(Reading time: 22 - 44 minutes)

" பொன்னு " என்று பல்லை கடித்து அடுத்த பஞ்சாயதுக்கு ரெடி ஆனவளை தடுத்து,

“ ஹா ஹா.... நீங்களும் வாங்கமா உங்களயும் பஸ் ஸ்டண்ட்ல விட்டுறோம் ” என்று அழைத்து சென்றார் ராஜேந்திரன்.

அவர்களை அனுப்பிவிட்டு, இவர்கள் வீடு வந்தப் பொழுது வீட்டில் அனைவரும் ப்ரெசெண்ட்.

இவளை பார்த்த அடுத்த நொடி ஆரம்பித்தது சரவெடி.

" வாங்க வாங்க வாங்க மேடம், எப்படி இருக்கீங்க? " மகேஸ்வரி தான் ஒபெனிங் செர்மனி.

" அத்தை " என்று ஓடி சென்று கழுத்தை கட்டிக்கொண்டாள் மகதி.

" எடுடி கைய "

" வொய் அத்தை, மகி பாவம்லா. ஒன் மன்த் கழிச்சு உங்கள பார்க்க வந்தால், இப்படி சொல்றீங்களே " 

" ஆமா, ரொம்ப பாசம் இருக்கப்போய் தான் சொல்லாம ஊருக்கு ஓட பார்த்தியோ? "

" என்னத்த நீங்களும் இப்படி பண்றீங்க! நான் தான் அத்தான்ட சொன்னேனே "

" உங்க அத்தான்ட்ட மட்டும் தான் மொபைல் இருக்கோ. அவர் எடுக்கலனா எனக்கு பண்ணலாம், இல்ல மதிக்கு பண்ணி சொல்லலாமே "

" அப்படி கேளுங்க அத்தை " மாமியாருடன் கூட்டு சேர்ந்தாள் ஷண்மதி.

" யு டூ அக்கா! " நாடக பாணியில் சொன்னாள் மகதி.

" ஆக்டிங்க குறை. ஃபர்ஸ்ட் என்குயரிய முடி "

" நீ விடு மதி. அவங்க தான் பெரிய மனுஷி ஆகிட்டாங்களே! நாம சொல்லி கேட்கவா போறாங்க "

" நிஜமாவே நிஜமாவே பெரிய பெரிய சாரி அத்தை. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். கண்ணத்தான் மேல பிராமிஸ் "

அதுவரை அமைதியாக இருந்த கண்ணன் இதை கேட்டு தான் ஆக்டிவ் மோட்க்கு மாறினான் என்று சொல்ல வேண்டியது இல்லை.

" என்ன எதுக்கு அம்மு இதுல இழுக்குற? "

" ம்‌ம்‌ம்... என்ன மாட்டிவிட்டுட்டு, இப்போவும் பேசாம, சப்போர்ட் பண்ணாம இருக்கீங்களே அதுக்கு "

" இதை எல்லாம் கேட்க மாட்டியா ஷணு!  என்ன பொண்டாட்டி நீ!! "

" பாவம் சின்ன பொண்ணு. ஆசை படுறா விடுங்க "

" அவ ஆசை பட இது என்ன குச்சி மிட்டாயா? உன் புருஷன் உயிர்மா உயிர்!! "

" ஷு.. என்ன சத்தம் இங்க..... அத்தை நான் தான் சரண்டர் ஆகிட்டேன்ல. கொஞ்சம் சிரிங்களேன் பிளீஸ்...... " என்று கெஞ்சியவள், பத்து செகண்டிற்கு பின் " ஸோ ஸ்வீட் அத்தை சிரிச்சுடீங்க " என்று கட்டிக்கொண்டாள்.

" ஹேய், நான் எங்க சிரிச்சேன்? "  புரியாமல் கேட்ட மகேஷ்வரியிடம்,

" உங்களுக்கு அழகு, சிரிச்ச முகம் அத்தை "

" அய்யோடா, ரொம்ப குளுருதே..  " என்று அவர் சிரிக்க,

" வாங்க வாங்க. எனக்கு பசிக்குது. சீக்கிரம் உள்ள போகலாம் "

தன்னை  பிடித்து இழுத்துக்கொண்டு போன மகதியின் கையில் நவதானியங்கள் நிறைந்த பௌல்லை கொடுத்து அனுப்பி வைத்தார் மகேஷ்வரி.

" நவராத்திரி முடிஞ்சு மூணு வாரம் ஆச்சு அத்தை. வரும்போது எல்லாம் இப்படி பயறு தானியம்னு கொடுத்து பயம்புடுத்துறீங்களே " என்று குறைபட்டுக் கொண்டாள்.

" இதுதான் புரோட்டின். பேசாம சாப்பிடு "

" ம்‌ம்‌ம்....கொடும. ஆமா நம்ம வீட்டுல எப்ப கலர் ரைஸ் போடுறதா ஐடியா? "

" பிள்ள எவ்ளோ நியாபகம் வச்சு இருக்கு... "

" அட போங்க பா "

" ஒம்பதாம் மாசம் வளகாப்பு பண்ணலாம்னு பேசி வச்சு இருக்கோம் டா " என்றார் மகேஷ்வரி.

" வொய் வொய்? இப்ப அக்காக்கு செவென்த் மன்த் தானே. இப்ப பண்ணலாம்லா "

" அதுலாம் அப்பறம் பார்த்துகலாம். இப்ப நீ சாப்பிடு " என்று பல்லை கடிக்க ஆரம்பித்தான் கண்ணன்.

" என்ன அத்தான் கடிக்கிறீங்க? "

" ஹி ஹி, ஒண்ணும் இல்லயே "

" அப்பத்தா அடிக்கடி சொல்லுவாங்க. பையன்னா சீக்கிரம் பிறந்துறுமாம் "

" எனக்கு பையன்லாம் இல்ல. பொண்ணு தான் "

" அத எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்க சொல்றீங்க? "

" நிறைய சீனியர் சிட்டிசன் வச்சு டெஸ்ட் பண்ணியச்சு "

" வாட்டெவர் இட் இஸ், அக்காக்கு இப்ப வளகாப்பு பண்ணுனா என்ன.... ? என்னக்கா இதுலாம் கேட்க மாட்டீங்களா? "

" என்னை ஒன்னும்  கேட்காத மகி. உன் அத்தான்டயே பேசிக்கோ "

" இப்ப வளக்காப்பு வேணாம். நைன்த் மன்த் பாத்துக்கலாம். டாட் " நழுவினான் கண்ணன்.

" நோ வே,  இப்ப பண்ணா உங்களுக்கு என்ன ப்ராப்ளம்? "

" அதுலாம் அப்படிதான் "

" என்ன அப்படிதான்? " விடாமல் மகதி கேட்க,

" விடு கண்ணா, அவ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குல. அது அது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும். நான் சம்பந்தி வீடுகாரங்கட்ட பேசுறேன் " என்று முடித்தார்  மகேஷ்வரி..

Life is Nothing

                               Without Love

                                                                                …….. But ” Nothing”  is simpler.

சண்டைகள் தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.