(Reading time: 22 - 44 minutes)

" சோ வாட், தப்பா பேசுனா என்ன தப்பு? கிராமர் மிஸ்டேக் இல்லாம பேசனும் சட்டம் இருக்க என்ன?  அது என்ன நம்ம தாய் மொழியா? தமிழயே தப்பா பேசி தான் கத்துகிட்டோம். எதையுமே கத்துக்க ஒரு டெஸ்டிங் எலி வேணும். இவர அப்படி நினைச்சுட்டு, இவர வச்சே கத்துக்கோ. அவ்வளவே தான்!! "

ஒரு நொடி அவளை இமைக்காமல் பார்த்தவள் “ ஆறு மாசம் முன்னாடி, அழுமூஞ்சி பிள்ளையா ஹாஸ்டல்ல வந்து நின்னு பேந்த பேந்த முழுச்ச மகதியா இது ”

" நீ டாபிக்கை  மாத்தாத "

" ஓகே..... இனிமேல் நான் ட்ரை பண்றேன் பாட்டி " என்று சொல்லி தலைக்கு மேல கைகளை கூப்பி சரண்டரானாள் இருதயாள்.

கதி தற்போது B.Sc Costume Design & Fashion Technology-யில் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி. இது அவளின் கனவு. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  நல்ல மதிபெண்களுடன் பாஸ் ஆனவளை, இன்ஜினியரிங் சேர்க்க விருப்பம் கொண்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் சண்டை போட்டு, கண்ணன் சங்கரணை கூட்டு சேர்ந்துக்கொண்டு, “ அவ தான் நல்லா கிறுக்குவாளே. அதுல தான் அவளுக்கு இன்ட்ரஸ்ட். எதையும் அவ மேல திணிக்காம, அவ இஷ்டப்படுறத படிக்க விடுங்க ” என்று ஒரு தர்ட் வேர்ல்டு வாரை நடத்தி அவளுக்காக வெற்றி கண்டான் ஹரி.

இந்த உதவிக்கு 'போனா போகுது, நன்றி போல் எதையாவது சொல்லி வைப்போம்' என்ற டோனில் மகதி " ரொம்ப தாங்.... " என்று தொடங்க,

" ஹேய் குண்டு போண்டா, ‘தாங்க்ஸ்’ சொல்ல போறியோ? ஹீஹீ. ஒரு சின்ன கிளாரிஃபிகேஷன். நான் உன்னை இன்ஜினியரிங்ல இருந்து காப்பாத்தல. இன்ஜினியரிங்கை தான் உங்கிட்ட இருந்து காப்பாத்திருக்கேன். ஆல்ரெடி ICU-ல இருக்குறதை, நீ ஒரேடியா பரலோகம் அனுப்பிட கூடாதுல. அஸ் அ இன்ஜினியர், எனக்கு இந்த அசம்பாவிதத்தை தடுக்குற கடமை இருக்கு. அதான்.. " என்று சீரியசாக பதிலளித்தான் ஹரி.

மகதியின் அருகிலிருந்தபடி இந்த கான்வெர்சேஷனைக் கேட்ட அனன்யா சிரித்துவிட, செந்தில் நாதன் பேப்பர் வாசித்தபடி அங்கிருக்க, பற்களை கடித்தபடி மகதி,

" நீ..ங்க நேர்ல வா..ங்க  ஹரி அத்தான். பேசிக்கலாம் " என்று முடித்தாள்.

ல்லாம் ஓகே! ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி என்று இருந்தால், அடுத்து தான் வந்து லாண்ட் ஆனது கியூட்டா ஷார்ட்டா ஒரு  ஃ பாட் மேன். பிகாஸ் மகதிக்கு காலேஜ் சீட் கிடைத்த இடம் அப்படி. அது வேறு எங்கும் இல்லை, சாட்சாத் நம்ம கோவை மாநகரே தான்.

மகதிக்கு  காலேஜ் சீட் கோயம்புத்தூரில் கிடைத்ததில் மகேஷ்வரிக்கும்  ராஜேந்திரனுக்கும் அவ்வளவு ஆனந்தம். அவளை தங்களோடு வைத்துக்கொள்ள எண்ணி, 'மகி எங்களோட தான் இருக்கணும்' என்று ஆர்டர் பிறப்பித்துவிட சங்கரனும் பார்வதியும் மகிழ்வுடன் சம்மதித்தனர். மகதியும் ஹாப்பி தான். ஹரி தான் அங்கு இல்லையே, 'இருந்தால் நல்லா இருக்கும்' என்று அவள் மனம் சொல்லாமல் இல்லை. 'முடிந்த மட்டில் நோ டிஸ்டர்பன்ஸ், எப்படியும் அவன் திரும்பி வருவதற்க்குள் செகண்ட் இயர் முடித்து தர்ட் இயர் ப்ராஜக்ட் இண்டெர்ன்ஷிப் என்று எஸ்‌ ஆகிவிடலாம். அதுவரை அத்தை, மாமா, கண்ணன் அத்தான், ஷணு அக்கா, முக்கியமா வர போற குட்டி பாப்பா எல்லாரோடும் ஜாலி தான்' என்று மனதில் பெரிய மனக்கோட்டை கட்டியவள் கனவில் லிட்டில் பாய் போட்டது அவளின் அம்மா வழி சொந்தம், ஒன்று விட்ட பெரியம்மா.

" வயசுக்கு வந்த பிள்ளைய, வயசு பையன் இருக்க வீட்டுல விடலாமா? என்னதான் அவன் இப்ப ஊர்ல இல்லாட்டியும் சீக்கிரம் வந்துருவான்ல. ஊர் உலகம் என்ன பேசும்? சொந்தமுனாலும் சிலது பாக்கணும். என் வீடும் அங்கதானே இருக்கு. நீ இங்க அனுப்பி விடு நானும் என் ரெண்டு பசங்களும் தான் இருக்கோம். நான் நல்லா பாத்துக்கிறேன் "

எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவெல்லாம் போட்டு தொனதொனக்க ஆரம்பித்தார் அவர்.

சங்கரன் இதற்கு சரியாக ரெஸ்பாண்ட் செய்யாததில் கடுப்பானவர், 'பார்வதி அவ பொண்ண அவ நாத்தனார் வீட்டுல விட்டு படிக்க விட போறாலாம்' என்று செய்தி பரப்பி அதை ஒரு பெரிய இஷ்யு ஆக்கிவிட்டார்.

'என்ன செய்யலாம், அந்த பெரியம்மா வீட்டிலே அவளை தங்க வைக்கலாமா?' என்ற பார்வதியிடம், " அய்யய்யோ!!!!!!!!! அந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் வீட்டில சாப்பிட படிக்க தூங்க டி‌வி பார்க்க சிரிக்க அழுகனு எல்லாத்துக்கும் ஷெட்யூல் போடுவாங்க. என்னால முடியாது,  நான் போமாட்டேன் " என்று ஒரே மூச்சாக மறுத்து அடுத்த பிரச்சனையை ஆரம்பித்தாள் மகதி.

'யப்பா சாமி, இந்த பிரச்சனையே வேண்டாம்டா' என்று யோசித்து கடைசியில் மகதியை ஹாஸ்டலில் தங்க வைக்க முடிவெடுத்தார் சங்கரன்.

அதற்கும் பிரச்சனை வராமலா ;)

இதை கேட்ட பார்வதி, விஜி, மகேஸ்வரி, ஷணு, அனு என்று வீட்டுபெண்கள் கூட்டணி போர் கோடி தூக்கி, சோடா பாட்டில், சைக்கிள் செயின் ஹாக்கி ஸ்டிக்குடன் போஸ் கொடுத்து மிரட்ட,

 “ அவளுக்கு  இந்த ஸ்டேஜ்ல தான் செல்ஃப் கான்ஃபிடன்ஸ் வேணும். சும்மா குண்டு சட்டிலயே குதிரை ஒட்டக்கூடாது. அவ இப்ப கொஞ்சம் இன்டிபேனட்டா இருக்கட்டும் ” என்று பல கோடி சமாதானங்கள் சொல்லி அந்த உள்கட்சி பூசலை சமாளித்தார்.

இப்படியாக மகதியை ஹாஸ்டல்லர் ஆக்கிவிட்டனர்.

பிளாஷ்பேக் ஓவர். பேக் டு ஸீன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.