(Reading time: 26 - 52 minutes)

பார்த்து "ஐயோ மச்சான் செம சூப்பரா இருக்கீங்க. இப்படியே போயிடுச்சுனா கல்யாணத்துக்கு வந்துருக்க பொண்ணுங்க எல்லாம் எங்களை பாக்காம கல்யாண மாப்பிளைகளும் பரவாலைனு சொல்லி உங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க அப்பறம் மது உங்களை அடிக்க ஆரம்பிச்சிடுவா" என்று சொல்லி சிரித்தான்.

அவர்கள் அனைவரும் சிரித்ததுடன் “அவனை சீக்கிரம் கூப்பிட சொல்லி அய்யர் கிட்ட சொல்லுப்பா பையனுக்கு பாவம் வாசலையே பார்த்து பார்த்துக்கன்னு பூத்து போய்டுச்சு” என்று சொல்ல அது அய்யரின் காதில் எட்டியதோ என்னவோ "சீக்கிரம் மாப்பிளையை வர சொல்லுங்கோ " என்று குரல் கேட்க தன்னால் எழுந்த மதியை கண்டவர்கள் "டேய்ய் ஏஏஏ போயிடாதடா நில்லு ஆளு வரும் என்று சொல்லி சிரிக்க அசடு வழிந்தபடி அமர்ந்தவனை விஜய் வந்து வர சொல்ல நண்பர்கள் புடை சூழ மேடையில்சென்று அமர்ந்தான் மதி.

ஒருபுறம் மந்திரம் சொல்லி கொண்டிருக்க கண்களோ அவ்வப்போது மணமகள் அறை சென்று வந்தது. மணமகள் அறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த திவ்யாவும் பைரவியும் "என்ன மது உன் ஆளு அய்யர் கிட்ட மந்திரம் சொல்லாம விட்டா நேரா மணமகள் அறையில வந்து சொல்ல ஆரம்பிச்சிடுவார் போல இருக்கே " என்று வார "ஏய்ய்ய் சும்மா அவரை கிண்டல் பண்ணாதிங்கடி. அப்பறம் எனக்கு கேட்ட கோபம் வரும்" என்று சொல்ல "அய்யோடா இதை பாரும்மா "என்று அவர்கள் மீண்டும் கிண்டலை துவங்கும் முன் "பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ " என்ற அய்யரின் கத்தலில் திவ்யாவும் பைரவியும் மதுவின் கைபிடித்து அழைத்துவர இத்தனை நேரம் இருந்த சந்தோச உணர்வை தாண்டி சொல்ல இயலாத ஒரு பரபரப்பு வந்து ஒட்டி கொண்டது மதுவிடம். மெல்ல சென்று மதியின் அருகே அமர்ந்த போது ஏதோ ஒரு யுகமாக நடந்து வந்ததாக ஒரு உணர்வு அவளுக்கு.

சுற்றி உள்ளோர் பார்வை முழுதும் தன்னிடமே இருக்கும் என்று ஒரு தயக்கம் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் அவள் விழி உயர்த்தி மதியை பார்க்க அவனோ, "எனக்கு அப்படியொன்றும் கூச்சமில்லை " என்று சொல்வதை போல அவளையே விழி அகற்றாமல் பார்த்திருந்தான்.அவன் பார்வை சில்லென்று உள்ளிறங்க தலையை குனிந்து அமர்ந்தாள் ஒரு புன்னகையுடன்.குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் மதியின் கையால் மங்கள நாணை ஏற்று கொண்டாள் மது.

மகளின் வாழ்க்கையில் வசந்தம் தொடங்கியது என்ற சந்தோசத்தில் மதுவின் பெற்றோர் கண்களில் ஆனந்த நீர் வழிய நிற்க மதுவின் வீட்டினர் மனம் நிறைந்திருக்க மதியின் பெற்றோர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் மனமார்ந்த ஆசியுடன் தங்கள் புதிய வாழ்க்கையில் முதல் படியை எடுத்து வைத்தனர். அதன் பின் மோதிரம் எடுப்பது தேங்காய் உருட்டுவது என்று பல நிகழ்ச்சிகள் நடக்க எல்லாவற்றிலும் மதுவே வெற்றி பெற்றாள். "என்ன மச்சான் இப்படி பண்ணிட்டியே" என்ற நண்பர்களின் கேள்விக்கு "என் மது எப்போதும் தோற்க மாட்டாள் அது என்னிடமே என்றாலும் " என்று வந்தது அவன் பதில் அவளின் விழிகளை மட்டும் பார்த்தவண்ணம்.

மனதில் நின்ற காதலியே மனைவியாக

வரும் போது சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் சொந்தங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசை காதல் கைகளில்

சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

திருமண வாழ்வின் அடுத்தபடியாக அவளின் இல்வாழ்க்கையில் நுழையும் அடுத்த நிகழ்வுக்கான ஒருக்கங்களில் இருக்க அவள் மனமோ படபடத்து கொண்டிருந்தது.

மெல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்து கீழே எட்டி பார்த்தாள். மதி அவளின் தந்தையருடனும் சகோதரர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். ரகு ஏதோ சொல்ல அவன் தோளில் கையை போட்டு கலகலவென்று வாய் விட்டு சிரித்தவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். எவ்வளவு பெரிய தவறை செய்ய இருந்தேன் என்று அவள் மனம் வருந்தியது. கண்களை அவன் மேல் பதித்த வண்ணம் மனம் அன்று அவனுக்கு தொலைபேசியில் அழைத்தபோது நடந்ததை அசைபோட்டது.

மறு முனையில் அழைப்பு போய்க்கொண்டிருக்க பதற்றத்துடன் கைகளில் போனை பிடித்திருந்த மதுவிற்கு கைகளில் நடுக்கம் குறையவில்லை. போனை எடுக்க மாட்டாரோ என்று அவள் வருந்தும் போது மறுமுனை அழைப்பை ஏற்றது.

"ஹலோ " -மது

.......

"நான் மது பேசறேன்"- மது

.....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.