(Reading time: 26 - 52 minutes)

"ப்பா எனக்கும் முதல்ல அபப்டி தான்பா இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணலியேஎனக்கு ஏனிந்த தண்டனை னு நிறைய நாள் அழுத்துருக்கேன். என்னால உங்களுக்கும் எவ்வளவு வேதனைனு கஷ்டப்பட்டுருக்கேன் பா. ஆனா எனக்கும் கொஞ்சம் காலதாமதமாக தான்ப்பா புரிஞ்சுது. இந்த உலகத்துக்கு சேவை செய்யற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காதுப்பா. ஒரு சிலர்க்கு மட்டுமே கிடைச்ச பாக்கியம் இது. அந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்கு கெடைச்சிருக்குப்பா.அதுவும் மதி மாதிரி ஒருத்தரின் துணையோடு நான் செய்ய போறேன். நான் நிஜமா சொல்றேன்பா. ஐ அம் ரியல்லி ஹாப்பி ப்பா " என்ற மகளை கண்டவருக்கு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

"அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் இதெல்லாம் எப்படிப்பா " என்று கேள்வியோடு பார்த்த மக்களிடம் நடந்தவைகளை கூறினார் சிவசண்முகம் .

"நீ ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்க் ஆனதுக்கு அப்பறம் ஒரு ரிப்போர்ட் மட்டும் ஹாஸ்ப்பிட்டலில் கலெக்ட் பண்ண மறந்துட்டீங்க வந்து வாங்கிக்கோங்கன்னு போன் வந்துச்சு. நானும் சரணையோ ரகுவையோ அனுப்ப நினைச்சேன். அப்பறமும் உனக்கு இனி எந்த மாதிரி ட்ரீட்மென்ட் கண்டின்யு பண்ணனும்னு கேட்கலாம்னு நானே ஹாஸ்பிடல்ப்போனேன். அந்த ரிப்போர்ட் கொடுத்த நர்ஸ் கிட்ட கேட்டப்போ தான் எனக்கு உண்மைதெரிஞ்சுது. அப்படியே நொறுங்கி போயிட்டேன் மா. என்னால இதை ஜீரணிக்கவே முடியல.டாக்டரை பார்தேன்ஏதாவது செய்ய முடியுமா னு கேட்டேன். ஒண்ணும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க. அது மட்டும்இ இல்லை இந்த விஷயம் உனக்கும் தெரியும்னு தெரிஞ்சுகிட்டேன். எங்கே எனக்கு தெரியும்னு நெனைச்சா நீ ரொம்ப வருத்தப்படுவியோன்னு தாம்மா இதெல்லாம்தை சொல்லலை.இதை  எல்லாம் நினைச்சு வருத்தப்பட்டப்போ தான் விச்சுவும் முரளியும்வந்தாங்க. அதுக்கப்பறம் நீ சென்னை போன. அடிக்கடி மதி இங்கேவந்துட்டு தான் இருப்பாரு. நேரடியா இல்லைனாலும் உன்னைப்பத்தி ஏதாவது ஒரு வகையில் தெரிஞ்சிக்கிட்டு போவாரு. அப்போவே எனக்கு கொஞ்சம் மனசுல பட்டுச்சு. அதுக்கு அப்பறம் நீ சரண் கல்யாணத்துக்கு இங்க வந்தியே. அப்போ முரளியும் மதியும் தோட்டத்துல பேசிட்டு இருந்தாங்க. அப்போ தான் உனக்கு இந்த விபத்து சாதாரணமா ஏற்படலை. அதுக்கு காரணம் அந்த அயோக்கிய நாய் அப்படினு. " என்று ஒரு கோபத்துடன் கூறியவர் அருகில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு தொடர்ந்தார்,

"அதுக்கு அப்பறம் நானும் மதியும் முரளியும் சேர்ந்து நிறைய பேசுனோம்.அப்பறம் ஒரு நாள் மதி போன் பண்ணினார். அவங்க வீட்டுல இந்த கல்யாணத்துக்கு பெர்மிசன் கெடைச்சிருச்சு அப்படினு சொன்னார். நானும் உணர்ச்சி வசப்பட்டு உன்னுடைய நிலையை பற்றி தெரிஞ்சும் அவங்க வீட்டுல ஒத்துக்கிட்டதுக்கு நன்றி சொன்னப்போ தாம்மா உங்க அம்மா கேட்டது. அந்த அதிர்ச்சியில் அவளுக்கு அப்போ ஹார்ட் அட்டாக் வந்துச்சு..." என்று சொல்லி முடிக்க, "அப்பா என்னால எவ்வளவு கஷ்டம் உங்களுக்கு சாரிப்பா... நான் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் சரியா ஹாண்டில் பண்ணிருக்கலாம் சாரிப்பா " என்று அழுதவளை அணைத்து கொண்டவர் "மது கண்ணா இப்போதானே தைரியமா பேசுன... நீயே அழலாமா. இனி நீ அழக்கூடாதுடா...நீ சந்தோசமா எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும். அதை பார்த்துட்டே நாங்க போயி சேர்ந்துருவோம் நிம்மதியா "என்றவரை கட்டிக்கொண்டு கதறி தீர்த்தாள் மது. அந்த இறைவன் அவளை புன்னகையுடன் நோக்கினான் அவளின் கடைசி கண்ணீர் இதுவென்று அவள் இனி அழப்போவதில்லை என்று.

இப்படி நாட்கள் செல்ல மது மட்டும் மதியின் பிடியில் சிக்காமல் இருந்தாள்.

அவனும் அவளை எப்படி எல்லாமோ வெளியே கூட்டி செல்ல முயன்று தோற்று விட்டான். இதில் திருமண உடைகளும் நகைகளும் வாங்கும் நாள் வர இரு குடும்பங்களும் சேர்ந்து ஒன்றாக சென்று முதலில் திருமண நகைகள் வாங்கி முடித்தனர். அதன் பின் பட்டு புடைவைகள் எடுக்க சென்றனர்.

முதலில் முகூர்த்த புடவை எடுக்க மதுவும் ஒவ்வொரு புடவையாக தோளில் போட்டு மதியிடம் காண்பிப்பதும் அவன் எல்லாவற்றையும் அருமை அருமை என்று கூறுவதுமாக இருக்க முற்றிலும் பொறுமை இழந்துதான் போனாள் மது.

அருகில் இருந்த மங்கலத்திடம் திரும்பி "அம்மா ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன் " என்று கூறி விட்டு மெல்ல எழுந்தவள் கைப்பேசியில் மதியிடம் வெளியே வருமாறு கூறிவிட்டு போனாள்.

அவனும் வெளியே வர "என நினைச்சுட்டு இருக்கீங்க நான் என்ன விளம்பர மாடலா... ஒவ்வொண்ணா போட்டு காட்டுனா டிங்கு டிங்குனு எல்லாத்துக்கும் மண்டை..." அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ் அவன் வசமானது. அப்படியே தன்னிலை மறந்து தோய்ந்து போனாள் மது இந்த எதிர்பாராத தாக்குதலில். சில நிமிடங்கள் கழிந்து அவளை விடுவித்தவனை நிமிர்த்து பார்க்க வெட்கம் விடாமல் அவளை ஓட செய்தது.

உள்ளே வந்தவளுக்கு ஏதோ அந்த  தளத்தில் தான் மட்டுமே இருப்பதை போலொரு பிரம்மை தோன்ற, அவளை கண்டு குறும்பு சிரிப்பு சிரித்தவன் அவளுக்கான முகூர்த்த புடவையை அவனே தேர்ந்தெடுத்தான்..

இப்படி சில பல கலாட்டாக்களுடன் நாட்கள் செல்ல இதோ இன்று மதியின் கையால் தாலியை பெற்று அவனின் மனைவியாகி இன்று மணியறை காண போகின்றாள்.

திவ்யாவும் பைரவியும் கேலி கிண்டல்களுடன் மதுவை அந்த அறையில் விட்டு செல்ல மெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். மெல்ல விழி நிமிர்த்தி பார்க்க அங்கே புன்னகையுடன் அவளை பார்த்தபடி இருந்தான் மதி. மெல்ல எழுந்து வந்தவன் அவளை கடந்து சென்று கதவை அடைத்து விட்டு அவளருகில் வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.