(Reading time: 8 - 16 minutes)

திராவும் அனன்யாவும் ஒரு வண்டியில் செல்ல, பரத் அவன் வண்டியில் சென்றான். ஆஃபிஸில் இருந்து வந்ததிலிருந்தே பரத் யோசனையில் இருந்தான். அனு இப்படி நடந்து கொள்ள மாட்டாள்.. சில வருடங்கள் ஆகிறது அவள் இப்படி இருப்பதை கைவிட்டு பின் இன்று ஏன் இப்படி? அவளை இயல்பு நிலைக்கு எப்படி கொணர்வது?! என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

கடற்கரை வந்தும் கூட அதிகம் பேசாமல் அணுவையும் ஆதிராவையும் கண் காணித்தபடி அமர்ந்து கொண்டிருந்தான். அவன் அப்படி இருப்பதன் காரணம் இருவருக்கும் புரிந்து தான் இருந்தது. அதனால் இருவரும் அவனை அவ்வளவு தொந்தரவு செய்யவில்லை.

"பரத்", ஆதிரா.

"ம்ம்ம்"

"ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரவா?"

"நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன்."

"ஹ்ம்ம் எனக்கு ஸ்ட்ராபெர்ரி"

"ஹ்ம்ம் அம்மு உனக்கு பிஸ்தா தானே?"

"ம்ம்ம்ம்" ஆமாம் என்பது போல அனு தலையசைக்க ஐஸ்கிரீம் வாங்க சென்றான் பரத்.

அவன் போனபின் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் ஆதிரா.

"அனு"

"ம்ம்?"

"இப்போ ரிலாக்ஸா இருக்கியா?"

"ம்ம்ம் ஆமாம் ஆதி.. கொஞ்சம் மனசு தெளிவா இருக்கு.."

"ஹ்ம்ம் இன்னைக்கு விதார்த் தான் கால் பண்ணி இருந்தானாம்?"

"ம்ம்"

"என்ன சொன்னான் ? ஏதாவது தப்பா..? அதுனால தான் கோபத்துல போனை உடைச்சிட்டியா?"

"ம்ம்ம்ம் இல்ல"

"என்ன பேசுனான்?"

"எதுவுமே பேசல"

"என்னது ?!!"

"ஆதி ப்ளீஸ் இதை பத்தி இப்போ பேச வேண்டாமே.. அங்க பாரு மல்லிகை பூ.. இரு நான் போய் வாங்கிட்டு வரேன்"

"நானும் வரேண்டி"

"அடடா நான் என்ன சின்ன பிள்ளையா? பரத் வந்த காணோம்ன்னு தேடுவான்.. நீ இங்கயே இரு நான் வாங்கிட்டு வரேன்"

"ஹ்ம்ம் அதுவும் சரி தான் போய்ட்டு வா"

அப்போது அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேறுபுறம் அதை திருப்ப மல்லைகை பூவை சாக்காய் வைத்துக் கொண்டாள். ஆனாலும் அவளுக்கும் ஆதிராவுக்கும் மல்லிகை என்றால் தனி மயக்கம்.

அந்த படைக்கருகில் அமர்ந்திருந்த அந்த பூக்காரியிடம் பூவை வாங்கி கொண்டு திரும்புகையில் காதில் விழுந்தது அந்த பெயர்.!!

"தேவ்..!!"

"இல்லை தேவ் நீங்க நினைக்கிறது நடக்காது..!! காலைல நீங்க என்னை பார்த்ததை நானும் பார்த்துட்டேன்.. அப்போ உங்க கண்ல தெரிஞ்ச எதுவோ ஒன்னு தான் இப்போ நான் உங்க கூட பேசிட்டு இருக்கிறதுக்கு காரணம்.. அதுக்காக இப்படி எல்லாம் என்னால செய்யமுடியாது ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. உங்க வாழ்க்கையை பார்த்துட்டு நல்ல படியா இருங்கன்னு சொல்ல தான் நான் வந்தேன்!!!"

"ப்ளீஸ் ராகவி நான் சொல்றதை கொஞ்சம்.."

"இல்லை வேண்டாம் ப்ளீஸ் நான் கிளம்பறேன்"

"ரா..."

"ப்ளீஸ் தேவ்"

காதில் விழுந்த அந்த பெண் குரலும் ஆண்குரலும் அந்த பெயரும் ஏனோ படகுக்கு அந்த பக்கம் சென்று அநாயாவை பார்க்க தூண்டியது. சென்று எட்டி பார்க்க ஒரு ஆணிடம் தலையசைத்து விட்டு திரும்பி இவளை நோக்கி நடந்து வந்து இவளை தாண்டி சென்ற அந்த இளம் பெண்ணை திரும்பி பார்த்தாள் அனன்யா.

இவளை விட வயது சின்னவளாக இருக்க வேண்டும்.. அந்த ஆணை திரும்பி பார்த்தாள் இப்போது/..!!

பின் இருந்து பார்க்கும் போது அது தெரிந்தவரை போல தோன்ற, அது யாரென இதயம் கணித்த நொடி தடதடக்க, மெதுவாக அருகில் சென்று பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

பக்கவாட்டு தோற்றத்தில் தெளிவாக தெரிந்தது!! அவன்.. வேதாந்த்!!!!

தேவ் என்று அழைத்ததும் கோபம் வந்த காரணம் இதுவாக கூட இருக்குமோ?!  அடுக்கடுக்காய் கேள்விகள் மனதுள் பிறப்பதற்காய் வரிசையில் நிற்க, தலையை உலுக்கி 'இது தேவையற்ற வேலை' என்று அவள் நகரும் சமயம், பக்கவாட்டில் நின்ற அவளை பார்த்து எழுந்து விட்டிருந்தான் வேதாந்த்!!

"நீயா?" குரலில் துளி கூட குற்ற உணர்வு இல்லாத சீற்றம்..!!!

 

Episode 06

Episode 08

ஊஞ்சல் ஆடும்..!!!!

{kunena_discuss:884}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.