அதன் பின் அவனை சமாதானப்படுத்த அவள் எவ்வளவோ முயற்சித்தும் அதற்கான சந்தர்ப்பம் அமைந்திடவே இல்லை அவளுக்கு கொஞ்சமும்…
இரவு நேரத்தில், பிரம்மரிஷி சொல்லிபடி தலையணைக்கடியில் அந்த ஆடையை அவன் வைத்த போது தான் நினைவு வந்தது தன் கைகளில் காலையில் குருதி வழிந்ததென்று…
கையை திருப்பி திருப்பி பார்த்தும் காயம் பட்டதற்கான எந்த அறிகுறியும் அதில் தென்படவில்லை கொஞ்சமும்…
மேற்கொண்டு குருதி ஆராய்ச்சியில் ஈடுபடவும் அவனுக்கும் விருப்பமில்லை… மெல்ல மெத்தையில் விழுந்தான்…
காலையில் தன் கோபத்தில் சிலையாக நின்றிருந்தவளின் முகம் கண்முன்னே வந்து செல்ல, தாங்க முடியாது கண்களை மூடிக்கொண்டான் ஜெய்….
அவன் கண் மூடியதும் அதற்காகவே காத்திருந்தது போல், அவனது மனக்கண்ணில் காட்சிகள் விரிந்தது…
நாசியை துழாவியபடி நறுமணப்பூக்கள் ஊஞ்சல் கயிற்றின் மேல் முழுவதும் பரவியிருக்க, அதற்கு வலிக்காதவண்ணம் பிடித்துக்கொண்டு தங்க நிற சரிகையில் நெய்த ஆடையை உடுத்தியிருந்தாள் சதி…
தன்னருகே அமர்ந்திருந்தவனின் மீது பார்வையை செலுத்தியவள், மெதுவாக தன்னவனைப் பார்க்க, ஜெய் சிரித்தான்…
தன் தோள் மீது தலைசாய்த்தவளை தன்னுடன் சேர்த்து சாய்த்துக்கொண்டு மெல்ல அந்த ஊஞ்சலை மெல்ல ஒரு கால் ஊன்றி ஆட்டிவிட்டுக்கொண்டிருந்தான் ஜெய்…
முகமெங்கும் பூரிப்பும், வெட்கமும், சிணுங்கலுமாய் சதி இருக்க, அவளின் நாணத்தை ரசித்தபடி அவளையேப் பார்த்திருந்தான் ஜெய்….
புன்னகையுடன் அவனது விழிகள் மெல்ல மூடிக்கொள்ள,
இங்கே ஜெய்யின் விழிகள் வேகமாய் திறந்தது…
சட்டென எழுந்து அமர்ந்தான் ஜெய் விரைந்து…
இதுநாள் வரை அவன் இப்படி ஒரு காட்சியை கண்டதில்லை… அவனுக்கே அது ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தர, செய்வதறியாது அமர்ந்திருந்தான் அவன்…
பின் என்ன நினைத்தானோ, தலையணைக்கடியில் இருந்த அந்த சிகப்பு நிற ஆடையை கைகளில் எடுத்து வருட துவங்க,
அறையில் தூங்கிக்கொண்டிருந்த சதியின் முகத்தில் இருந்த கற்றைக்கூந்தல் நகர்ந்தது…
“ம்ருத்யூ……….” என்ற சிணுங்கலோடு அசைந்து படுத்துக்கொண்டவள், பட்டென எழுந்து கொண்டாள்….
அறையை சுற்றி முற்றி நோட்டம் விட்டவள், அங்கே தன்னையும், உறங்கிக்கொண்டிருந்த தைஜூவையும் தவிர வேறு யாரும் இல்லாததை கவனித்தாள்…
“அவர் இங்க?........” என மனம் கேள்வி கேட்க, விடையை தான் பாவம் அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை…
“ம்ம்ம்…” என்ற வருத்தத்தோடு, அவள் படுத்துக்கொண்டு கண் மூட, அவள் விழிகளுக்குள் வந்திருந்தான் ஜெய்…
தானாகவே அவள் இதழ்கள் விரிய, அங்கே ஜெய்யின் முகத்தில் புன்னகையும், சற்றே வெட்கமும் வந்திருந்தது அழகாய்…
{kunena_discuss:1001}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.