(Reading time: 22 - 43 minutes)

ருவது மின்மினி என உறுதியானால் உன் தற்கொலை முயற்சியை நாம் கவனிப்போம்…. இல்லையெனில் ஏன் வீண் வேலை….அவர்களே நம் சிரசை கொய்திருப்பார்கள்…” இவள் இன்னும் படையெடுப்பை நம்பவில்லை அதனால் வர மறுக்கிறாள் என எண்ணிவிட்டான் போலும்…. 

இதற்கு மேல் மறுக்க இவனிடம் காரணம் சொல்ல முடியாது என்பதைவிடவும் நெருங்கி வரும் ஆபத்தின் அளவு புரிய…… ஒரு முடிவோடு அவனோடு இணைந்து இவளுமே ஓடினாள்…..பற்றி இருந்த கையை மட்டும் உருவிக் கொண்டாள்…..

கோட்டையை காப்பாற்ற கோட்டைக்குள் இருக்கும் ஒவ்வொரு வீரனும் இணைவது தற்சமயம் முக்கியம்…. அதிலும் இவனைப் போன்ற சாதுர்யவான்கள் சர்வ நிச்சயமாய் தேவை இப்போது….என்ற நினைவில்தான் இவனை கோட்டை தலைவனுக்கு அறிமுகபடுத்த எண்ணினள் இவள்.

கோட்டையின் கீழ் புறம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த திறந்தவெளி படிகட்டுகளில் அவன் நான்கு நான்கு படியாக கடந்து செல்ல அவனுக்கு சற்றுப் பின்னால் இவளும் அப்படியே அவனைப் போலவே இறங்கிக் கொண்டிருந்தாள்.

‘அந்நியனாய் இருந்தாலும் ஆபத்தென்றதும்  இவர்களை விட்டு தப்பி ஓடாமல் உதவிக்கு வருகிறானே….’  அவனைப் பற்றித்தான் சற்றாய் ஸ்லாகித்துக் கொண்டிருந்தது பெண் மனது.

 “ஏய் மின்மினி….” அப்பொழுதுதான்  அப்படி அழைத்தான் அவன்……

“மின்மினியா ? அது ஆண்பிள்ளை பெயர் போன்றா இருக்கின்றது உமக்கு?” ஸ்லாகிப்பைவிட்டு கோபமாகவே கேட்டாள். இவள் ஆண் என அவனை நம்பச் செய்தாக வேண்டுமே…..

“நிச்சயமாக இல்லைதான்” இந்த அவன் பதிலில் விஷமமிருந்தது….. 

பெண் என அறிந்து கொண்டானோ என்ற ஒரு தவிப்பு இவள் உள்ளே……ஆண் என்ற வரயறைக்கு இவள் மிகவும் ஒடிசலாக தெரிவதை கேலி செய்கிறானோ என்றும் தோன்றுகிறது…..

இரண்டாம் காரணத்தை பற்றியே இவள் உரையாடலைத் தொடர எண்ணினாள்……அது நலம்… “உருவ அமைப்பை கேலி செய்வதுதான் தங்கள் வழமையோ?..... அது குற்றம்…“

“ஆனால் மின்மினி கண்மணி என குழந்தையை சீராட்டுவதில் குற்றம் ஏதுமில்லையே…..” குழந்தைக்கு பதில் கொடுக்கும் தொனிதான் அதில் ப்ரதானம். ஆக இவளை குழந்தை என்கிறான் மீண்டுமாய்….. இம்முறை இவள் சீறும் முன்

“என்னை என் தகப்பனார் பொன்னி எனதான் அழைப்பார் வெகுகாலமாய்…. அது பாசம்.” இப்படியாய் ஒரு பதிலை அவனிடமிருந்து அந்த கணத்தில் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை…..

அவன் குரலில் இருந்த ரசனையும் சுகிப்பும் அவன் அதை எத்தனை அனுபவித்து சொல்கிறான் என இவளுக்கு முரசறைகின்றனதானே…. 

சற்றாய் நெகிழ்கின்றதோ இவள் நெஞ்சம்…..?

“எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள்……மனதளவில் எனக்கு மகள்போன்றவள்….தொடர்ந்து சிலகாலம் அவளை சந்திக்க செல்லவில்லை எனில் வீட்டு வாயிலில் வாளோடு காத்திருப்பாள்….கோபமாம்….ஆனால் அப்படிபட்ட நாட்களில் அவள் எனது உடையைத்தான் அணிந்திருப்பாள்…..தவறாக நினையாதீர்….உம்மைப் பார்க்கவும் அந்த  கோலம் நியாபகம்…..”

அவன் சொன்ன காட்சியை இவள் மனக் கண்ணில் காண்கிறாள்….. அதோடு அத்தனை நேரம் ஏதோ ஒருவகையில் நிர்கதியாய் நின்ற உணர்வில் இருந்தவள் அல்லவா…..இவன் ஏதோ ஒருவகையில் இவளை அவனது குடும்பத்தினரோடு ஒப்பிடுகிறானே….. அதிகமாகவே நெகிழ்கிறது பெண் உள்ளம்.

 “உமது பெயர் தெரியாதாகையால் மின்மினி என அழைத்தேன்….தவறென்றால் மன்னிக்கவும்” நேரடியாய் மன்னிப்பு கேட்கும் அவனது இந்த சுபாவத்தை நிச்சயமாய் இவளால் நேசிக்க முடிகின்றது….

இதையெல்லாம் பேசிய பின் சொன்னதாலோ என்னவோ அடுத்த அவனது வார்த்தைகளில் அவனை அவளால் முழுதாய் வெறுக்க இயலவில்லை போலும்.

“என் பெயர் மானகவசன்….பாண்டிய தேசத்தை சார்ந்தவன்…..உமது பெயர் என்ன?” முறையாய் தன்னை அறிமுக படுத்திக் கொண்டு இவளின் அறிமுகம் நாடினான்….

நின்றேவிட்டாள் இவள்….

மானகவசன் இதுதான் இவள் கேள்வியுற்ற பாண்டிய சேனாதிபதியின் பெயர்….

“என்னவாயிற்று? உம் பெயரைத்தான் கேட்டேன்….?” இவள் நின்றதை உணர்ந்து மீண்டுமாய் கேட்டானே தவிர அவன் நின்றிருக்கவில்லை…

அந்த நேர உணர்ச்சி கலவையில் எதோ சிந்தனையில் “ருயம்” என்றே ஆரம்பித்துவிட்டாள் இவள்…. அதன் பின்தான் ஞாபகத்தில் வருகிறது அவளது வேஷம்.

“உண்மை பெயரை சொல்ல விருப்பமில்லை என்றால் சொல்ல வேண்டாம்….ஆனால் நீர் என்னோடு ஒரு முக்கிய வேலைக்காய் அந்த துருக்கியர்களை சந்திக்க வரவேண்டியதாயிருக்கிறது……அப்போது உம்மோடு பேசிக் கொள்ள ஒரு பெயர் அவசியமாகிறது எனக்கு ” அவன் காரணம் சொல்ல பிரமித்துப் போனாள் இவள்.

இதற்குள் இவன் இந்த போரை சந்திக்க திட்டம் தீட்டிவிட்டானா??? இத்தனைக்கும் இவளோடு மின்மினி பொன்னி தங்கை என கதை சொல்லிக் கொண்டு வந்தவன்…..

இடையே மின்னலிட்டுப் போகிறது மற்றுமொரு சிந்தனை…… பாண்டிய சேனாதிபதி துருக்கிய படையை சந்திக்கவா….? இவர்களுக்கு எதிராக அவர்களை இங்கு கூட்டி வரமாட்டான் என என்ன நிச்சயம்???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.