(Reading time: 22 - 44 minutes)

" கூல்டா அமுலு. டண்டட்டைன்...... இது தான் என் சாதனை " என்று இவ்வளவு நேரம் தனக்கு பின்னால் மறைத்து வைத்த பௌல்லை தூக்கி மகி முகதுக்கு நேராக நீட்டினாள்.

" அடிப்பாவி என்னடி இது? " என்று மகதி அலற,

" இது தெரியாத உனக்கு!  யு புவர் மகி, திஸ் இஸ் கால்ட் நூடுல்ஸ் "

தன் பொறுமை சற்று பார்டர் தாண்ட, " அடிங்க, அது தெரியுது. எங்க இருந்து சுட்டுட்டு வந்த? "  என்று செம்புவின் காதை கையாலயே கழட்டினாள் மகி.

" ஆஆஆஆஆஆ..... வலிக்குதுடி விடுடி.. வெள்ள வாத்து இது சுட்டதுல்லாம் இல்ல. கௌரவமா ராக்கிங் பண்ணி வாங்கிட்டு வந்து இருக்கேன். ம்‌ம்‌ம்... சீக்கிரம் சீக்கிரம் வாய திறங்க உங்களுக்கு ஊட்டி விட்டுட்டா என் வேலை ஓவர் "

" அடியே!!!! " என்று இருவரும் கோரசாக கத்த....

" காத்தாதீங்கடி, நான் மேல ஸ்டோர்க்கு போனேனா, நம்ம தர்ட் ஃபுளோர் லெஃப்ட் கார்னர் சீனியர் ரூம் இருக்குல்ல, அங்க கமகமனு நூடுல்ஸ் ஸ்மெல்வந்துச்சு. நான் லைட்டா எட்டி பார்த்தேனா, அங்க நம்ம தயிர் சாதம் திவ்யாவ காவலுக்கு வச்சுட்டு சீனியர்ஸ்லாம் கீழ போய்ருந்தாங்க. நூடுல்ஸ் சாப்பிட ஆசை வேற வந்துட்டு. அடிமை வேற சிக்கிடுச்சு. சும்மா இருக்க முடியுமா? அதான் இண்டக்ஷன் ஸ்டவ் வச்சு டெய்லி சமைச்சு சாப்பிடுறேனு வர்டென்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணி சீனியர்ஸ்சோட சேர்த்து உன்னையும் மாட்டி விட்டுருவேன் அது இதுன்னு சொல்லி தயிர் சாதத்த பயம்புடுத்தி உழச்சு வாங்கிட்டு வந்தது இது " என்று கூறியவளை  இரு பக்கமும் நின்று டின்னு கட்ட ஆரம்பித்தார்கள் மகதியும்  இருதயாவும்.

" அய்யய்யோ!!  மம்மி டாடி தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி பெரியம்மா பெரியப்பா வலிக்குது விடுங்கடி "

" நாங்களும் பக்கத்துல தாண்டி இருக்கோம். எங்களுக்கு வராத ஸ்மெல் உனக்கு மட்டும் எப்படி வருது "  என்று அந்த அதிரடி சீன்லயும் இருதயா டௌட் கேட்க,

" அவள் மோப்ப சக்தி பத்தி உனக்கு இன்னும் ஒழுங்கா தெரியல " என்று செம்புவை புகழ்ந்துக் கொண்டே போட்டுத் தாக்கினாள் மகி.

" சரி விடுடா, வாங்க நாம நூடுல்ஸ் சாப்பிடலாம் " என்று செம்பு மறுபடியும்  எழ, அவளை  அடுத்த ரவுண்ட் டின்னு கட்ட இருவரும் நெருங்க, அதற்குள் அறை கதவு தடதடத்தது. யாரென்று சென்று பார்த்தால்....... அந்த தர்ட் ஃபுளோர் சீனியர் ரேஷ்மி.

" எங்க அந்த குரங்கு? " என்று சற்று வேகமாக அறைக்குள் நுழைந்தவர் சுற்றி முற்றி செம்புவைத் தேட, அவரை கண்டவுடன் அறை கதவின் பின்னால் பல்லி போல் ஒட்டி மறைந்து நின்றவளை பிடித்து இழுத்து,

"ஏன்டி உனக்கு வேணும்னா வேணும்றத எப்பயும் போல வந்து எடுத்துக்க வேண்டி தானே. எதுக்கு திவ்யாவ மிரட்டுன? அவ அழுது அங்க ஒரே கூட்டம் லூசு " என்று உரிமையாய் திட்ட தொடங்கினார்.

" ஐய்யோ அது நான் இல்ல அக்கா. வேற யாரோ "

" அப்பறம் எதுக்கு அவள் அழுறா? "

" நான் மிரட்டல்லாம் இல்லக்கா. எப்பயும் போல எடுத்துட்டு போக தான் வந்தேன். பட் நீங்க காவலுக்கு வச்சு இருந்த தயிர் சாதம் உங்கிட்ட மாட்டி விடுவேணு என்னை மிரட்டுச்சு. அதான் அவளை சும்மா ஓட்டுனேன் "

" நல்லா வருவடி நீ..... சரி போய் அவள சமாதானபப்படுத்து போ " என்று அவளை வலுக்கட்டாயமாக  மூவரும் சேர்ந்து அனுப்பிவிட்டனர்.

அவள் வரும்வரை சிறிது நேரம் அவர்களின் அறையில் இருந்தாள் ரேஷ்மி.

" என்னக்கா ஊருக்கு கிளம்பலயா? " என்ற மகதிக்கு,

" அக்காக்கு  ஹைதராபாத்லாம் ஊட்டி மாதிரி தோணுறப்ப பறந்துருவாங்க " என்று முந்திக்கொண்டு பதில் வந்தது இருதயாவிடமிருந்து.

" ஓய் கோல்ட் ஹார்ட் என்ன கொழுப்பா??.. லாஸ்ட் வீக் தானே போனேன். இனி செம் லீவுல தான். நிறையா வேல கிடக்கு "

" ஆமா ஆமா, அக்காக்கு நைட் கால்லாம் நிறையா பேசணும் "

" வாத்து, ஐ ஆம் யுவர் அக்காடி. கொஞ்சம் பார்த்து ஓட்டு. ஃப்யூச்சர்ல நானும் உங்கள ஓட்டுவேன். அப்போ ஓடக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன் "

" அத அப்ப பத்துக்கலாம். உங்க எங்கேஜ்மெண்ட் எப்போ? அத சொல்லுங்க ஃபர்ஸ்ட் "

" இன்னும் டேட் பிக்ஸ் பண்ணல. மே பி, இன்னும் டூ மன்த்ஸ்ல இருக்கும். கண்டிப்பா எல்லாரும் வரணும் "

" அப்போ  மேரேஜ்? "

" அது டிகிரி வங்குனதுக்கு அப்பறம் "

" சூப்பர்க்கா....அண்ணாவ கேட்டேனு சொல்லுங்க "

" அடிங்க நான் தரமாட்டேன் அது என் சொத்து...... "

" அய்யோடா.... ரொம்பத்தான். எங்க அண்ணா ரொம்ப நல்லவங்க "

" ஓகே ஓகே, பாசமலர்கள் விசாரிச்சாங்கனு சொல்லிடுறேன். நீங்க இப்போ சீக்கிரம் கிளம்புங்க. இன்னைக்கு ட்ராஃபிக் வேற ஜாஸ்தி. நான் போய் செம்ப சீக்கிரம் அனுப்புறேன் " என்று ரேஷ்மி சென்றுவிட, இவர்கள் இருவரும் கிளம்பி நம்ம செம்பு கம்பியின் உடைமைகளையும் பேக் பண்ணி அவளையும் இழுத்துக் கொண்டு கேட் பாஸ் வாங்க வைட் பண்ணின சமயம் வந்தது அந்த ஹாஸ்டல் ஒலிப்பெருக்கி அழைப்பு.

“ மகதி, ஃபர்ஸ்ட் இயர் B.Sc costume design and fashion விசிடர்ஸ் போர் யு ”

இப்ப தான் இந்த இமய மலையை கஷ்டப்பட்டு இழுத்துட்டு வந்தோம். யாருடி இது புதுசா...??  அப்பாவ வர சொன்னியா? என்ற இருதயாவிடம், 'இல்லை' என்று மறுப்பாக தலையசைத்தாள் மகதி.

" மாமாக்கு கால் பண்ணி சொல்லிட்டேல? "

" இல்லயே "

" அப்போ?? "

" வாட்ஸ்அப் பண்ணேன் "

" அட குரங்கு, மாமாட்ட சொல்லலையா.. அப்ப மாமாவா தான் இருக்கும். போ, போய் டோஸ் வாங்கு "

" மாமா வர லேட் ஆகும். இது யாருனு தெரிலயே " என்று அவள் யோசித்து கொண்டு இருக்கும்பொழுதே,

" மகதி யுவர் அங்கிள் இஸ் வெயிட்டிங் போர் யு போர்  லாங் டைம். கம் பாஸ்ட் " என்ற அடுத்த அழைப்பு.

" சொன்னா கேக்குறீயா? சீக்கிரம் போ " என்று இருதயா துரத்த, அரக்க பறக்க ஓடி மகதி  கீழே வந்து பார்த்தால், காத்து கிடந்தவர் சாட்சாத் ‌ ராஜேந்திரனே தான். அவர் முகமே அவர் கோபத்தை காட்டியது.

" வாங்க மாமா "

" பெரிய மனுஷி கிளம்பிடீங்க போல "

" இல்ல மாமா. செவன்க்கு பஸ் அதான்.... "

" ஓஹோ, அதான் சொல்லாம கிளம்புறீங்களோ? "

" ஐயோ இல்ல மாமா. நான் கால் பண்ணேன். பட் உங்கள ரீச் பண்ண முடியல. அதான் பெரிய அத்தானுக்கு வாட்ஸ்அப் பண்ணேன் "

" ம்‌ம்‌ம் அப்பறம் "

" ம்கூம் மாமா.. எனக்கு வீட்டுல எல்லரையும் பாக்கணும் போல இருக்கு. இந்த டைம் வீட்டுக்கு போய்ட்டு நெக்ஸ்ட் வீக் அத்தைய பாக்க வரேனே பிளீஸ்ஸ்‌ஸ் "

" அத்தை மட்டும் தான் வேணும் நாங்கலாம் வேணாம்ல "

" அச்சச்சோ அப்படிலாம் இல்ல மாமா. நீங்களே இப்படி சொன்னா என்ன யாரு புருஞ்சுப்பா? " என்று முகத்தில் அத்தனை சோகத்தையும் பொய் பூச்சு செய்தவளை ரசித்த ராஜேந்திரன்,

" ஊருக்கு எப்படி போறீங்க மேடம்? "

" பஸ்ல மாமா "

" டிக்கெட் எங்க? "

" இதோ " என்று தனது ஹாண்ட் பேக்கில் இருந்து எடுத்து காட்டியவளிடமிருந்து நொடி பொழுதில் அதை வாங்கி, அவள் கண்முன்னே  நிதானமாக கிழித்து  குப்பையில் போட இடம் தேடியவரின் பின்னால் இருந்து,

" அப்பா அப்பா.. வெய்ட். அதை என்கிட்ட கொடுங்க. நான் டஸ்ட்பின்ல போடுறேன் " என்று பவ்யமாக அதை வாங்கிக்கொண்டாள் செம்பு.

" வாங்கப்பா நல்லா இருக்கீங்களா " -இருதயா

" நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க? "

" நாங்க நல்லா இருக்கோம்ப்பா " -செம்பு

" நீங்க தான் இவளுக்கு ஊருக்கு போக ஐடியா கொடுத்தவங்களா? "

" ஐய்யையோ!!  நாங்க ஒண்ணும் பண்ணலப்பா. இது இவ பிளான் தான். அப்ப கூட உங்கட்ட சொல்லியாச்சானு கேட்டதுக்கு ஆமானு சொல்லிட்டு, இப்ப வாட்ஸ்அப் பண்ணிட்டேனு சொல்லுறா " போட்டுக்கொடுத்தாள் இருதயா.

 " அடபாவிங்களா நான் தான் டி உங்க ஃப்ரெண்ட். கொஞ்சமாவது நியாபகம் வச்சுட்டு மாட்டிவிடுங்க டி "

" அதுனால தான் லைட்டா மாட்டி விட்டோம் "  என்ற செம்புவிடம்

" நீ பேசாத, எல்லாம் உன்னால தான்.  ஒழுங்கா கிளம்பாமல் பஞ்சாயத்த இழுத்துட்டு இப்ப நியாயம் பேசுற செம்பு கம்பி ‌!! "

" தோட, இப்ப எதுக்கு இந்த வெட்டி பேச்சு? அப்பா இவள சீக்கிரம் கூட்டிட்டு போங்க. இனிமேல் இவள் உங்கட்ட சொல்லாம போகமாட்டாள். மகிக்கு நாங்க கியாரேண்டி "  முடித்தாள் செம்பு.

" நீங்களும் வீட்டுக்கு வாங்களேமா? "

" உள்ள வச்ச டிக்கட்டை வெளில எடுத்துடாத பொன்னு, இல்லனா நம்மளோடதும் காலி " என்று சின்னக்குரலில் சொன்ன செம்புவின் காலில் ஒரு மிதி கொடுத்தபடி,

" இல்லப்பா வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு. செம்பு அழுக்கு மூட்ட கப்பு வேற தாங்கல. வாஷிங் மெஷின்லயும் போட மாட்டேங்குறா. எங்களையும் போட விடாம படுத்துறா. ஹாஸ்டல காப்பாத்தவாவது இவள நான் இழுதுட்டு போகணும் " என்று வாரினாள் இருதயா. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.