(Reading time: 22 - 44 minutes)

" குட் கேர்ள் பொன்னு  நீ. ட்ரை ட்ரை ட்ரை அன்டில் யு சக்ஸீட். ஓகே வா? "

" அதுலாம் நாங்க ட்ரைகிறோம். நாளைக்கு ஃப்ரைடே. உன் பிளான் என்ன? அப்பாவா அத்தையா? " 

" தெரியலயேமா..... "

" போடிங்க, என்னனாலும் சீக்கிரம் சொல்லு. நான் ரெடி ஆகணும் "

" உனக்கு என்ன! சிவகங்கைக்கு ஈசியா ஓடிடுவ. என் கஷ்டம் எனக்கு தானே தெரியும் "

" ரொம்ப கஷ்ட படாத டியர். உனக்கு இந்த தடவ தர்ட் ஆப்ஷன் தரேன். எங்க வீட்டுக்கு வா. நான் தம்பி அம்மா தான். ரொம்ப ஜாலியா இருக்கும் "

" எனக்கும் ஆசை தான். நெக்ஸ்ட் லீவுல கண்டிப்பா வரேன். இப்ப எனக்கு ஒரு சொல்யூஷன் சொல்லு. எங்க வீட்டுக்கு போகனும் போல இருக்கு. பட், லாஸ்ட் டைம் தான் திருச்சி போனேன். அத்த அங்க வர சொல்லி கூப்டாங்க. வாட் ஷுட் ஐ டூ? "

" உனக்கு எங்க பிடிச்சு இருக்கோ அங்க போ "

" எனக்கு ரெண்டும் பிடிச்சு இருக்கே "

" ஆமாடி... திருச்சியும் கோவையும் ரொம்பபபப  பக்கம் பாரு. நீ வேணும்னா ரெண்டயும் கநேக்ட் பண்றபோல ப்ரிட்ஜ் கட்டி டிராவல் பண்ணு "

" போ லூசு பொன்னு "

" பேசாம நீங்க லண்டன் போறீங்களா? " என்று கண் சிமிட்டி கேட்டாள் பொன் இருதயாள்.

" கொழுப்பா! அந்த கருவாயனும் வர்ற வழிய காணோம். அநேகமா, நாங்க தான் வெக்கேசனுக்கு போகனும் போல "

" ஆஹான்.. நடக்கட்டும் நடக்கட்டும் "

" போ லூசு "

" நான் தானே! ஆமா ஆமா "

" மொக்க போடாம ஹாஸ்டல் கிளம்பு. சமோசா காலி ஆகிரிச்சுனா, யு காலி "

" வந்து தொல சாப்பாடு ராமி "

" நீ மட்டும் சாப்பிடவே மாட்ட பாரு.. போடி என் போட்டேடோ. போதும் போதும்னு சொல்லி பத்து சமோசா தின்ற ஆளு நீ. என்ன கிண்டல் பண்ற "

" நீ இப்படியே பேசிட்டு இரு. அங்க செம்பு உன் ஸைன் போட்டு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு ஓடபோறா பாரு "

" அய்யய்யோ!! செம்பு போய்டாளா? கொரங்கு சொன்னியா நீ! வா வா வா போலாமா " என்று அந்த பேச்சுக்கு குட்டியாக ஒரு எண்டு-காட் போட்டு அவளை இழுத்துச் சென்றாள் மகதி.

கதி இருதயாள்  இருவருக்குள்ளும் இருந்த நட்பு முடிவில்லா ஒரு அழகான புத்தகமாய் உருவெடுத்து இருந்தது. நாளுக்கு நாள் அதன் பக்கங்கள் நட்பிலே கூடிக்கொண்டே சென்றது.

கண்டதும் காதல் மட்டும் தானா வரும்? நட்பும் கூட அது போல் தானே. அறிமுகம் இல்லாத இடத்தில், தனித்து நிற்கையில்  உண்டாகும் கிலி உணர்வு. கண்ணை கட்டி காட்டிற்குள் விட்டது போல் உண்டாகும் நடுக்கம். இதை உணராதவர் தான் யார்? ஆனால் அப்பொழுது கிடைக்கும் நட்பு கரம், அறிமுகமற்ற ஒருவரின் அந்த சின்ன சிரிப்பில் அப்பொழுது கிடைக்கும் பலம் தான் எவ்வளவு பெரிது.

அன்றும் அது போல் தான். உறவுகள் சூழ்ந்து இருந்தவள், தனித்து நிற்க எவ்வளவு கஷ்டப்பட்டாள். 'திரும்ப வீட்டிற்கே  போய் விடலாம்' என்று எத்தனை நாள் எண்ணி இருப்பாள். திக்கற்று நின்றவளுக்கு திசைகாட்டி கூட்டி செல்ல வந்தாள் இருதயாள்.

மகதிக்கு நம்பிக்கையாய் வந்து, அந்த சூழ்நிலையில் அவளுக்கு யாதுமாய் நின்றவள். யாரென்று தெரியாமல் வந்தவள் மகதியின் பின்புலம் தெரிந்து கொஞ்சம் விலகவும், மகி விடாமல் அவளை தன் நட்பு வட்டத்தில் வைத்து பூட்டிவிட்டாள்.

" ன்ன யாரு இவ்ளோ வெயிட் தூக்க சொன்னா? லூசா நீ, சொன்னா நான் போய் எடுத்துட்டு வர மாட்டேனா? பாரு எப்படி மூச்சு வாங்குதுணு! "

" இதுல என்ன இருக்கு விடுங்க, கொஞ்சம் வேகமா நடந்து வந்தேன். அதான் லைட்டா மூச்சு வாங்குது "

" டாக்டர் உன்ன ஸ்ட்ரைன் பண்ண கூடாதுணு எவ்ளோ அட்வைஸ் பண்ணாங்க. நீ ஏன் ஷணு இப்படி இருக்க? "

" இப்படினா எப்படி? "

" அப்ப அப்ப ரொம்ப வேலை பார்க்குற, வெயிட் தூக்குற. இப்ப கூட பாரு.. எவ்ளோ வெயிட் தூக்கிட்டு வர "

" எது இந்த ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலும் ரெண்டு புக்கும் உங்களுக்கு வெயிட்டா? "

" ஆமா அப்பறம் இது வெயிட் இல்லயா? "

" கடவுளே!! ஏங்க இப்படி இருக்கீங்க.. அத்தை அம்மா அக்கா கூட எனக்கு இவ்ளோ ரூல்ஸ் போடமாட்டாங்க போல. என்னை  போட்டு படுத்துறீங்களே " பரிதாபமாக கேட்டாள் ஷண்மதி 

" ஹேய் என் பேபிய நான் தானே பாத்துக்கனும். உனக்கு ரூல்ஸ்ஸே தெரில ஷணு " என்று விடாமல் அவளிடம் வம்புக்கு நின்றான் கண்ணன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.