(Reading time: 19 - 37 minutes)

தே நேரம், “என்ன இஷான்… அங்க என்ன பார்க்குறீங்க?...”

ஜெய்யை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இஷானைப் பார்த்து தைஜூ கேட்க அவனோ தன் வேலையிலேயே கவனமாக இருந்தான்…

“இஷான்………..” என கத்திக்கொண்டே அவனது கையில் அவள் அடிக்க,

“ஸ்….. ஆ………. வலிக்குதுடி…..” என்றபடியே கைகளை தேய்த்துக்கொண்டே அவளிடம் திரும்பினான் அவன்…

“வலிக்குதா?... வலிக்கட்டும்… இன்னும் வலிக்கட்டும்… வாங்கிக்கோங்க…” என்றவள் மேலும் இரண்டு அடி அடிக்க, அவன் அவளிடம் செல்லமாக அடிவாங்கிக்கொண்டான் தடுக்க முடியாதவன் போல…

“நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்குறேன்… நீங்க என்னடான்னா ஜெய் அண்ணாவையே பார்த்துட்டு இருக்குறீங்க?...” என சொல்லிக்கொண்டே மேலும் அடிக்க கை ஓங்கியவளின் கரத்தினை சட்டென அவன் பிடித்துக்கொள்ள அவளின் கோபம் குறைந்தது…

“இப்போ என்ன என்னை அடிக்கணும் அவ்வளவுதான?... சரி அடி….” என அவன் சொல்ல, அவள் பேசாமல் இருந்தாள்…

அவன் கைகளுக்குள் இருந்த அவளது கரங்களை அவள் விலக்கிக்கொள்ளவில்லை அந்த தருணத்திலும்…

அவளது கரத்தினை பிடித்திருந்த பிடியை சற்று அழுத்தியவன், அவள் கரம் மேல் தன் கரம் வைத்து,

“தைஜூம்மா, அவங்க நம்ம மாதிரி கிடையாது… இவன் பாட்டுக்கு எந்திச்சு போயிட்டான்னா என்ன செய்ய?... அதான் அங்கேயே பார்த்துட்டு இருக்குறேன்… வேற ஒன்னும் இல்லடா…”

அவன் நிலைமையை விளக்கி சொல்ல, அவள் சற்று சமாதானமடைந்தாள்…

“ஹ்ம்ம்….. இன்னும் கோபம் போகலை போல?.....” என்றவன் அவள் கரங்களை வருட ஆரம்பிக்க அவள் நெளிந்தாள்….

“சரி சொல்லு… கோபம் போக என்ன செய்யணும்?.... குட்டிக்கரணம் அடிக்கட்டா?... இல்லை தோப்புக்கரணம் போடவா?....”

கேலியாக சொல்வது போல் சீரியசாக கேட்க

“கோவமெல்லாம் இல்லை…” என்றவள் சட்டென தன் கைகளை உருவிக்கொள்ள முயல, அவன் பிடித்துக்கொண்டான்….

“சரி கோபம் இல்லன்னா ஒகே தான்… பட் எதுக்காக இப்படி கையை விலக்கிக்கிற?... கொஞ்ச நேரம் பிடிச்சிக்கிறேனே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….”

அவனின் கெஞ்சுதல் அவளின் முகத்தில் சிரிப்பையும், அவனது தொடுகை அவளது முகத்தில் நாணத்தையும் வரவழைக்க, அதை இமைக்காமல் கண்டு ரசித்தான் இஷான்…

சற்று நேரம் காதலில் திளைத்துவிட்டு, பின் அதிலிருந்து வெளிவந்தவள்,

“அண்ணாவும் அவளும் பேசிப்பாங்களா இஷான்?...”

“பின்ன பேசாம?... அதெல்லாம் கண்டிப்பா பேசுவாங்க….”

“ஆமா ஆமா கண்டிப்பா பேசுவா…. உங்க தங்கச்சி பேசுவா, என் அண்ணன் கேட்டிட்டிருப்பார்… அதான் நடந்திட்டிருக்கும்…”

“என்ன தைஜூ இப்படி சொல்லுற?...”

“பின்ன வேற எப்படி சொல்லுவாங்க?... உண்மை எதுவோ அததான சொல்ல முடியும்?.. போலீஸ் ஆஃபீசர் உங்களுக்கே உண்மை கசக்குதா?...”

“அப்போ ஜெய் பேசமாட்டான்னு சொல்லுறீயா?...”

“பேசியிருப்பாங்க… அது நார்மலா இருந்திருக்கலாமே தவிர காதலை மனசுல வச்சி நிச்சயம் ஜெய் அண்ணா பேசியிருப்பாங்கன்னு எனக்கு தோணலை…”

“அவன் கொஞ்சம் அப்படித்தான்… ரொம்ப பேசமாட்டான்…”

“ஓ… சார் மட்டும் என்னவாம்?... அப்படியே பேசி தள்ளுறீங்களோ டன் கணக்கா?...”

“என்ன தைஜூம்மா… நான் பேசாமலா இருக்குறேன் உங்கிட்ட… பாரு இப்ப கூட உன் கையை எனக்குள்ள வச்சிட்டு தான இருக்குறேன்…” என்றவன் மெதுவாக அவளது கரத்தினை வருட, அவளுக்கு சிரிப்பு வந்தது…

அவள் சிரிப்பில் தன்னையே மறந்தவன், பின் எங்கே தங்கையையும் தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையையும் நினைப்பான்?... அப்போதைக்கு அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தன் காதல் வேலையை பார்க்க ஆரம்பித்தான் செவ்வனே…

அவளும் தன் மனங்கவர்ந்தவனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவனுடைய காதலில் தன்னை மறக்க தயாரானாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.