(Reading time: 26 - 52 minutes)

"ண்மைதான். என் மனச எனக்கு முழுசா புரிய வெச்சது அந்த நாட்கள் தான். என்னை மன்னிச்சிடுங்க." -மது

"மது நம்ம வாழ்க்கை ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லாம தொடங்கணும்னு நெனைச்சேனதனாலதான் இப்போவே எல்லாம் பேசிடலாம்னு முடிவு பண்ணுனேன். உனக்கு அந்த கிரணுக்கு என்ன ஆச்சுன்னு தெரிய வேண்டாமா  `மது.." மதி

"கிரண்...இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? " - என்று மது அடுத்தகட்ட அதிர்ச்சியுடன் கேட்க, , "எப்படியோ தெரியும் உனக்கு அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியனுமா வேண்டாமா" என்றான் மதி.

"அது தெரியறதால் எனக்கு என்ன ஆக போகுது மதி. அவரவர் பாவம் அவரரவர்க்கு உரிய பலனைத்தரும்“ என்றாள் மது மீண்டும் அவனை பற்றி யோசிக்க கூட விருப்பம் இல்லாமல். இப்போதும் அவன் அவளை தொட முயன்றதை நினைத்தால் அவளுக்கு அருவருப்பாக இருந்தது..

"உண்மைதான் மதும்மா. அவன் பாவத்தின் பலனை இறைவன் அவனுக்கு அப்போவே கொடுத்திட்டார். அன்னைக்கு நடந்த விபத்துல அவனுக்கு கழுத்துக்கு கீழ செயலிழந்து போய்டுச்சு.உன்னை போன்ற ஒரு பெண்ணுக்கு துரோகம் பண்ணுனதுக்கு அவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை அது " -மதி

""ஓஹ் அவனுக்கு தண்டனை கிடைச்சிருக்கணும். ஆனா இவ்வளவு பெரியதண்டனை . பாவம் அவனை பெற்றவர்களுக்கு இது எவ்வளவு பெரிய வலி வேதனை தெரியுமா மதி. எனக்கு தெரியும் தான் பெற்ற பிள்ளைக்கு ஒன்று என்றால் எவ்வளவு வேதனை படுவார்கள் என்று என் கண் முன்னால் என் அம்மாவும் அப்பாவும் பட்டதை கண்டு தெரிந்து கொண்டேன்." என்றவளை எண்ணி பெருமிதம் கொண்டான் மதி. அவனுக்கு தெரியும் இது தான் அவனின் மது என்று. இப்படி தான் அவளின் பதில் இருக்குமென்று.

“சரி மது இனி நோ அழுகாச்சி காவியம். பாஸ்ட் இஸ் பாஸ்ட். நாம ரெண்டு பெரும் மீண்டும் சேர அஸ்திவாரம் இட்ட இந்த நாளை கொண்டாடுவோம். எனக்கு உன்னை நெறைய காதலிக்கனும். இந்த அழுமூஞ்சி மதுவை இல்லை...புரிஞ்சுதா" என்றான்.

"என்னது அழுமூஞ்சியா " -மது

"இல்லையா பின்னே என் செல்ல பொண்டாட்டி,... இப்போ ஒன்லி ரொமான்ஸ் டைம் ஆனா நீ என்னவோ சோக கீதம் வாசிக்கிற " என்று கூறி சிரிக்க  மதுவின் முகத்தில் நாணம் குடி கொண்டது.

"மது "-மதி

"ஹ்ம்ம்"-மது

"என்ன என் பொண்டாட்டி முகம் ரோஜாப்பூ போல சிவந்துடுச்சோ... பாக்கணும் போல இருக்கே" -மதி

"ஹ்ம்ம் இங்க வாங்க பாக்கலாம்" என்று கூறி மது சிரிக்க,

"வந்த நல்ல தான் இருக்கும் ஆனா மேடம் முக தரிசனம் கிடைக்குமா " -மதி

"கிடைக்கும் கிடைக்கும் அதுக்கு மேலயும் கிடைக்கும் " -மது

"அதுக்கும் மேலான முத்தமா " என்ற மதியின் கேள்வியில் அவளின் உள்ளுக்குள் சிலிர்க்க,"ச்சீ அசிங்கமா பேசாதீங்க " என்று தன வெட்கத்தை மறைக்க அரும்பாடுபட்டாள். நல்ல வேளை அவர் எதிரில் இல்லை என்று மனம் நிம்மதியுற்றது.

"என்னது அசிங்கமா...அய்யயோ...நீ என்னமா இப்படி சொல்ற...உனக்கு கிஸ்ஸிங்கே அசிங்கமா...அய்யயோ மதி உன் கதி அதோ கதிதாண்டா... கல்யாணம் முடிஞ்சாலும் நீ பிரம்மச்சாரியா " என்று அவன் புலம்புவதை போல கூற, மதுவுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை, பேச்சுவாக்கில் அவளும் "சே சே அப்படி எல்லாம் இருக்க மாட்டிங்க" என்று சொல்லிவிட்டு பின் தன தவறை உணர்ந்து நாக்கை கடித்து கொண்டாள்.

ஆனால் மதியோ அவளை விடுவதாக இல்லை.

"அப்படி எல்லாம் இல்லைனா நீ என்னை எப்படி எல்லாம் கவனிச்சுக்குவ... எங்க மாமாகிட்ட சொல்லு பாப்போம் " -மதி

"என்னது மாமாவா ? அது யாரு ? "-மது

"எண்ணங்கம்மிணி இப்படி சொல்லி போட்டிங்கோ..நான்தானுங்கோ உங்க மாமனுங்கோ.... எனக்கும் உனக்கும் தானுங்கோ கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்கோ " என்று அவன் கொங்கு பாஷையில் சொல்ல இம்முறை வாய்விட்டு கலகலவென சிரித்தாள் மது. இதற்க்காகத்தானே இந்த சிரிப்புக்காகத்தானே அவன் அவளை சீண்டியது. அந்த சிரிப்பில் தன்னை தொலைத்திருந்தான் மதி. மது இன்னும் சிரிப்பை நிறுத்த முடியாமல் வயிறை பிடித்து கொண்டு சிரித்தாள்.

"மதி ....ஹஹஹஹ் ... யு ஆர் கிரேசி...ஹாஹாஹா..." -மது

"மது அப்படியே கொஞ்சம் பால்கனியில் வந்து நின்னு சிரியேன் " என்று மதி கூறவும் "ஏன் பால்கனியில் வந்து சிரிக்கணும் " என்று கேட்டாலும் அவள் கைகள் தன்னை போல பால்கனி கதவை திறந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.