(Reading time: 10 - 19 minutes)

 வங்க இத்தனையா பார்த்து தேடும் போது எனக்கே கொஞ்சம் அதில போய் எதும் சொல்ல கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு. ரெண்டு பேருல என் பேச்சை யாரும் கேட்பாங்க மாதிரியே தோண மாட்டேங்குதே. எனக்கும் நம்ம ரூபனுக்கு கொடுத்தா நல்லாயிருக்கும்னு தான் தோணுது. தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணி ஆனால், நான் இதை நான் சொல்லப் போனா அதை வச்சி இவங்க ரெண்டு பேரும் உங்க அண்ணா பேமிலினு தான நீ பேசுற, அதெல்லாம் சரி வராது அப்படின்னு எதையாவது நம்ம குடும்பத்தை குறைச்சு பேசிடுவாங்களோன்னு மனசுக்கு பயமா இருக்கு. ஒரு பக்கம் இந்த கல்யாணப் பேச்சு எடுத்து பிரச்சினை எதுவும் வரதுக்கு பதிலா இப்போ இருக்கிற மாதிரி நம்ம ரெண்டு குடும்பமும் ஒற்றுமையா இருந்துட்டு போயிடலான்னு தோணுது.

.......................

 ஏற்கெனவே இப்படியெல்லாம் யோசிச்சு நான் குழம்பிட்டு தான் இருக்கேன் அண்ணி. அவரு அனி விஷயத்துல என் பேச்சைக் கேட்பாரா இல்லையான்னு தெரியலை. ஆனாலும் நான் அவர் கிட்ட பேசிப் பார்க்கிறேன் அண்ணி"

அதன் பின் அவர்கள் பேசிய விஷயத்தைக் குறித்து எவரிடமும் அவர்கள் பேசவுமில்லை. அதைக் குறித்து கணவரிடம் பேச இன்று வரை வாய்ப்பும் அமையவில்லை.

 இப்போது அனிக்கா அவன் அலுவலகத்தில் பணி புரிய தன் கணவரே ஏற்பாடுச் செய்து தந்ததையும் , அதனால் மலர்ந்த ரூபனின் முகத்தையும் கண்டவர்க்கு என்னச் சொல்வது எனப் புரியவில்லை.பின்னொரு நாள் அவன் என் மகளை விரும்புகிறான் என உனக்குத் தெரிந்து இருந்தும் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கணவர் தன்னிடம் கேட்பாரோ என அவருக்கு உள்ளூர பயம் சூழ்ந்தது. 

 தனக்கு தெரிந்த விஷயத்தை, தான் இந்திராவுடன் உரையாடியதை தன் மனதிற்குள்ளேயே வைத்து மறைக்க அவர் முடிவுச் செய்தார்.

 ஏற்கெனவே எளிமையாக நடத்த முடிவுச் செய்திருந்த விழாதான். ஆனாலும், அன்று ரூபனுக்கு அன்று எல்லாமே மிகவும் விசேஷமாகத் தோன்றியது. தன்னுடைய வீட்டினர் , அத்தை வீட்டிலிருந்து வீட்டிலிருந்து தாமஸ் மற்றும் கிறிஸ் பின்னர் வருவதாகச் சொல்லி பெண்கள் மட்டும் வந்திருக்க, அம்மா அத்தையுடன் தன் மனம் கவர்ந்தவளும் கூட நின்றுக் கொண்டிருப்பதை அடிக்கடி மகிழ்ச்சி தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அடக்கி வாசி"

அவனருகே வந்து ஏதோ குனிந்து நிற்பது போல நின்ற ஜீவன் தான் அண்னனை அடக்கிக் கொண்டிருந்தான். "போடா" என்றவனாக இவனும் கஷ்டப் பட்டு பார்வையை வேறுப் பக்கம் திருப்பினான்.

திறப்பு விழா சிறப்பாக நடைப் பெற்றது. தினம் தினம் தரிசனம் தரவிருக்கும் தன்னுடையவளை நினைத்துக் கொண்டே கனவில் மிதந்தான் அவன். இந்த சந்திப்புக்கள் அவன் காதலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துமா? இல்லையாவென வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம்?

உன்னைக் காணத் தவித்த

 நாட்கள் முடிவுற,

 

ஏதோ தவம் செய்திருந்தேன் போலும்

 

உன்னை தினம் 

காணும் நாட்கள் அருகில் வர

 

ஏதோ தவம் செய்திருந்தேன் போலும்

 

உந்தன் முகத்தை,

முகபாவத்தை,

 

உந்தன் குறும்பை,

செல்லப் பேச்சுக்களை,

 

உந்தன் கோபம்,

செல்லச் சீண்டல்களை,

 

அத்தனையும் 

கண் குளிர

 

தினம் காண 

கிடைத்திருக்கும் 

 

இத்தருணம் குறித்தே என்னுள்ளம்

உரக்கச் சொல்லுதே

 

எதோ தவம் செய்திருந்தேன் போலும்

என்றோ தபம் செய்திருந்தேன் போலும்

 

என்னோடு 

நீ மட்டும் இருந்தால் போதும்

 

எப்போதும் , எப்போதும், எப்போதும்

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.