(Reading time: 11 - 21 minutes)

து சரிதான்”

சுபா, “ஹேய்.. எல்லாரும் என்னை பார்க்க வந்துட்டு அவகூட பேசிட்டு இருக்கீங்க.. ? டூ bad. மீ கோவம்...” என,

“அய் ஜாலி.. அம்மா நீங்க எனக்கு அந்த ரவா லட்டு கொடுங்க.. “ என மகி சொல்ல,

“ஹேய்.. ருக்கு நோ.. அது எனக்குதான். .அந்த கீமாக்கு கிடையாது“ என்றபடி அவளை துரத்த..

கிருஷ்ணன் “ஹேய். .எல்லாரும் விளையாண்டது போதும்.. உள்ளே போகலாம் வாங்க.. “ என்றபடி ஹோட்டல் உள்ளே சென்றனர்..

இங்கே இத்தனை வேடிக்கையையும் பார்த்துக் கொண்டிருந்த ராகுலின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..

“அர்ஜுன் .. யாருடா இது.. ? சுபாவோட friends ன்னு தெரியுது.. இப்போதான் பார்க்கிறாங்க... அதுக்குள்ளே எல்லாரும் இப்படி mingle ஆயிட்டாங்களே... அவன் பேர் என்ன? “

“அதான் சொன்னேன் இல்ல.. அவன் பேர் வருண் ... இது வில்லன் நம்பர் ஒன் ...”

“ஏண்டா.. உனக்கு முன்னாடியே தெரியுமா.. ?”

“தெரியும்... சுபாவ பத்தி நல்லாவே தெரியும்.. “

“அவன் எனக்கு எப்படி வில்லன் ஆவான்..?”  என்று கேட்டு கொண்டிருக்கும் போதே.. அவன் முதுகில் ஒரு அடி விழ, திரும்பி பார்த்தவன். ஆச்சரியத்தில் விழி விரித்தவன்

“ஹேய்.. மிதுன் .. நீ எப்போடா வந்த ?”

திரும்பிய அர்ஜுன் “வாடா” என.

“உனக்கு இவன் வரது தெரியுமாடா ?

“ஹ்ம்ம் .. தெரியும் ..” என்றவன் “உள்ளே போகலாம்”

“எப்படி டா.. ? நாமா இதுவரைக்கும் அவங்க கண்லே படமட்டோமே .. இப்போ என்ன புதுசா ?” என்று ராகுல் குழம்பிய படி கேட்க,

“வா.. உள்ளே போய் பேசலாம்.. “ என்று இருவரையும் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.

இவன் சுபா & கோ வை நெருங்கும் சமயம் கேட்டது

“டேய்.. வருண், மகி .. நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்துடீங்களே.. உங்க வீட்டுலே கஷ்டமா இருக்கதாடா...?’

“ஹேய்.. லூசா நீ.. ?  நாம விவரம் தெரிஞ்சதிலேர்ந்து மூணு பேரும் சேர்ந்துதான் இருக்கோம்.. எல்லாம் அவங்களுக்கு புரியும்..” என்றனர்.

“அப்பா.. நீங்களாவது சொல்லகூடாதா .. .?”

“நான் சொன்னேன்மா.. கேட்க மாட்டேங்கறாங்க..” என்றார்..

“சுரா டார்லிங்.. நீ வொர்ரி பண்ணாதா.. நாங்க ரெண்டு பேரும் காலையிலே வீட்டுலே எல்லா பூஜையும் முடிச்சுட்டு ஏழு மணி flight பிடிச்சு, அங்கேர்ந்து cab எடுத்துட்டு நீங்க வர அரை மணி நேரம் முன்னாடிதான் வந்தோம் .. போதுமா.. “

இதை எல்லாம் கேட்டும் கேட்காத மாதிரி அர்ஜுன் முன்னே செல்ல, அவன் பின்னாடி அவன் friends சென்றனர்.. அவர்களை கவனித்து சுபத்ரா.

“கேப்டன்.. “ என்று அழைத்தாள்..

அப்போதுதான் பார்ப்பது போல் அவளை ஆச்ச்சர்யாமாக பார்த்துக் கொண்டே..

“ஹலோ . .சுபத்ரா.. நீங்க எங்கே வந்து இருக்கீங்க..? “ என்று வினவினான்.

ராகுல் மனசுக்குள்ளே “அடேங்கப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி “ என்று நினைத்தான்.

“கேப்டன்.. எங்க அப்பா, அம்மா.. friends என்று எல்லாரையும் ஆங்கிலத்தில் அறிமுகபடுத்தினாள்..

நிஷாவும் ராகுல், அர்ஜுன் இருவரையும் பார்த்து ஒரு ஹலோ சொன்னாள்.

சிறியவர்கள் அமைதியாக இருக்க,

கிருஷ்ணன் “ஹலோ சார்” கை நீட்ட , அர்ஜுனும் கைகுலுக்கிவிட்டு “ஹலோ” என்றபடி வணக்கம் தெரிவித்தான்..

“சார்.. நீங்க பேஸ் தமிழ் நாடா.. “ என்று வினவ,

அர்ஜுன் சிறிது ஆச்சர்யத்தோடு “எப்படி கண்டுபிடிச்சீங்க.. ?” என்று தமிழில் வினவ,

“நீங்க கைகுலுக்கிட்டு, வணக்கம் சொன்னவுடனே கண்டுபிடிச்சேன்... பொதுவா நார்த் இந்தியன் ஹலோ சொல்லிட்டு கால்ல விழுவாங்க அல்லது ஹக் பண்ணுவாங்க.. நம்ம பக்கம் தான் வணக்கம் சொல்லுவோம். நீங்க வாய் திறந்து சொல்லாட்டாலும் உங்க கை அதுவா வணக்கம் வச்சது.. “ என்றவுடன்

“ஒஹ்.. பிரமாதம் சார்.. “ என்றான்..

பிறகு தன் நண்பர்களை “இவன் ராகுல் .. அவனும் என்னை மாதிரி கேப்டன்.. இவன் மிதுன் என் friend.. சென்னை லே பிசினஸ் பண்றான்.. “ என்று அறிமுகம் செய்து வைத்தான்.

“ஒஹ்.. நீங்க தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?” என்று கேட்க,

“இல்லை சார்.. எல்லாரும் போக முடியாது... சோ நாங்க அப்புறம் போய்க்க்கலாம்ன்னு விட்டுடோம்.. “

“உங்க பாமிலி எல்லாம் “

“அப்பா, அம்மா சென்னைலே இருக்காங்க.. அப்பா கலெக்டர்.. அம்மா .. ஸ்கூல் ரன் பண்ணிட்டு இருக்காங்க.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.