தான் கேட்க நினைத்தான்.. ஆனால் அந்த வார்த்தை அவனை தமிழ் தெரிந்தவனாக காட்டி விடம் என்று தான் இப்படி கேட்டான்..)

ஐயோ .. நம்ம வாத்தியாருக்கு எப்படி தெரிஞ்சுது என்று யோசித்த படி

 “என்ன கேப்டன். சொல்றீங்க ?” என்றாள்..

“இல்லை.. நீங்க டான்ஸ் கத்துட்டு இருக்கேன்னு சொல்லியிருந்தீங்களே... அதை கேட்டேன்” என்று சமாளித்தான்..

சுபாவும் .. ஹப்பா... கேப்டன் க்கு எதுவும் தெரியல.. என்று உள்ளுக்குள் மகிழ்ந்த படி “ஹி..ஹி.. ஆமாம். .கேப்டன்.. “ என்று வழிந்தாள்.

அதோ இதோ என்று தீபாவளியும் வந்து விட, அவர்கள் ட்ரைனிங் குரூப் தவிர, மற்ற வீரர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஊருக்கு சென்றிருக்க, மீதி பேர் மட்டுமே இருந்தனர். அன்றைக்கு எல்லோருக்கும் பொது விடுமுறைதான் என்பதால், அவர்கள் superior அனைவருக்கும் பக்கத்திலே quarters இருப்பதால் யாரும் வரவில்லை. campus hostel இல் உள்ளவர்கள் மட்டுமே இருக்க, அதிலும் ட்ரைனிங் கிடையாது என்பதால், அங்கே அங்கே அமர்ந்து பேசிக் கொண்டும், தங்கள் வீடுகளுக்கு போன் பேசிக் கொண்டும் இருந்தனர்.

சுபாவும் , நிஷாவும் காலையிலேயே கிளம்பியிருந்தனர்.. அவர்கள் எப்போதும் போல் மதியம் ஒரு மணி ஆகவும் ரெடி ஜூட் என்று சென்றனர்.

ராகுல், அர்ஜுனும் பின்னாடியே கிளம்பினர்..

சுபா அம்மா, அப்பா ஹோடேலில் தங்கியிருப்பதால், இருவரையும் அந்த மெட்ராஸ் டிபன் ஹோடேல்க்கு வர சொல்லி விட்டாள் சுபத்ரா.. 

தன் அம்மாவை பார்த்து ஓடி வந்து அணைத்துகொண்ட சுபா “ருக்கு.. மிஸ் யு சோ மச்.. மை டார்லிங்.. “ என்றாள்.

அவள் அப்பா “என்னை மிஸ் பண்ணலையாடா குட்டிமா.. ?” என்று வினவ ,

“உங்களையும் தான் அப்பா.. “ என்றாள்

“அப்போ எங்களை.. ?” என்றவாறு வருண், மகிமா இருவரும் கேட்டனர்.

சுபாவிற்கு surprise கொடுக்க, அங்கே வருண், மகியும் இருக்க, சுபத்ரா ஆச்சரியாத்தில் துள்ளி குதித்தாள் ..

“ஹேய்.. சோடாபுட்டி, கீமா.. நீங்க வருவாதாக சொல்ல வில்லையே?”

“ஏன்.. அம்மா செஞ்ச ஸ்வீட்ஸ் எல்லாம் நீயே மொக்கலாம்னு நினைச்சியோ ? விடுவோமா?” என்றபடி அவளோடு இருவரும் highfi கொடுத்தனர்.. நினைவு வந்தவளாக

“ஹேய்.. இவள் நிஷா.. நமக்கு கூஸ்.. உங்கள மாதிரி இங்கே எனக்கு friend.. “ என்று அறிமுகபடுத்தினாள்

நிஷா சுபாவின் பெற்றோரிடம் வணங்கியவள், வருண், மகியிடம் “ஹாய்” என்றாள்.

“ஹாய்.. நிஷா .. எங்கள செட் பண்ணின மாதிரி இங்கேயும் ஒரு அடிமையா செட் பண்ணிட்டாளா’? இப்படி ஏமாந்துட்டியே மா “ என்று வருண் சிவாஜி மாதிரி பேச,

மகியோ “welcome to த்ரீ இடியட்ஸ் கிளப்.. இப்போ நாம Fabulus four ன்னு மாத்திட்டோம்..”

நிஷாவும் சிரித்தபடி அவர்களோடு hifi கொடுத்தாள்.

சுபாவின் அம்மா “நிஷா ..நீ எந்த ஊர் மா... ?” என்று கேட்க,

“எனக்கு சொந்த ஊர் மதுரை பக்கம் மா “

“ஒஹ்.. அப்படியா.. எங்க பூர்வீகம் திருநெல்வேலி தான் மா.. உங்க வீட்டை பத்தி சொல்லுமா..”

“அப்பா மதுரைலே ஒரு பேங்க் மேனேஜர். .அம்மா ஹவுஸ் wife .. எனக்கு ஒரு தங்கை இருக்கா.. இப்போ பிளஸ் டூ... பேர் ரம்யா... “

“உன்னை எப்படிமா.. வீட்டுலே மிலிடரிக்கு அனுப்பினாங்க.. ?” என்று வினவ,

“எனக்கு ரொம்ப ஆசை ஆன்ட்டி.. கொஞ்சம் காலேஜ்லே சண்டிராணின்னு வேற பேரா..? அதுனால எதையும் சமாளிப்பேன் என்ற தைரியத்தில் அனுப்பி வச்சுட்டாங்க..”

“ஆன்ட்டி எல்லாம் வேணாம்மா.. எல்லாரையும் மாதிரி அம்மான்னு கூப்பிடு.. வீட்டுலே எல்லாரையும் தேடுதா...?’

“கொஞ்சம் தேடத்தான் செய்யுதுமா.. ஆனால் பிடிச்ச வேலை செய்யுறபோ கிடைக்கிற இந்த சந்தோஷம் ரொம்ப நிறைவா இருக்கு... “

வருணோ “ஹேய்.. நீயும் எங்களை மாதிரிதான... ? அதான் சுரா உன்னை வளைசுட்டாளா?”

“ஆனால்.. வருண் இந்த ராட்சசி கிட்ட மட்டும் என்னோட எந்த ஆட்டமும் செல்லுபடியாக மாட்டேங்குது.. பா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.