(Reading time: 26 - 52 minutes)

சில்லென்ற காற்று முகத்தை தழுவ விரித்து விட்ட கூந்தல் முகத்தில் பரவ அதை ஒரு கையால் ஒதுக்கியவாறு சிரித்து சிரித்து சிவந்து விட்ட முகத்துடன் வெளியே வந்தவள் வாசலின் அருகே ஏதோ வெளிச்சம் தெரியவும் பால்கனியில் இருந்த விளக்கை அமர்த்தினாள்.

வாசலின் வெளியே தன்னுடைய காரில் சாய்ந்த வண்ணமே நின்றிருந்தான் மதி காதில் அலைபேசியை பிடித்து கொண்டு.

அந்த நிலவின் ஒளியோடு போட்டி போடும் அளவுக்கு மதுவின் முகம் ஒளிர்ந்து போனது. அவளின் முகத்தில் தோன்றும் ஒவ்வொரு உணர்வினையும் மதியின் கண்கள் படம் பிடித்து கொண்டன. அங்கே வார்த்தைகள் தேவையாய் இருக்கவில்லை.கண்ணும்கண்ணும் பேசிக்கொண்டது.

மஞ்சள் நிற மலர் உன்னை நனைக்க தானடி

கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை

மின்னுகின்ற அழகுடன் குளிக்க தானடி

பிண்ணி பிண்ணி நடக்குது நதியின் அலை

அடடா பிரம்மன் புத்திசாலி

அவனை விட நான் அதிஷ்டசாலி

அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்

அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே

உந்தன்  கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது

அந்த அசைவுக்கு நடனங்கள் இணையிலையே

சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேரும் ஓரிடம்

கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்

பெண்ணெல்லாம் பெண் போல இருக்க,

நீ மட்டும் என் நெஞ்சை மயக்க

பூமிக்கு வந்தாயே தேவதை போலவே

ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன்

இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி

ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன்

இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி

பெண்ணே எந்தன் வானிலை  உன்னால்  மாறி  போனதோ

தரை கீழாக  ஏன்  ஆனதோ

தெரியாமல் என் நெஞ்சில்  நுழைந்து

அறியாத இன்பங்கள்  கலந்து

புரியாத  மாயங்கள் செய்தாய் ஏனடி

எத்தனை நேரமோ… ரோட்டில் பால்காரனின் சைக்கிள் பெல் அடிக்கும் வரை இப்படியே நின்றிருந்தனர் இருவரும். தோற்றத்தில் கேட்ட சைக்கிள் சத்தத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியவள் கடிகாரத்தை பார்க்க அது அதிகாலை 5 மணி என்றது.

"அய்யயோ விடிஞ்சிருச்சா " என்று அலறியவள் தன் கைப்பேசியை எடுத்து அவனை அழைத்தாள். அவள் முகம் பார்த்தபடியே அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தவன் "ஹ்ம்ம் " என்றான்.

"விடிஞ்சிருச்சு பா.. கிளம்புங்க இன்னும் கொஞ்ச நேரத்துல சித்தி வாசல் தெளிக்க வருவாங்க... அவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க" -மது

"ஹ்ம்ம்..." -மதி

"ப்ளீஸ் பா கிளம்புங்க " -மது

"ஹ்ம்ம் " -மதி

ஹலோ என்னங்க நீங்க ஹ்ம்ம் ஹ்ம்ம் னு ஏதோ ஹம்மிங் கொடுத்துட்டு இருக்கீங்க. கிளம்புங்க " -மது

"நீ கொடுக்க வேண்டியதை கொடு நான் கிளம்பறேன் " -மதி

"நான் என்ன கொடுக்கணும்... சீக்கிரம் சொல்லுங்க " என்று பதற்றத்துடன் பால்கனியில் இருந்து யாராவது வருகிறார்களா என்று கீழே எட்டி பார்த்து கொண்டே கேட்டாள்.

"நீ கீழ இறங்கி வந்து கொடுக்க முடியாது அங்கிருந்து அப்படியே ஒரு பிளையிங் கிஸ் கொடு பாப்போம் மாமாக்கு நான் கரெக்ட்டா கட்ச் பண்ணிக்கிறேன்." -மதி

"என்னது ...ச்சீ ச்சீ நான் தர மாட்டேன்" -மது

"அப்போ நானும் போக மாட்டேன். " -மதி

"பிலீஸ்ங்க வேண்டாமே" -மது

"முடியாது" -மதி

"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் " -மது

"ஹ்ம்ம் சரி ரொம்ப கெஞ்சற அதனால உனக்கு ஒரு கன்சேஷன் தரேன். நெஸ்ட் டைம் நம்ம ரெண்டு பெரும் எப்போ தனியா மீட் பண்ணுனாலும் சரி... நீ எனக்குஒரு முத்தம் தரணும்...அதுவும் நான் கேக்கற மாதிரி ஓகேயா?" என்று கேட்டவனிடம் இப்போது தப்பித்தால் போதும் என்று சரி என்று மது சொல்ல, அவனோ விடாக்கண்டனாக "என்னமா இப்போ தப்பிச்ச போதும்னு நெனைச்சு ஓகே சொல்றயா ... எனக்கு எப்படி வசூல் பண்ணனும்னு தெரியும் நான் வாங்கிக்கிறேன். இப்போதைக்கு நான் கொடுக்கறதை வாங்கிக்கோ " என்று கூறி அங்கிருந்து அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிவிட்டு கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.