(Reading time: 11 - 21 minutes)

ழியெங்கும் வாயாடியபடி வந்து கொண்டிருந்த சதியை எதுவோ போல் பார்த்த இஷானும் தைஜூவும் சற்று நேரத்திலேயே அவளின் கலகலப்பில் கலந்து கொண்டனர்…

வீட்டிற்குள் நுழைகையில் புன்னகை மயமாய் வந்த மூவரையும் கண்டதும், பிரசுதி மற்றும் காதம்பரியின் முகத்தில் சந்தோஷம் நிறைந்திருந்தது…

“அம்மா நீங்க?...” என்றபடி தைஜூ காதம்பரியின் அருகில் செல்ல,

“வாங்க அங்கிள்…” என்றபடி இஷானும், சதியும் சிதம்பரத்தின் அருகில் சென்றனர்…

“அப்புறம் மாப்பிள்ளை… என்ன ஸ்பெஷல்?...”

“ஸ்பெஷல் நீங்க தான் அங்கிள் சொல்லணும்…”

பதில் சொல்லிவிட்டு லேசாக சிரித்த இஷானைப் பார்த்து சிரித்தார் சிதம்பரமும்…

“என்னங்க ஒரு போன் பண்ணி பாருங்க… அண்ணனை இன்னும் காணோம்…”

பிரசுதி மணியையும் வாசலையும் மாறி மாறி பார்த்தபடி, கணவரிடம் பேச,

“வர வேண்டாமா அங்க இருந்து இங்க?...” என்றார் அவரும்…

“அங்க ஸ்டார்ட் செஞ்சா இங்க வந்து நிக்கப்போகுது வண்டி… இதுக்கு இவ்வளவு நேரமா?...”

“நீ ஏன் சொல்லமாட்ட?.. டிராஃபிக்கில் வண்டி ஓட்டிப்பாரு அப்பதான் உனக்கு தெரியும்?...”

“ஆமா இவருக்கு மட்டும் ரொம்ப தெரியும்….” என பிரசுதி முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொள்ள, தட்சேஷ்வர் சிரித்தார்…

“இப்போ எதுக்கு சிரிக்குறீங்க?...”

“வேண்டுதல்ன்னு வச்சிக்கோயேன்…”

“என்னது?....”

உச்சக்கட்ட கோபத்தோடு பிரசுதி கேட்க,

“அட அங்க பாரு… நீயும் சிரிப்ப….” என சொல்ல, பிரசுதி கணவர் சுட்டிக்காட்டிய திசையில் பார்க்க, அவரின் முகத்திலும் தானாய் புன்னகை பூத்தது…

“வாங்கண்ணா… வாங்க… ஏன் அண்ணா இவ்வளவு நேரம்?...”

வீட்டிற்கு வந்த தன் அண்ணன் சோமநாதனை வரவேற்பும் கேள்வியுமாய் பிரசுதி விசாரிக்க,

“இல்லம்மா… கொஞ்சம் டிராஃபிக்… அதான்… லேட் ஆகிட்டு… வேற ஒன்னும் இல்லை…” என சோமநாதனும் பதில் கூற, தட்சேஷ்வர் பிரசுதியைப் பார்த்து மெல்ல சிரித்துக்கொண்டார்…

கணவரை வெளிப்படையாகவே முறைத்த பிரசுதி, “சரி நீங்க வாங்கண்ணா… உட்காருங்க… நான் போய் டீ எடுத்துட்டு வரேன்…” என்றபடி சமயலறைக்குள் நுழைய, அவரின் பின்னே காதம்பரியும் உதவிக்கு சென்றார்..

“சோமு… இஷான் நிச்சயம் முடிஞ்சது… கல்யாணம் அப்பா சொல்லுற நேரத்துல வச்சிக்கலாம்னு முடிவும் பண்ணியாச்சு… ஆனாலும் ஒரு வேலையும் ஆரம்பிக்காம இருக்குறது எனக்கென்னமோ சரியாபடலைடா…”

தட்சேஷ்வரின் வார்த்தையை ஆமோதிப்பவராய் சொன்னார் சிதம்பரமும்…

“சரியா சொன்னீங்க சம்பந்தி… நாங்களும் அது விஷயமா பேசிட்டு போகத்தான் இன்னைக்கு வந்தோம்…”

“ஆமா அண்ணா… கல்யாணத்தை எப்படி நடத்தணும்னு நீங்க ஒரு ஐடியா வச்சிருப்பீங்க… அது என்ன ஏதுன்னு கேட்டுட்டு போகலாம்னுதான் வந்தோம்…”

கைகளில் காபியை ஏந்தியபடி வந்து கொடுத்த காதம்பரியும் சொல்ல, பிரசுதியோ கணவரைப் பார்த்தார்…

“என்ன பிரசுதி அண்ணாவப் பார்க்குற?...”

“இல்ல காதம்பரி… மாமா சொல்லும்போதே கல்யாணத்துக்கான வேலையை ஆரம்பிச்சிக்கலாமே… அதுக்குள்ள எதுக்கு அவசரப்படணும்?...”

“நான் வேலையை இப்பவே ஆரம்பிக்கணும்னு சொல்லலைடி… என்ன பிளான், எப்படி செய்யப்போறோம்னு கேட்டு தெரிஞ்சிட்டு போகலாம்னு ஒரு ஆர்வத்துல தான் கேட்குறேன்…”

காதம்பரியின் பதில் பிரசுதிக்கும் சரி என்றே பட, அவர் மௌனமாக இருந்தார்…

“இதுல இவ்வளவு யோசிக்குறதுக்கு என்ன இருக்கும்மா?... என்ன செய்யப்போறோம்… ஏது செய்யப்போறோம்னு முன்னாடியே ப்ளான் பண்ணிக்கிறது நல்லது தானம்மா….”

தமையனின் வார்த்தைகள் கேட்டும் பிரசுதி மௌனமாக நின்றார்…

“உன் அண்ணன் பேசுறது உனக்கு கேட்குதா இல்லையா?...”

தட்சேஷ்வரின் அழுத்தமான கேள்வியில் நிமிர்ந்தவர்,

“என் பதில் இப்பவும் எப்பவும் ஒன்னுதான்… மாமாகிட்ட கேளுங்க… அவர் சரின்னு சொன்னார்ன்னா மேற்கொண்டு இஷான் கல்யாணத்துக்கான முன்னேற்பாடை பத்தி பேசலாம்…”

பிரசுதி முடிவாக தன் எண்ணத்தை சொல்லிவிட, அவரின் பதிலும் மற்றவரை யோசிக்க வைக்க,

“தாராளமா இஷான் கல்யாணத்துக்கான முன்னேற்பாடை பேசி முடிவெடுங்க எல்லாரும்….” என்றபடி வந்தார் பிரம்மரிஷி…

அவர் வரவும் அனைவரும் எழுந்துகொள்ள, பிரம்மரிஷியை அமர சொன்னார் பிரசுதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.