(Reading time: 19 - 37 minutes)

ச்சான்… இது என் தங்கச்சிடா…”

இஷான் புன்னகையுடன் சொல்ல, அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் ஜெய்…

“சதி இது யாருன்னு உனக்கு தெரியுமா?....”

கேள்வி கேட்ட அண்ணனை வெளிப்படையாகவே முறைத்தாள் சதி…

“சரி சரி முறைக்காதடா… இவன் என் ஆருயிர் நண்பன்… சொல்லியிருக்கேன்ல எங்கூட ஒன்னா ட்ரெயினிங்க் முடிச்சான்னு அது இவன் தான்… இப்பகூட ஒன்னா வொர்க்ல ஜாயின் பண்ணுறோம்னு காலையில கூட சொன்னேனே…. நினைவிருக்கா?...”

அவன் கேட்கவும், அவள் ஆம் என்பது போல் தலை அசைத்தாள்…

“அப்புறம் இன்னொன்னு தெரியுமா?... ஜெய் எனக்கு ஃப்ரெண்ட் மட்டுமில்லை…. உனக்கு முறைப்பையனும் தான்…”

அவனின் வார்த்தையில் அவளை விட அதிகமாய் அதிர்ந்து போனான் ஜெய்…

“என்னடா பார்க்குற?... இவன் தான் நம்ம சோமநாதன் மாமாவோட பையன்… நம்ம தாத்தா கூட அடிக்கடி சொல்லுவாரே சிவான்னு...”

அவன் சொல்லிக்கொண்டே போக, அவள் உதடுகள் தானாய் முணுமுணுத்தது ஜெய்யைப் பார்த்த வண்ணம்…

“சி…..வ……..ம்….ரு…த்….யு……..ஞ்………….ஜெ…..ய்………”

அவள் சொன்ன தனது பேர் தனக்கே அதிர்வினை உண்டாக்குமென அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை…

எனினும் அவள் பார்வை தன்னை விட்டு அகலாமல் இருக்க, அவன் அவள் விழிகளுக்குள் மூழ்கிட துடித்தான்…

அந்த சமயம் அவனது ஆழ்மனம், சட்டென விழித்துக்கொள்ள, அவன் தன் பார்வையை திருப்பிக்கொண்டான்….

“அந்த சிவா வேற யாருமில்லை சாட்சாத் இவனே தான்….”

இஷான் தங்கையிடம் உற்சாகமாக சொல்ல, அவளோ ஜெய்யின் மீதே தன் பார்வை மொத்தத்தையும், மனதையும் வைத்திருந்தாள்…

“மச்சான்… உங்க இரண்டு பேரையும் நான் அறிமுகப்படுத்தி வச்சேண்டா…”

இஷான் பாவமாக சொல்ல,

“அதுக்கு என்ன?...” என்பது போல் புருவம் உயர்த்தினான் ஜெய்…

“டேய்… ஃபார்மாலிட்டின்னு ஒன்னு இருக்குல்லடா… இரண்டு பேரும் சிரிச்சிக்க கூட மாட்டிக்குறீங்க?..”

அவன் தனது சந்தேகத்தை கேட்டே விட, சதி அவனைப் பார்த்து புன்னகைத்தபடி,

“உன் ஃப்ரெண்ட் தான?... பார்மாலிட்டி எல்லாம் ஃபாலோ பண்ணுற ஆளா இருந்தா தான், அடிப்பட்ட எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருப்பாரே…”

அவள் கோபமும் சிரிப்புமாய் சொல்ல, ஜெய் அவளை நேராய் பார்த்தான்…

“இல்ல சதி… வண்டி மோதுற சத்தம் கேட்டு அவன் ஓடி வந்த வேகம் இருக்கே… உனக்கு தெரியாது…”

“ஓ….. அதான் வேகமா வந்து எனக்கு உதவி பண்ணினாங்களா?...”

“ஆமாடா… இடிச்சவன் தப்பிச்சு போயிடக்கூடாதுன்னு அவனை பிடிச்சு அடிச்சிட்டான்… இது ஒரு குத்தமாடா?...”

அவன் அப்படி கேட்டதும், இஷானை முறைத்த சதி,

“சும்மாவே உன் ஃப்ரெண்டுக்கு ஜால்ரா தட்டுவ… இப்போ இவ்வளவும் நடந்த பிறகு கேட்கவா வேணும்?... என்னமோ செஞ்சி தொலை….” என்றவள்,

“வண்டி வேற கீழ விழுந்ததுல ஸ்டார்ட் ஆகுமான்னு தெரியலை…” என சொல்லிக்கொண்டே வண்டியை தூக்க முற்பட, அதற்குள் ஜெய் அதை தூக்கி நிறுத்தியிருந்தான்…

அவனை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தவள், ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, அது மாட்டேன் என அடம்பிடித்தது…

“போச்சு…. இப்போ நான் எப்படி வீட்டுக்குப் போறது?...”

அவள் முக வாட்டமாய் கேட்க, “என்னாலும் உன்னை இப்போ டிராப் பண்ண முடியாது… அதும் இல்லாம ஆட்டோ பிடிச்சு தனியா உன்னை அனுப்ப எனக்கும் மனசு இல்லை….” என்ற இஷான்,

ஜெய்யிடம் திரும்பி, “மச்சான் அந்த இன்ஸ்பெக்டர் வேற இப்போ வர சொல்லியிருக்குறார்… இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள நான் அங்க இருக்கணும்… நீ கமிஷனர் ஆஃபீஸ் பக்கம் தான போற?... இவளை கொஞ்சம் வீட்டுல டிராப் பண்ணிடுடா… ப்ளீஸ்….” என கெஞ்ச, ஜெய் முடியாதென்றான்…

“டேய்… டேய்… ப்ளீஸ்டா… போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல இருந்துட்டு ஹெல்ப் பண்ணாம போனா எப்படிடா?...” என பேச, ஜெய் அமைதியாக நின்றான்…

“ப்ளீஸ்டா மச்சான்…” என இஷான் மிக வற்புறுத்த,

“சரி…” என்றவன், காரை நோக்கி செல்ல, சதியும் அவனின் பின்னே நடந்தாள்…

காரில் அவள் அமர்ந்ததும் வண்டியை எடுத்தவன், சிறிது தூரம் சென்றதும், அவளை நோக்கி தண்ணீர் பாட்டிலை கொடுத்தான்….

“எதுக்கு?...” என்பது போல் அவள் பார்க்க,

“முழங்கையில இரத்தக்கறை இருக்கு… அதை கழுவிட்டு… இந்த பேண்டேஜை போட்டுக்கிட்டா நல்லது…” என அவன் அவளின் காயம் பற்றி குறிப்பிட்டு சொல்ல, அவளின் வியப்பான பார்வை ஒன்று அவனைத் தொட்டுச் சென்றது…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.