(Reading time: 19 - 37 minutes)

தன் பின் மருந்துக்கும் ஒருவார்த்தைகூட அவன் அவளிடம் பேசவில்லை…

வழியெங்கும் தன்னைப் பார்த்துக்கொண்டே வந்தவளின் பக்கம் தன் பார்வையை செலுத்தாது இருக்க அவன் பெரும்பாடுபட்டான்…

இது இந்த பயணம் இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என்ற ஏக்கம் இருவருக்குள்ளுமே இருக்க இருவருமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை…

அந்த நேரம் சட்டென அவளின் வீடு வந்துவிட, அவன் அவள் இறங்கும்வரை காத்திருந்தான்..

அவள் அசையாது அவனையே பார்த்திருப்பதை ஒரக்கண்ணால் கவனித்தவன், தொண்டையை லேசாக செறும, அவள் சிரித்தாள்…

பின் தானாக அவள் இறங்கிக்கொள்ள,

“சதி என்னம்மா?... உன் ஸ்கூட்டி எங்க?... யார் கார் இது?...” என்று கேட்டுக்கொண்டே அவசரம் அவசரமாய் வாசலுக்கு விரைந்தார் தட்சேஷ்வர்…

“அப்பா அது…..” என இழுத்தவள், தான் பதில் சொல்லாமல் விடமாட்டார் என புரிந்து கொண்டு நடந்தவற்றை சொல்ல, அவர் முகமெங்கும் கோபத்தின் பிரதிபலிப்பு…

“இவர் தான் அப்பா என்னை காப்பாத்தினார்….” என்று மகள் அறிமுகப்படுத்திய ஜெய்யினை சில கணங்கள் பார்த்தவர்,

பின், “என் பொண்ணை காப்பாத்தினதுக்கு நன்றி….” என சொல்ல, அவர் பார்வையோ, காப்பாத்தி சேர்க்க வேண்டிய சேர்த்துட்ட கிளம்பு என்ற தொனி கண்களில் தெறிக்க, அவன் சிறு தலைஅசைப்போடு அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றான்….

அவன் சென்றதும், விருவிருவென்று தட்சேஷ்வர் உள்ளே சென்றுவிட, சதியோ ஜெய் சென்ற திசையையே திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள்…

அறைக்குச் சென்றவள் கண்ணாடியில் தன் முகத்தினைப் பார்க்க, இதுவரை இல்லாத ஒரு பொலிவு வந்திருந்தது…

கண்கள் தானாக தனது முழங்கையின் மீது பட, உதட்டில் புன்சிரிப்பு உதயமானது அவளுக்கு….

சட்டையையும் தாண்டி இந்த ரத்தக்கறை எப்படி அவனுக்கு தெரிந்தது?... இஷான் கூட கண்டுபிடிக்கலையே என யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு விடைதான் கிட்டவில்லை…

பின்னர் “பார்த்துட்டேனே………………………………….” என கத்திக்கொண்டே கட்டிலில் விழுந்தவளுக்கு உள்ளமெங்கும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது….

மறுநாள் முதலே அவனை பின் தொடர ஆரம்பித்தாள்… அவன் காலையில் பார்க் வருவதை குறித்துக்கொண்டவள், அந்த நேரத்தில் படிக்க போவதாக வீட்டை விட்டு வெளியேறினாள்…

ஆரம்பத்தில் இதனை கேலி செய்த இஷான் கூட பின்னாளில் பார்க் வரும்போது சின்சியராய் படிக்கும் தங்கையையும் அவள் தோழியையும் கண்டு நிறைவு கொண்டான்…

அவள் வந்தது படிக்க மட்டும் அல்ல என மறுநாளே தெரிந்து கொண்டான் ஜெய்…

இருந்தும் வாய்விட்டு அவளிடம் எதனையும் கேட்டுக்கொள்ளவில்லை அவன்… அவளிடம் பேச முனைந்ததும் இல்லை… அவளும் பேச எண்ணியதில்லை…

பார்த்துக்கொண்டிருப்பதே போதும் என்றெண்ணியதே அதற்கு காரணமோ என்னவோ… பார்வையிலேயே திருப்தி பட்டுக்கொள்வாள்…

அவன் அவளை நேருக்கு நேராக பார்த்ததே இல்லை முதல் சந்திப்பிற்கு பிறகு… இருந்தும் அவன் கண்டுகொள்ளாமல் போகும் தருவாயில் எல்லாம் உதட்டில் அவனது பெயர் உச்சரித்து முடிக்கும் முன்பே அவன் அவள் பக்கம் ஏதோ வேலையாக இருப்பது போல் திரும்பிடும் அதிசயமும் அவளுக்கு வியப்பே…

அவளுக்கே அப்படியென்றால் அவனது நிலையை கேட்கவா வேண்டும்?... எப்படித்தான் அவள் அழைக்கும்போது அவன் திரும்புவானோ?... அவனுக்கே இன்றுவரை அந்த ரகசியம் பிடிபடவில்லை…

சுமூகமாக பார்வையிலேயே தன்னை பின் தொடர்ந்து கொண்டிருந்தவள் தன்னை நெருங்கி பேச முற்படுவாள் என்று அறியாத நிலையில் அவள் தன் மனதை தெரியப்படுத்த, அவனுக்கே அவளைவிட்டு விலகி போக சிரமமாகி போனது…

அப்படி இருக்கையில், இன்று எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து அவள் குறுகுறுவென்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவனது நிலைமையையும் கேட்கவா வேண்டும்?...

முடிந்தவரை சமாளிப்போம் என்றெண்ணியவனையும் அவள் படுத்தி எடுத்துப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்…

“சோ… நம்ம பர்ஸ்ட் மீட்டிங்க் எல்லாம் ரீவைண்ட் பண்ணி பார்த்தாச்சா?...”

அவள் சட்டென கேட்க அவன் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக அவள் சொன்னதையே கவனிக்காதவன் போல இருந்தான்…

“ஹலோ உங்ககிட்ட தான் கேட்குறேன்…” என அவள் அவனின் முகத்தின் முன் கையை ஆட்ட, அவன் என்ன என்பது போல் பார்க்க,

அவள் அவனை முறைக்க நினைத்தாள், பின், அந்த ரம்யமான நிலையில் ஒளி வெளிச்சத்தில் அவனது முகத்தைப் பார்க்க பார்க்க தெவிட்டாதவளாய் அவள் இருக்க, அவனுக்கு அவள் செயல் தன்னையும் மீறி காதலை வரவழைக்க பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்…

சீக்கிரம் இடத்தை விட்டு நகன்றிடவேண்டும் என மனதினுள் அவன் நினைத்துக்கொண்டிருக்க, ஆர்டர் எடுத்துச் சென்றவன் இன்னும் எதனையும் கொண்டுவந்தபாடில்லை…

அமைதியான இரவில் அழகான மெழுகுவர்த்தியின் வெளிச்சம் பரவ, அதில் தெரிந்த அவளது முகம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்ற, போனை எடுத்து அதில் கவனம் பதிக்க முயன்றான் ஜெய்…

எளிதாக இல்லாத போதும், சில நிமிடங்களில் அவன் போனிலேயே குறியாக இருக்க,

அவனை எப்படி பார்க்க வைக்க என யோசித்துக்கொண்டிருந்தவள் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிடலாமா என நினைத்துவிட்டு அந்த எண்ணத்தைக் கைவிட, இயற்கையே அதற்கு வழி செய்து கொடுத்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.