(Reading time: 6 - 12 minutes)

திலும் வந்த முதல் நாள் இரவே அந்த கல்யாணத்திற்கு கிளம்ப வேண்டும் என்று கோமதி சொல்ல, கோபத்தின் உச்சியில் ஏறி அமர்ந்திருந்தாள் நித்திலா.

"என்ன கோம்ஸ் நீ சாயந்திரம் தானே வந்தோம் அதுக்குள்ள கிளம்ப சொல்ற?"

"ஆமாடா, நாளைக்கு நிச்சயம் அடுத்த நாள் பொண்ணு அழைப்பு, அடுத்த நாள் தான் கல்யாணம், என் ஒன்னு விட்ட அண்ணன் பேத்தி இல்லையா, சின்னதுல இருந்து ஒண்ணுமண்ணா  இருந்தவக அப்போ நம்ம கண்டிப்பா போகணுமில்ல?"

"ஒண்ணுமண்ணா இருந்த நீ போ கோம்ஸ் என்னையே ஏன் பாடப் படுத்துற?" சலித்துக் கொண்டு கட்டிலில் சரிந்தவள்,

"பெரியவங்க கிட்ட என்னடி இப்படி பேச்சு?" என்ற அன்னையின் அதட்டலில் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

"அவளை ஏன் திட்ற சாரதா? விடு அவ கெளம்புவா"

"நீ சும்மா இரும்மா எல்லாம் நீயும் அப்பாவும் கொடுக்கிற செல்லம், அவ தங்கச்சியும் பொண்ணு தானே? இவளை விட சின்ன பொண்ணு சொன்ன உடனே கிளம்பி தாத்தா கூட அங்க போயிட்டா, இவளை பாரு இன்னமும் ஆம்பளையாட்டம் அந்த பேண்டும் சட்டையும் கழட்டாம வியக்காணம் பேசிட்டு இருக்க"

"ப்ச் விடு, தீட்டாத நீ வெரசா கெளம்பு போ"

"நான் ரெடி ஒழுங்கா அவளை நன் எடுத்து வெச்சிருக்கிற சேலையை கட்டிட்டு நகையையும் போட்டுட்டு வர சொல்லுங்க"

"ஹ்ம்ம் கும்.. அது ஒன்னு தான் குறைச்சல்" வாய்க்குள்ளேயே நித்திலா முனங்க,

"என்னடி?" என்று திட்டினார் சாரதா.'ஒண்ணுமில்லை' என்பதை போல தலையை ஆட்டிவிட்டு. தனக்காக வைக்கப்பட்டிருந்த அந்த வெளிர்நீல பட்டு புடவையுடன் நகர்ந்தாள்.

ஒரு வழியாக சேலையுடன் சண்டையிட்டு அதை கட்டி முடித்து, நகைகளையும் போட்டுக் கொண்டு தயாராகி அவள் வர, அவளுக்கு நெட்டி முறித்து த்ரிஷ்டி கழித்து கூடி சென்றார் கோமதி. சாரதாவின் கண்களிலும் ஒரு மெச்சுதல் மட்டும் வந்து போனது!!

இரண்டு மணி நேர பயணத்தின் முடிவில் காரைக்குடியை வந்தடைந்திருந்தனர். காரைக்குடி செட்டிநாடு வீடு!! பெரிய தூண்கள் வீடெங்கும் இருக்க வண்ண விளக்குகளுடன் பளிச்சிட்டது வீடு!! நிச்சயம் என்பதால் வீட்டிலேயே வைத்திருந்தனர் பெண் வீட்டார்.

இரண்டு மணி நேரத்திலேயே சோர்ந்து போயிருந்தால் நித்திலா. உள்ளே சென்று நலவிசாரிப்புகள் முடிந்ததும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவளை அவளுக்கு எதிர்புறம் அமர்ந்தபடி பார்த்து கொண்டிருந்தான் அவன்!!

அவள் உள்ளே வருகையில் எதற்ச்சையாக பார்த்து அடையாளம் காண முடியாமல் தவித்து, அவளையே விழிகளால் பின் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னாள் அவளை சந்தித்தது நினைவில் ஆட கண்களால் அவளை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த அவன்..!!!!

இந்த முறையாவது அதிக பக்கங்கள் கொடுக்க முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை.. ஒரு நேர்முக தேர்வுக்காக பயிற்சி செய்து கொண்டிருக்கையில் இடையில் எழுதிய அத்தியாயம்..!! பிழைகள் இருக்கும்.. மன்னிக்கவும்... தொடர்ந்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி..

உயிர் தேடல் தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.